குக்கர் சாதம்

அன்பு தோழிகளுக்கு காலை வணக்கம் !!!

எனக்கு குக்கரில் சாதம் வைப்பதில் சில சந்தேகங்கள் உள்ளது.. புதிதாக‌ திருமணம் ஆன‌ எனக்கு சமையலும் புதிது.. நான் குக்கரில் சாதம் வைத்தால் அது குக்கரின் சுற்றுச்சுவர்களில் அதிகமாக‌ சாதம் படிந்து வீணாகிறது.. குக்கர் சூடாக‌ இருக்கும் போது கையால் எடுக்க‌ முடிவதில்லை கரண்டியை பயன்படுத்தினாலும் சரியாக‌ வருவதில்லை.. சாதம் ஆறின‌ பின்பு எடுக்க‌ முற்பட்டால் சாதம் இருகிக் கொண்டு வருவதில்லை..

குக்கரையும் மாற்றி பார்த்துவிட்டேன். அரிசி ரகங்களையும் மாற்றி பார்த்துவிட்டேன். விலையுயர்ந்த‌ அரிசி ரகங்களை தான் பயன்படுத்துகிறேன்.. ஆனாலும் என் குழப்பம் தீர‌ வில்லை.. இதற்கு ஏதேனும் டிப்ஸ் உள்ளதா ? அல்லது என்ன‌ செய்தால் சாதம் வீணாவதை தவிர்க்கலாம்.. எனக்கு உதவி செய்யுங்கள் தோழிகளே ... @@@

குக்கரில் எவ்வளவு அரிசி எவ்வளவு தண்ணீர் வைக்கிறீர்கள்.

சாரு, அரிசிக்கு இரு மடங்கு.. சில‌ நேரத்தில் தேவைக்கேற்ப‌ கால் டம்ளர் (சிறியது) அதிகம் சேர்ப்பேன்..

- பிரேமா

அரிசி மற்றும் தண்ணீரின் அளவு சரிதான் பிரேமா ,குக்கர் சாதம் எப்போது இருகதான் செய்யும்,நான் செய்வதை சொல்கிறேன்,நான் குக்கர் விசில் போனதும் சாதத்தை சாதரணமாக வடிப்பது போல் தண்ணீர் ஊற்றி வடித்து விடுவேன் அப்போது சாதம் நாள் முழுவதும் உதிரியாக இருக்கும்

மிக்க‌ நன்றி சாரு !!! வடித்த‌ சாதத்தில் தண்ணீர் ஊற்றினால் சாதம் ஆறி விடுமே ? நான் கேட்பது சரிதானா ?

- பிரேமா

சரிதான் பிரேமா நான் வெதுவெதுப்பான நீர்தான் உபயோகிப்பேன்

ஓ !!! அப்படி ஒன்று இருக்கிறதோ ? கண்டிப்பாக‌ முயற்சி செய்கிறேன்.. ரொம்ப‌ நன்றி பா ..

- பிரேமா

எனக்கு நியாபகம் தெரிந்ததில் இருந்து எங்க‌ வீட்டில் குக்கர் சாதம் தான்.நானும் திருமணம் ஆன‌ இரண்டரை வருடமாக‌ குக்கரில் தான் சாதம் வைக்கிரேன் மா.
குக்கரில் சாதம் வைக்கும் போது எந்த‌ பொருலில் அரிசி அளவு போடுகிரீர்களோ அந்த‌ பொருலில் அரிசியின் அளவில் ஒரு பங்கு அதிகமான‌ தண்ணீர் அளக்க‌ வேண்டும்.ஒரு உதாரணமாக‌ 2 டம்ளர் அரிசிக்கு 4 டம்ளர் தண்ணீர் அளக்க‌ வேண்டும்.
2முரை அரிசியை நன்றாக‌ கழுவி அதன் பிறகு தண்ணீர் அளந்து ,உப்பு சிறிது சேர்த்து , அரிசி குக்கரின் சுற்றிலும் இல்லாமல் தண்ணீரில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.பின் அடுப்பில் வைத்து நான்கு விசில் விட்டு அடுப்பை அனைத்து விடுங்கள்.விசில் அடங்கிய‌ பின் 10 நிமிடம் கழித்து குக்கரின் விசிலை சற்று தூக்கி விட்டு அதன் பின் மூடியை திறவுங்கள்.
பின் ஒரு முறை சாதத்தை ஒரு சுழற்று கிளறி விடுங்கள்.இப்படி செய்தால் சாதம் ஒன்ரோடு ஒன்ரு ஒட்டாமல் உதிறியாக‌ இருக்கும்.

(குறிப்பு : அரிசியை ஊர‌ வைக்கும் போதே இரண்டு முறை கழுவி அதன் பின் சிறிது எழுமிச்சை சாறு பிழிந்து ஊற‌ வைத்து சமைத்தால் உதிரியாக‌ இருக்கும்.)

மேற்கூறிய‌ அனைத்தும் என் அனுபவத்தால் கூறியது.முயற்சித்து பார்த்து சொல்லுங்கள்.

மிக்க‌ நன்றி.. நீங்கள் சொல்கிற‌ மாதிரி தான் செய்கிறேன்.. ஆனாலும் ஏன் இப்படி ஆகிறது என்று தெரியவில்லை தோழி ..

//அரிசியை ஊர‌ வைக்கும் போதே இரண்டு முறை கழுவி அதன் பின் சிறிது எழுமிச்சை சாறு பிழிந்து ஊற‌ வைத்து சமைத்தால் உதிரியாக‌ இருக்கும்// இது வரை இதை நான் கேள்வி பட்டதே இல்லை. நிச்சயம் முயற்சி செய்து தெரிவிக்கிறேன்.

- பிரேமா

//அரிசியை ஊர‌ வைக்கும் போதே// :-) அரிசி ஊராது. :-)

சிறிது எண்ணெய் (சமையல் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில்) சேர்த்து வேகவிட்டாலும் உதிரியாக வரும்.

ஒரு சந்தேகம்... நீங்கள் சொல்லும் 'குக்கர்' எது? ரைஸ் குக்கரா அல்லது ப்ரெஷர் குக்கரா? இல்லாவிட்டால் மைக்ரோவேவ் ரைஸ் குக்கர்!

‍- இமா க்றிஸ்

அம்மா நான் ப்ரெஷர் குக்கர் தான் பயன்படுத்துகிறேன்.

//சிறிது எண்ணெய் (சமையல் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில்) சேர்த்து வேகவிட்டாலும் உதிரியாக வரும்.// எண்ணெயை அரிசி தண்ணீர் உப்பு எல்லாம் சேர்த்த‌ பிறகு சேர்க்க‌ வேண்டுமா ? எண்ணெய் சேர்ப்பதால் சாதத்தின் சுவை மாறுமா ?

- பிரேமா

மேலும் சில பதிவுகள்