ஜே ஜே ஜெயலலிதா

ஜெயலலிதா

போயஸ் கார்டன் பொன்மகளே
வேதா இல்லத்தின் வேத நாயகியே
சந்தியாவின் சண்டி ராணியே
தமிழ் நாட்டின் தங்கத்தாமரையே

மந்திரிகளின் மகாராணியே
தொண்டர்களின் புரட்சித் தலைவியே
கழகக் கட்சியரின் கண்மணியே
பெண்ணின் பெருமைப் போற்றிய‌ பெண்மணியே

சினிமா உலகின் அழகு ராணியே
அரசியலின் அடி ஆழம் கண்ட‌ பெண் அரசியே
அண்ணா தீ. மு. க‌. கழகத்தின் அதிகார‌ தலைவியே
சிறைக்குச் சென்று திரும்பிய‌ சீரிய‌ சிங்கமே

எங்கே சென்றாய் அம்மா, அம்மா
ஏன் சென்றாய் அம்மா, அம்மா
அப்பல்லோவில் காவல்தெய்வங்களாய் நின்ற‌ தொண்டர்களை கடந்து
உன் உயிர் எப்படி சென்றது அம்மா, அம்மா

மண் உலகை விட்டு விண்ணுலகம் சென்றத் தலைவியே
சென்று வா அம்மா, அம்மா எமனை வென்று வா அம்மா
மீண்டும் மீண்டும் பிறந்து எங்களை ஆள‌ வா அம்மா
அம்மா, அம்மா, அம்மா, அம்மா அம்மாஆஆஆஆஅ.

4
Average: 4 (14 votes)

Comments

அம்மாவிற்காக நீங்கள் எழுதிய கவிதை மிகவும் நன்றாக உள்ளது நன்றி

ஹாய்
''அம்மாவிற்காக‌ நீங்கள் எழுதிய‌ கவிதை மிகவும் நன்றாக‌ உள்ளது'''பாராட்டுக்கு நன்றி.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

" அப்பல்லோவில் காவல்தெய்வங்களாய் நின்ற‌ தொண்டர்களை கடந்து
உன் உயிர் எப்படி சென்றது அம்மா, அம்மா " ‍‍~~~~ அருமையான‌ வரிகள். வாழ்த்துக்கள்

- பிரேமா

கவிதை மிக்க‌ அருமை. தலைப்பும் அருமை

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய‌ இறைவனை பிரார்த்திப்போம்.

நல்ல இருக்கு உங்க கவிதை சந்தியாவின் சண்டிரானியே வரிகள் நல்ல இருக்கு. அவங்களுக்கு இருக்கிற ஆளுமை,அந்த கட்ஸ்,அந்த கர்வம், அந்த அதிகாரம், அந்த துணிச்சல்,அந்த தோரணை சொல்லவே முடியாது. அந்த மாதிரி ஒரு தலைவி கிடைக்க போறதில்லை பிறக்கவும் போறதில்லை மிஸ் யூ அம்மா

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

கனகமுத்து மிகவும் சரியாக‌ சொல்லியிருக்கிறார்கள்.. அம்மாவை போல் ஒரு சிறந்த‌ பெண்மணி இனிமேல் தவமிருந்தாலும் பார்க்க‌ முடியாது.. அந்த‌ வெற்றிடத்தை எவராலும் நிரப்ப‌ முடியாது.. அவர் ஒரு சகாப்தம்.. மீழா துயரில் நம்மை ஆழ்த்திவிட்டு சென்று விட்டார்..

தாயை இழந்தது தமிழகம் !!!!!

அவரின் ஆத்மா சாந்தியடைய‌ பிரார்த்திப்போம்.. !!

- பிரேமா

ஹாய்'

பிரேமா, நிகிலா, கனகமுத்து அனைவருக்கும் நன்றி. அம்மாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

அம்மாவிற்கு ஓர் அஞ்சலிக் கவிதை. அருமை ரஜினி.

‍- இமா க்றிஸ்