கர்ப்பகால‌ உணவு (ஆரம்ப‌ நிலை)

தோழிகளுக்கு வணக்கம்.. கர்ப்பகால‌ ஆரம்ப‌ நிலையில் இருக்கிற‌ கர்ப்பிணிகளுக்காக‌ இந்த‌ இழை..
அனுபவம் மிகுந்த‌ தோழிகள் ஆரம்ப‌ நிலை கர்ப்பிணிகளுக்கான‌ உணவுகள் குறித்து விளக்குங்கள்..
ஏனெனில் இப்போது நிறைய‌ தோழிகள் கருவுற்றிருக்கிறார்கள் (நானும் தான்).. எங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே எந்த‌ மாதிரி உணவு, பழங்கள், பானங்கள் குடிக்கலாம் என்பன‌ போன்ற‌ குறிப்புகள் எங்களுக்கு பெரிதும் உதவும் என்ற‌ நம்பிக்கையில் இந்த‌ இழையை துவக்கியுள்ளேன்.

என்னென்ன‌ எடுத்துக்கொள்ள வேண்டும் என்னென்ன‌ தவிர்க்க‌ வேண்டும் ?

(எ.கா) மதர்ஸ் ஹார்லிக்ஸ் போன்றவற்றை எந்த‌ மாதத்தில் இருந்து எடுத்துக்கொள்ள‌ வேண்டும்..?

குறிப்பு : இது போன்ற‌ இழை ஏற்கனவே அறுசுவையில் இருக்குமானால் அந்த‌ லிங்க்‍‍‍ _ ஐ இங்கு கொடுக்கலாம்.. ஒரு வேளை நான் தேவையில்லாமல் இழையை உருவாக்கியிருந்தால் அதற்கு மன்னிக்கவும்.. (இழைகளை சரியாக‌ தேட‌ முடியவில்லை அதனால் இந்த‌ முயற்சி)

நன்றி தோழீஸ் !!

அதை நினைத்து கவலை அடையாதீர்கள்.உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.

தெரியாமல் தானே சாப்பிட்டீர்கள்.

யோசிக்காதீங்க. எதுவும் ஆகாது. அதுவும் போக... நான்கைந்து எள்ளு சாப்பிடுவதால் என்ன ஆகப் போகிறது? யோசிக்காம வேற ஏதாவது வேலையில் மனதை ஈடுபடுத்துங்க.

‍- இமா க்றிஸ்

உங்கள் வாழ்த்துக்களை எதிர்ப்பார்த்தேன்...

சரி மா இனிமேல் யோசிக்கமாட்டேன்..

- பிரேமா

சரி தாரணீ.. நானும் யோசிக்காமல் தான் இருந்தேன்.. ஆனால் அதை சாப்பிட்ட‌ 5 நிமிடத்தில் வயிறு வலிக்க ஆரம்பித்துவிட்டது.. அதனால் என் சந்தேகம் இன்னும் அதிகமானது பா..

இப்போது அந்த‌ வலி பரவாயில்லை..

- பிரேமா

வணக்கம் எப்படி இருக்கிறீர்கள்.உங்களுக்கு கர்ப்ப அறிகுறிகள் இருக்கா ? பிரேமா

வெள்ளைப்படுதல் இருக்கா ?

வணக்கம் தாரணீ. நலமாக‌ இருக்கிறேன்.நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ?

கர்ப்ப‌ அறிகுறிகள் என்று சொல்ல‌ தெரியவில்லை ..நன்றாக‌ பசிக்கிறது.. வெள்ளைப்படுதல் இருக்கிறது ஆனால் நல்ல‌ நீர்மமாக‌..

- பிரேமா

நான் நலமாக இருக்கிறேன். உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.

இன்று எனக்கு மாதவிடாய் முடிந்து 8 ம் நாள்.

எனககு ஏதாவது டிப்ஸ் இருந்தால் கூறுஙகள் தோழி

நீங்கள் இன்றிலிருந்தே சேரலாம் பா. ஒவுலேசன் டே பார்த்துக்கொள்ளுங்கள்.. அன்று அதிகாலையில் முயற்சி செய்யுங்கள்.. இன்றிலிருந்து ஒரு நாள் கூட‌ மிஸ் பண்ணாதீர்கள்.. அடுத்த மாதவிடாய்க்கு 5 நாட்களுக்கு முன் இருந்து சேர‌ வேண்டாம். (நிறைய‌ பேர் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்கிறார்கள்) நீங்கள் அந்த‌ ஓவுலேசன் பீரியடில் தவறாமல் சேர்ந்தீர்களானால் வாய்ப்புகள் நிச்சயம்.. இதற்கிடையில் நீங்கள் இரவில் 4 அல்லது 5 கொண்டக்கடலையை ஊற‌ வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள் (உங்கள் கணவருக்கும் கொடுக்கலாம்) நல்ல‌ ரிசல்ட் கிடைக்கும்.

இது போக‌ விடுமுறை நாட்களில் மாலை 5 மணி போல‌ பாசிப்பயறு வேக‌ வைத்து எடுத்து வற்றல் போட்டு தாளித்து ஸ்நாக்ஸ் மாதிரி இருவரும் சாப்பிடுங்கள்..

மறக்காமல் ஃபோலிக் ஆசிட் மாத்திரை தினமும் காலை உணவுக்கு பின்பு எடுத்துக் கொள்ளுங்கள்.. சிக்கன் பிரியராக‌ இருந்தால் அதை தவிர்த்துவிட்டு ஞாயிறு மதியத்துக்கு மட்டன் எடுத்து சமையுங்கள்.. இந்த‌ வாரம் மட்டன் என்றால் அடுத்த‌ வாரம் மீன் சாப்பிடுங்கள்.. உடம்பை குளிர்ச்சியாக‌ வைத்துக்கொள்ளுங்கள்.. " தண்ணீர் நிறைய‌ குடிக்க‌ வேண்டும்.. "

அப்புறம் மனசை ரிலாக்சா வச்சுக்கோங்க. இந்த‌ மாதம் ஆகுமோ ஆகாதோ? அதெல்லாம் யோசிக்காமல் உங்கள் அன்றாட‌ வேலைகளில் கவனத்தை திருப்புங்கள். நிச்சயம் நீங்கள் தாய்மையடைவீர்கள் தாரணி !!

வாழ்த்துக்கள் சகோதரி !! வாழ்க‌ வளமுடன் !!

- பிரேமா

நீங்க்ள் கூறியபடியே முயற்ச்சி செய்கிறேன் தோழி.

நான் சைவம்,திருமணத்திறக்கு பிற்கு தான் அசைவம் சாப்பிடுகிறேன்.

இந்த‌ மாதம் முழுவ்தும் மட்டன்,மீன் சாப்பிடப்போகிறேன்.

வேலை பளு காரனமாக என் தூக்கத்தை தான் கட்டுப்படுத்த முடியவில்லை

கண்டிப்பாக‌ முயற்சி செய்யுங்கள்.. மட்டன், மீன் உடம்புக்கு மிகவும் நல்லது..

// வேலை பளு காரனமாக என் தூக்கத்தை தான் கட்டுப்படுத்த முடியவில்லை // சற்று சிரமமான‌ விஷயம் தான் தாரணி.. ஆனால் இந்த‌ மாதம் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்.. நல்லதே நடக்கும் ..

சாப்பாடு ஆச்சா ? என்ன‌ பண்ணிட்டிருக்கீங்க‌ ?

- பிரேமா

மேலும் சில பதிவுகள்