வணக்கம்
என் பெயர் சங்கீதா. என் தம்பி மனைவி 75 நாட்கள் (2 1/2 மாதம்) கற்பமாக உள்ளாள். பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாமா என்று என்னிடம் கேட்டாள். எனக்கு குழந்தை இல்லாததால் அதை பற்றி ஒன்றும் சொல்ல தெரியவில்லை. அவளுக்கு அம்மா இல்லை. அதுவும் போக அவள் 3 வருடம் கழித்து உண்டாகியிருக்கிறாள். என் அம்மாவிடம் கேட்டாள் நாங்கெள்ளாம் அந்த காலத்துல பாத்து பாத்தா சாப்பிட்டோம்னு சொல்றாங்க. எனக்கு குழந்தை இல்லாததால் அவள் நிலைமை புரிகிறது. தயவு கூர்ந்து தெரிந்த தோழிகள் பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
சங்கீதா
சங்கீதா,
//பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாமா என்று என்னிடம் கேட்டாள்.// குடிக்கலாம் என்றே நினைக்கிறேன். மிதமான இனிப்புடன் சாப்பிடுவது நல்லது.. ஹீட்டான பொருட்களை தவிர்த்து மற்றதை தைரியமாக சாப்பிடலாம்.
http://www.arusuvai.com/tamil/node/1816
http://www.arusuvai.com/tamil/node/33372
இந்த இரண்டு இழைகளிலும் சென்று பாருங்கள். உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கும்..
- பிரேமா
Prema
நன்றி பிரேமா. இந்த இரண்டு இழைகளும் உபயோகமாக இருந்தது. அப்படியே செய்ய சொல்கிறேன்
சங்கீதா
//நாங்கெள்ளாம் அந்த காலத்துல பாத்து பாத்தா சாப்பிட்டோம்னு சொல்றாங்க.// வாவ்! சூப்பர் பதில். அவங்க சொல்றது உண்மை. அனுபவத்தைச் சொல்றாங்க.
எந்த நாட்டில் பிறந்தாலும் பெண்கள் பெண்கள் தான். ஆனால் எல்லா நாட்டினரும் ஒரே உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுகிறோமா என்றால், இல்லை. ஒரு நாட்டில் ஆகாது என்னும் உணவை இன்னொரு நாட்டிலிருப்பவர் எந்தப் பயமும் இல்லாமல் சாப்பிடுகிறார். கருவுக்கு எதுவும் ஆவதில்லை.
உணவு எதுவும் கருவைக் கலைக்காது, அளவோடு நிறுத்திக் கொண்டால். இப்போ உள்ள பிரச்சினை, எல்லாமே தேவைக்கு மேல் கிடைப்பது தான். 50 வருடங்களுக்கு முன்னால் யாரும் ஐஸ் க்ரீம், சாக்லட் சாப்பிடுவதைப் பிரச்சினையாகக் கருதவில்லை. அவற்றால் சர்க்கரை நோய் வரும், எடை போடும் என்றெல்லாம் சொன்னதில்லை. காரணம், அப்போது சர்விங் சைஸ் சின்னதாக இருந்தது. 5 சதத்துக்கு குட்டி பேப்பர் கப்பில் ஐஸ் க்ரீம் கிடைக்கும். அதுவே லக்க்ஷரி. ஆனால் அது ஒரு ஸ்கூப் கூட இராது. சாக்லேட்... எப்போவாவது கிஃப்ட்டாகக் கிடைக்கிறதும் குட்டியாக இருக்கும். இன்றைய ஐஸ் க்ரீம் சர்விங் முன்பு போல் மூன்று மடங்குக்கு மேல் இருக்கிறது. இதில் செகண்ட் சர்விங் வேறு எடுக்கிறோம். அளவுக்கு மேல் போவதால் தான் சிரமப்படுகிறோம். முன்பு காய்கறி கூட ஒரு அளவுக்கு மேல் வாங்க முடிந்ததில்லை. இப்போ பணப் புழக்கம் முன்பு போல இல்லை. சமுதாயம் கொஞ்சம் வசதியானதாக மாறிவிட்டது.
பயப்பட வேண்டாம் என்று சொல்லுங்க. ஆனால் எதைச் சாப்பிட்டாலும் அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நாள் சாப்பிட்டால் மீண்டும் ஒரு வாரம் கழித்துச் சாப்பிட்டால் எந்தப் பிரச்சினையும் ஆகப் போவதில்லை. தொடர்ந்து தினமும் சாப்பிடுவதானால் யோசிக்கத்தான் வேண்டும்.
- இமா க்றிஸ்
இமா அம்மா
// 5 சதத்துக்கு குட்டி பேப்பர் கப்பில் ஐஸ் க்ரீம் கிடைக்கும். // இங்கு நீங்கள் சதம் என்று குறிப்பிடுவது விலை / ரூபாயா?
ஆர்டிவிஷியல் எக் லயும் இதே சதம் பற்றி படித்ததாக நினைவு.
நான் இந்த வார்த்தையை இதுவரை கேள்விப்பட்டது இல்லை.. கொஞ்சம் விளக்குங்கள் இமா :)
- பிரேமா
Imma amma
நன்றி இமா அம்மா அப்படியே செய்ய சொல்றேன்
அன்புள்ள சங்கீதாவிற்கு
கருவுற்ற பெண்கள் முதல் மூன்று நான்கு மாதங்களுக்குத் தவிர்க்க வேண்டியவை;
1, பைக், ஆட்டோ சவாரி/ 2. அடிக்கடி மாடிப்படி ஏறி இறங்குதல்
3, உடல் அதிரும் படித்தாண்டுதல், குதித்தல், வழுக்கும் இடங்களில்
நடத்தலைத் தவிர்த்தல், வயிற்றில் அடிபடாமல் காத்தல், பதற்றமாக
எழுந்திருத்தல் கூட்டாது. கூட்ட நெரிசலில் போகாமல் தவிர்ப்பது.
அனாவசியமாக மயக்கம் வரும் அளவிற்கு விரதம் இருப்பது கூடாது.
உணவு வகைகளில்
உடலுக்கு அதீத உஷ்ணம் தரும் உணவு வகைகள் ஆகாது.
சளித்தொந்தரவு உண்டாக்கும் காய்கறிகள் பழங்கள் கூடாது.
தும்மல், இருமல், வாந்தி, வயிற்றோட்டம் உண்டாக்கும் உணவு
வகைகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். பப்பாளி, அன்னாசி
கருஞ்சீரகம், வாழைத் தண்டு, ஆவக்காய்மாங்காய் தவிர்க்கவும்.
தேவையானவை,
மகிழ்ச்சியான மனநிலை, நல்லவற்றைப் பார்த்தல், கேட்டல்,
முக்கி முரண்டி எதையும் செய்தல் கூடாது, உணவில் நார்ப்பகுதி
அதிகம் இருந்தால் உடல் கழிவுகள் தொல்லையின்றி வெளியேற
உதவும், கூடுமானவரை வெளியிடங்களில் உண்பதைத் தவிர்க்க
வேண்டும், தலைவலி, சுரம் போன்றவற்றிக்கு கைமருந்தே மிக
நல்லது, புதுப் புளி, புது மிளகாய் தவிர்க்கவும். உப்பிட்ட நெல்லி,
உப்பிட்ட எலுமிச்சை, உப்பிட்ட மாங்காய், உப்பிட்ட நாரத்தை
ஊறுகாய்கள் கைவசம் இருப்பது மிகமிக நல்லது, உணவு நன்கு
சீரணமாகும், வாந்தி வராது.
சுகமான பிரசவத்திற்கு நல் வாழ்த்துக்கள்.
இப்போதைக்கு இவ்வளவு தான்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
பூங்கோதை
மிகவும் பயனுள்ள தகவல்.. நன்றி மா :)
- பிரேமா
பூங்கோதை அம்மாள்
நன்றி பூங்கோதைஅம்மாள், எல்லோருக்கும் பயனுள்ள தகவல் அப்படியே செய்ய சொல்கிறேன்
சங்கீதா
பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாமா என்று என்னிடம் கேட்டாள் குடிக்கலாம் ஆனால் அதில் சர்கரை சிரிதும் எலுமிச்சை பழசாறு சிரியது சேர்த்து குடிக்கவும்
ரத்தம் அதிகரிக்கும்,குழந்தைக்கும் நல்லது.
புதிய வரவுக்காக காத்திருக்கிறேன்.
பிரேமா_ சதம்.
"சதம்" என்பது 1₹ க்கும் குறைந்த தொகையை குறிக்கும் (இலங்கையில்) சொல். இந்தியாவில் "காசு or பைசா" என சொல்வார்கள் என்று நினைக்கின்றேன். சரியாக தெரியவில்லை.