மைதா கச்சாயம்

தேதி: February 27, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

மைதா- 1/2 கிலோ,
ரவை - 1/4 கிலோ,
வெல்லம் - 3/4 கிலோ,
ஏலக்காய் - 5,
எள்ளு - 1 ஸ்பூன்,
பொட்டுக்கடலை - 3 ஸ்பூன்,
தேங்காய் - 1/2 மூடி,
எண்ணெய் - சுடுவதற்கு.


 

ரவை, மைதாவை கலந்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பொட்டுக்கடலையை ஒன்று இரண்டாக பொடிக்கவும்.
எள்ளை கழுவி தோலை தேய்த்து எடுக்கவும்.
ஏலக்காயை பொடி செய்யவும்.
தேங்காயை துருவி வாசம் வரும் வரை வறுக்கவும்.
வெல்லத்தை தட்டி, 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து வடி கட்டவும்.
ஊற வைத்த மாவுடன் ஏலக்காய், எள்ளு, பொட்டுக்கடலை, தேங்காய், வெல்ல கரைசல்சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், சின்ன கரண்டியில் மொண்டு ஊற்றி, மேலெழும்பி வந்தவுடன், திருப்பி வேக விட்டு எடுக்கவும்.


ஒவ்வொன்றாகத்தான் ஊற்ற வேண்டும். கரைசல் மிக கெட்டியாக இருந்தால், மேலெழும்பி வராது. தண்ணீர் கூட கலந்தாலும் உதிர் உதிராக ஓடி விடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

செந்தமிழ்ச் செல்விக்கு,
மைத கச்சாயம் குழிப் பணியாரசட்டியில் ஊற்றலாமா?

திருமதி விமலா கந்தசுவாமி அவர்களுக்கு,
ஊற்றலாம். குழிபணியாரச் சட்டியில் ஊற்றுவதாக இருந்தால், மாவை தோசை மாவு பதத்திற்கு இல்லாமல், கொஞ்சம் கெட்டியாக இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும். அரை குழிக்கு மட்டுமே ஊற்ற வேண்டும், ஏனெனில் கச்சாயம் உப்பி வரும். நன்றி.

அன்புடன்,
செல்வி.

Dear Senthmizh Madam,
I tried this Kachaya Recipe. It is very tasty. My mother add sugar instead of Jaggary. My Pondy sister jamunarani likes this sweet very much. I will prepare this sweet and give to my sister. Thanks!

அன்பு கீதாலட்சுமி,
வெல்லம் சேர்த்து செய்தால் இரண்டு நாட்களுக்கு கூட கெடாது. எங்கள் ஊரில் திருவாதிரைக்கு செய்வார்கள். இனிப்புன்னாலும் திகட்டாம சாப்பிட முடியும்.
நன்றிம்மா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.