குங்கும பூ பற்றி

நான் 4 மாத கர்ப்பிணி.
1 ) குங்கும பூ எந்த மாதத்தில் இருந்து சாப்பிடலாம். காலையில் சாப்பிடலாமா அல்லது இரவில் சாப்பிடலாமா ?

2) மருத்துவர் பாலில் கலந்த குடிக்க பவுடர் கொடுத்து இருக்கிறார். பால் பவுடருடன் ( மருத்துவர் கொடுத்த பவுடர் ) குங்கும பூ போட்டு சாப்பிடலாமா ?

குங்கும பூக்கும் குழந்தை பிறப்பிற்கும் சம்பந்தம் இல்லை. google ல், தேடி பாருங்கள்...

குங்குமப்பூ சாப்பிட்டா குழந்தை சிகப்பா பொறக்கும் சொல்லுவாங்க எனக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை ந கர்ப்பமா இருக்கும் பொது அதல்லாம் சாப்பிட்டது இல்லா குங்குமப்பூ சூடு சொல்லுவாங்க கேள்விப்பட்டது தான் எனக்கு இத பத்தி சரியாக தெரியல கண்டிப்பாக நமது அறுசுவை தோழிகள் உங்களுக்கு சொல்லுவாங்கள்

//கண்டிப்பாக நமது அறுசுவை தோழிகள் உங்களுக்கு சொல்லுவாங்கள்// இது எக்ஸ்ட்ரா த்ரெட். :-) வேற த்ரெட் சிலது இருக்கு. அங்க அன்றே VR-க்கு பதில் சொல்லியாச்சு. ஒரே கேள்விக்கு திரும்பத் திரும்ப பதில் சொல்றதை விட பதில் இருக்கிற த்ரெட் பக்கம் கூப்பிட்டு விடுறது சுலபம் என்று அங்க கைகாட்டிவிட்டாச்சு. அதனால்தான் இது வெறுமையாத் தெரியுது. :-)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்