தோழிகளே ..

மாதவிடாய்க்கு இன்னும் 3 நாட்கள் தான் உள்ளது.

எப்படி எல்லாம் இருக்க வேண்டும்.ஏதாவது டிப்ஹ இருந்தால் கூறுங்கள்.

இந்த மாதம் நிறைய நம்பிக்கையோடு இருக்கிறேன்.

பொட்டுக்கடலை சாப்பிடலாமா?

நீங்க வெயிட் எதும் தூக்காதிங்க. சூடான உணவுகள் சாப்பிடாதிங்க. மனச ரிலாக்ஸா வச்சுக்கங்க. டென்ஷன் ஆகாதிங்க.

தாரணி,

முதலில் நாட்களை எண்ணாதீர்கள் !! அதாவது பீரியட் டேட் நாளைக்கு தானோ? அப்படின்னு யோசிக்கறத‌ விட்டுட்டு, ரிலாக்ஸா இருங்க‌.. உங்க‌ கவனத்த‌ வேற‌ பக்கம் திருப்புங்க‌.

கடினமான‌ வேலைகளை தவிருங்கள்.. ஹீட்டான‌ பொருட்கள் சாப்பிடுவதை தவிருங்கள்.. பீரியட் வந்தால் பார்த்துக்கலாம்னு கேஷுவலா இருங்க‌.. எல்லாம் நல்லதே நடக்கும்.. இறைவனை நல்லா வேண்டிக்கோங்க‌. நிச்சயம் வெற்றி தான்.

பொட்டுக்கடலை :
பொட்டுக்கடலைக்கு ஒரு தனித்துவம் உண்டு.. அதாவது அந்த‌ மாதம் உங்களுக்கு பீரியட்ஸ் லேட்டா வரனும்னா நீங்கள் பொட்டுக்கடலை வெறும் வாயில் மென்று சாப்பிடலாம்..மாதவிலக்கு தள்ளி செல்லும். மாதவிடாய் நெருங்கும் நேரத்தில் அதை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இது என் சொந்த‌ அனுபவம்.. கடந்த‌ சில‌ மாதங்களுக்கு முன்பு பீரியட் வந்துருமோன்னு பயத்துல‌ ஒரு கை பொட்டுக்கடலை சாப்பிட்டேன்.. பீரியடும் 3 நாட்கள் தள்ளி வந்தது.. அந்த‌ 3 நாட்களுக்குள் நான் கர்ப்பமாக‌ இருப்பேனோன்னு 1008 குழப்பங்கள்.. பிறகு 3 நாட்கள் கழித்து விலக்கானேன்.. அதனால் தான் இதை சொல்கிறேன்.. சில‌ பேருக்கு அதன் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ஆனால் பயன்படுத்தி பார்த்தால் அவ்வாறு சொல்லமாட்டார்கள்.

- பிரேமா

ரொம்ப‌ நன்றி பா.

//பீரியட் வந்துருமோன்னு பயத்துல‌ ஒரு கை பொட்டுக்கடலை சாப்பிட்டேன்//நானும் தான் இன்று சாப்பிட்டு விட்டேன்.பயமாக் தான் உள்ளது.

அதே நினைப்பாக‌ உள்ளதால் கேட்டேன்.

நீங்க்ள் கூறியதை முயற்சி செய்து பார்க்கிறேன்.

நடந்தது நடந்து விட்டது.. இனிமேல் யோசிக்காதீர்கள்.. நல்லதே நடக்கும் பா. அதையே நினைத்திருக்க‌ வேண்டாம்..

ரிலாக்ஸா இருங்கள்

- பிரேமா

மேலும் சில பதிவுகள்