ஹெல்ப் மீ தோழிகளே

அன்பு தோழிகளுக்கு வணக்கம் எனக்கு குழந்தை பிறந்து 1வருடமும் ஒரு மாதம் ஆகிறது இது வரை இறைவன் கிருபையால் எந்த பிரச்னையும் இல்லை ஆனால் சில வாரங்களுக்கு முன்பில் இருந்து எனது குழந்தை இரவில் தூக்கத்துல கீழே படுக்கமா எழுந்திரிச்சிக்குற கண்ணை மூடிட்டேநின்னு கிட்டே தூங்குற ஆனால் கீழே படுக்க மாட்டுக்கார நடு இரவில் இருந்து எழுந்திருச்சு எழுந்திரிச்சு அந்த பக்கம் இந்த பக்கம் மாத்தி மாத்தி படுக்க வச்சி பார்த்துட்டேன் ஆனாலும் படுக்க மாட்டுற இரவு முழுக்க இதை தான் செயிகிற நல்ல தூக்கம் இருக்கு அவளுக்கு ஆனால் கீழே படுக்க வச்ச கொஞ்ச நேரம் தான் தூங்குற அப்பறம் கண்ணா மூடிட்டே எழுந்தூரிக்குற எதுனால இப்படினு தெரியல இந்த தூக்கத்துல நடக்குவாங்களே அது போல பண்ணுற ஆனால் விடிந்ததும் நல்ல தூங்குற ஏன் இப்படி பண்ணுறான்னு புரியலை டாக்டரிடம் போகலான அடுத்த மாசம் தான் அப்பாயின்மென்ட் குடுத்து இருகாங்க.எனக்கு என்ன செய்யிறதுனு தெரியலை

அது மட்டும் இல்லை எனக்கு இன்னும் ஒன்னு கேக்கணும் ஆனால் என்னால் அதை இங்கை பதிவிட கொஞ்சம் தயக்கமா இருக்கு என்னால் அதை விரிவாக எப்படி இங்கு சொல்லுவது என்று தெரியவில்லை பெண் குழந்தை என்பதால் அதை விரிவாக சொல்ல என்னால் முடியவில்லை ஆனால் அதை நினைத்து நினைத்து எனக்கு பெரும் கவலையாக உள்ளது என் அம்மாவிடம் கேட்டால் அவர்கள் இதை மாதிரி நான் கேள்வியே பட்டதில்லை என்கிறார் எனக்கு என்ன செயவதென்றே தெரியவில்லை . ரொம்ப கவலைய இருக்கு

//டாக்டரிடம் போகலான அடுத்த மாசம் தான் அப்பாயின்மென்ட் குடுத்து இருகாங்க.எனக்கு என்ன செய்யிறதுனு தெரியலை// பிரச்சினை இருந்தால் இடைல போகலாம். அப்பாயின்மண்ட் வரைக்கும் காத்திருக்க வேண்டியது இல்லை.

கனவு கண்டு பயப்பட இவர் சின்னக் குழந்தை. யாராவது பயமுறுத்தியிருப்பார்களா? அல்லது... படுக்கையைக் கவனியுங்கள். ஏதாவது ஒரு தடவை கடித்திருந்தால் இப்போ படுக்கப் பயப்படுவார். பகலில் வெளிச்சம் ஒரு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும். அதோடு இரவைய தூக்கமும் அழுத்த தூங்கிவிடுவார். ஓரிரண்டு நாட்கள், நீங்கள் அணைத்துக் கொண்டு தூங்கிப் பாருங்கள். சரியாகக் கூடும்.
~~~~
//விரிவாக எப்படி இங்கு சொல்லுவது என்று தெரியவில்லை பெண் குழந்தை என்பதால் அதை விரிவாக சொல்ல என்னால் முடியவில்லை// ம்... இப்படி மொட்டையாக எழுதினால் யாராலும் உதவ முடியாது. ஒரு பெண் மருத்துவரிடம் போய்ப் பேசிப் பார்க்கலாமே! அல்லாவிட்டால் என் ஃபேஸ்புக் பக்கம் (imma chris) வந்து ஒரு ப்ரைவட் மெசேஜ் கொடுங்கள். நீங்கள் அங்கு வேறு பெயரிலிருந்தால், முதலில் இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். என்னால் உதவ முடிகிறதா என்று பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்

கவலைப் படாதீர் தோழி நீங்கள் பாப்பாவை தொட்டிலில் தூங்கவைத்துப் பாருங்கள்
என்னுடைய பேஸ்புக் ஐடி மைதிலி பாலகிருஷ்ணன்
நானும் என் பொன்னும் ப்ரொபைலில்
உங்களுடைய சந்தேகத்தை அங்கே இன்பாக்ஸில் கேளுங்கள் எனக்கு தெரிந்தால் நான் சொல்கிறேன்

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

அக்கா, எனக்கு இதில் அனுபவம் இல்லை.. இருந்தாலும் என் அக்கா குழந்தையை மனதில் வைத்து எழுதுகிறேன்..
//து குழந்தை இரவில் தூக்கத்துல கீழே படுக்கமா எழுந்திரிச்சிக்குற// நீங்கள் தொட்டிலில் குழந்தையை தூங்க‌ வைக்கும் பழக்கம் இல்லையா? அவ்வாறு இருந்தால் குழந்தையால் எழுந்து நடக்க‌ முடியாது.. அழும் போது நாம் சென்று பார்க்க‌ வசதியாக‌ இருக்கும்.
//ஆனாலும் படுக்க மாட்டுற இரவு முழுக்க இதை தான் செயிகிற // உங்கள் படுக்கையறை பெரியதாக‌ இருக்கும் என்று நினைக்கிறேன். அவள் தூங்கும் நேரத்தில் நீங்கள் அவள் அருகில் இல்லையென்றால் குழந்தை தனிமையை நினைத்து பயப்படும், அழும். நீங்கள் அவள் நன்கு தூங்குற வரைக்கும் அவளிடம் பேசிக்கொண்டும் தட்டிக் கொடுத்துக்கொண்டும் இருங்கள் (இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்). அதனால் அவளுக்கு நாம் பாதுகாப்பாக‌ இருக்கிறோம் என்று நினைத்து தூங்க‌ ஆரம்பிக்கும்.
என் அக்கா குழந்தை தூங்கும் போது யாரேனும் ஒருவர் அவள் அருகிலேயே இருப்போம். அவள் லேசாக‌ அசைந்தாலும் தொட்டிலை ஆட்டிவிட்டு ஒரு வித‌ சத்தம் எழுப்பினால் விழிக்காமல் தூங்குவாள்.

//ஆனால் விடிந்ததும் நல்ல தூங்குற// இமா அம்மா சொன்ன‌ மாதிரி அவளுக்கு இருட்டு கூட‌ பயமாக‌ இருக்கலாம். நீங்கள் விளக்கை அணைக்காமல் தூங்க வையுங்கள். இரவு உணவு சரியாக‌ போதவில்லை என்றாலும் குழந்தை நடுஇரவில் விழிக்க‌ வாய்ப்புள்ளது. அல்லது சரிவர‌ சிறுநீர் கழிக்காமல் இருந்தாலும் இவ்வாறு எழ‌ வாய்ப்புள்ளது.. என்ன‌ காரணம் என்று கண்டுபிடியுங்கள் கா.

உங்களுக்கு மூன்று குழந்தைகள் என்று சொன்னீர்கள் அதனால் உங்களுக்கு இது சுலபமான‌ ஒன்று தான்.. நிச்சயம் உங்கள் குழந்தை நலமாக‌ இருப்பாள்..

- பிரேமா

இம்மா அம்மா அவளை பிறந்திலருந்து அணைச்சு தான் தூங்குறேன் தினமும் படுக்கையே செக் பங்கிட்டு தான் படுக்க வயிக்குறேன் பிறகு ஏன்னு புரியல டாக்டரிடம் தான் கேக்கணும் நன்றி அம்மா கனவு கண்டு பயந்து இருந்தால் அலுத்து இருப்பாளே அதை இல்லையே அதுனால தான் எதனால புரியாம முழிக்குறேன் ஒரு வேலை நீங்கள் சொன்ன மாதிரி ஏதாவது கடித்த இருந்தால் கூட இப்படி நடக்கலாம் நான் இனிமே படுக்கும் பொது படுக்கையை நல்ல செக் பன்னிட்டு தூங்க வைக்கிறேன் அம்மா நான் உங்களுக்கு facepook ல உங்களுக்கு சொல்லுறேன் அம்மா

என் குழந்தையிங்க தொட்டிலே தூங்கி நான் பார்த்ததே இல்லை பிறந்தப்பவே தொட்டிலை போட்டு பார்த்தேன் அவ தூங்கவே இல்லை அதுல இருந்து என் கூடவே படுக்க வச்சி கிட்டேன் இப்ப தேடிருனு தொட்டுல போட்ட தூங்கவானு எனக்கு நம்பிக்கை இல்லைம்மா

அவ என் கையிலேயே தான் தூங்குவ என் கிட்டயே தான் படுத்துப்பா என்ன விட்டு தூங்குற நேரத்துல ஒரு இன்ச் கூட நகர்ந்தது இல்லை

Yeanudaiya Facebook open agamatukuthu sari panina udan ungalukku msg panuren sorry na phone LA irunthu type panuren athanal ennala Tamil type seyya mudiyavillai

நாளை பகல் வேலையாக இருப்பேன். உடனே பதில் காணாவிட்டால் யோசிக்காதீங்க. முடிந்தால் நாளை இரவு அல்லது மறுநாள் வருவேன்.

‍- இமா க்றிஸ்

மன்னிக்கவும் என்னுடைய பேஸ்புக் ஏதோ சில காரத்தினால் ஆகலா அதை அதை சரி பண்ணின உடன் உங்களுக்கு இன்பாக்ஸில் கண்டிப்பாக கேக்குறேன் இது எனக்கு ரொம்ப முக்கியமான கேள்வி இதுக்கு பதில் தெரியாமல் ந ரொம்ப மன குழப்பத்தில் இருக்கின்றேன்

சாி தோழி கண்டிப்பாக கேளுங்கள் தெரிந்ததை சொல்கிறேன்

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

மேலும் சில பதிவுகள்