9வது மாதம் அடிவயிற்றில் சுறுக்கென்று வலி

எனக்கு தற்போது 35 வாரம். கடந்த வாரத்திலிருந்து சில சமயம் சுறுக்கென்று அடி வயிறு முநல் பிறப்புறுப்பு வரை 10 வினாடி வரைவலிக்கிறது. இது சில நாளில் இருப்பதில்லை சில நாளில் அடிக்கடி வருகிறது. எதனால் இப்படி ஆகிறது. 3 நாள்களுக்கு முன்பும் doctorஐ பார்க்க சென்ற போதும் அவர் இதை பெரிதாக கருதவில்லை குழந்தை சரியாக இருப்பதாக சொன்னார். இது குறித்து அனுபவம் உள்ளதா யாருக்காவது??

எனக்கும் 8 மாத முடிவில் இருந்து சில நேரம் அடி வயிறும், பல நேரம் மேல் வயிறும் வலிக்கும். என் டாக்டரிடம் கன்சல்ட் பண்ணதற்கு செக் பண்ணிவிட்டு பேபி நார்மல்.ஒரு பிரச்சனையும் இல்லை என சொன்னாங்க. வலி விடாமல் இருக்கவும் வேறு டாக்டரிடம் கேட்டேன். அவங்களும் அதே பதில் தான் சொன்னாங்க.

கருப்பை தண்ணீரின் அளவு கம்மியானாலும் கூட வலி எடுக்கும் (இது எனக்கு டெலிவரிக்கு 2 நாள் முன்னே டாக்டர் சொன்னது)எனக்கு தண்ணீர் கம்மியானதால் 15 நாளுக்கு முன்னமே ஆபரேஷன் செய்தார்கள்.

எதைப் பற்றியும் யோசிக்காமல் நிம்மதியாக இருங்கள். நல்லதே நடக்கும்.:)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

oil apply pannunga sister then night timela siragam pottu water boil panni oru cup kudinga sari agum.sister ungaluku 8 month complete agum pothu hp level evlo irunthathu sollunga pls.

நன்றி. My hb level 10.3

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

Thank you sister,unga delivery date yeppo solli irukkanga pa, hp normal sonnagala ungalukku

ஹீமோகுளோபின் அளவை நினைத்தே கவலைபடுறீங்களோ?(2,3 இடங்களில் இதே கேள்வியை கேட்டிருந்ததை பார்த்தேன்)
எனக்கு 8 மாத முடிவில் 6.2 தான் இருந்தது..10க்கு மேல் இருக்க வேண்டும்.. உலர் கருப்பு திராட்சை சாப்பிடுங்க..நன்றாக கூடும்..சும்மா அதையே யோசிக்காதீங்க சத்யா.. ரிலாக்சா இருங்க..:-)

அவந்திகா

illanga sister konjam payamatha irukku native pogum vara inga doctor romba payamurutharanga.

Payapadathinga sister ela nalabadia nadakum.

உங்கள் மகனுக்கு என்ன‌ பெயர் வைத்திருக்கிறீர்கள்?

நீங்கள் இருவரும் நலமா ?

(வேறு இழையில் இதே கேள்வியை வைத்தேன்.. ஆனால் எந்த‌ இழை என்று தெரியவில்லை.. அதனால் மறுபடியும் இங்கு பதிவிடுகிறேன்)

- பிரேமா

ஓ.. சாரி பிரேமா.. சமீபத்திய கருத்துகளில் நான் பார்க்கும் போது இருந்திருக்காது..அதனால் கவனித்திருக்க மாட்டேன்..

மகன் பெயர் அத்விக்..போனவாரம் தான் பெயர் சூட்டு விழா நடத்தினோம்..

நலம் பிரேமா..

வாழ்த்துக்கள்ப்பா..கவனமாக இருங்கள்..:-)

அவந்திகா

//அத்விக் // பெயர் ரொம்ப‌ அழகா நல்லா ட்ரெண்டியா இருக்கு ..

நன்றி அவந்திகா :‍)

- பிரேமா

மேலும் சில பதிவுகள்