வெண்டைக்காய்

வெண்டைக்காயின் வலவலப்பை போக்குவது எப்படி? வெண்டைக்காய் பொறியல் எனது மகளுக்கு மிகவும் பிடிக்கும்,ஆனால் அதன் வலவலப்பு போகவைப்பதற்குல் தலைவலி ஆகிறது.எனக்கு உதவுங்கல். நன்றி

ஹலோ சித்தி எப்படி இருக்கின்றீர்கள்? பிரிக்கமுடியாதது எதுவோ என்ற பொருட்களில் இந்த வெண்டைக்காயும் அதன் வழவழப்பையும் கூட சேர்த்துக் கொள்ளலாம். முழு வழவழப்பையும் போக்க முடியாது ஆனால் குறைக்கமுடியும். பொரியல் செய்யும் பொழுது, சுத்தம் செய்த காய்களை ஈரமே இல்லாமல் நன்கு துடைத்து விட்டு,நறுக்கி வெறும் சட்டியில் போட்டு நன்கு வதக்கி விட்டு, தண்ணீர் சிறுது கூட ஊற்றாமல், அரிசி மாவு. மைதா மாவு, கடலை மாவு போன்ற மாவுகளை காய்கள் வெந்த பிறகு சிறிதை தூவி விட்டு, அதேப் போல் வறுவல் செய்யும் பொழுதும் சிறிது மாவை பிசரி விட்டு செய்தால் ஓரளவிற்க்கு அதன் வழவழப்பை குறைக்க முடியும்.
மேலும் கழுவிய காய்களை நன்கு துடைத்த பிறகு வினீகரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைத்து அடுத்த நாள் எடுத்து துடைத்து விட்டு பொரியல் மற்றும் எந்த விதமாகவும் செய்யலாம்.நன்றி.

வெண்டைக்காயை நறுக்கி நன்கு உலர்ந்த பின் செய்தால் வழவழப்பு இருக்காது.
சிறிது தயிர் சேர்த்து செய்தாலும் வழவழப்பு இருக்காது.
எண்ணெயில் நன்றாக வதக்கிய பின், தண்ணீர் தெளித்தால் (ஊற்ற கூடாது) வழவழப்பு வராது.

அன்புடன்,
செல்வி.

வெண்டைக்காய் முதல் நாள் இரவே கழுவி ஒரு டிஷ்யூ பேப்பரில் உலர வைக்கவும்.மறுநாள் நறுக்கி வதக்கும் போது மூடாமல் சிறு தீயில் நிறைய நேரம் வைத்தால் பிசுபிசுப்பு போய் நன்றாக வரும்.வெங்காயம் சேர்ப்பதானால் கூட கடைசியில் சேர்க்கவும்.

மேலும் சில பதிவுகள்