தயவுசெய்து உதவுங்கள்

என் குழந்தைக்கு பத்து மாதம் முடிந்து இரண்டுநாள் ஆகிறது எடை ஏழு கிலோ தான் இருக்கிறது. மருத்துவர் திட்டுகிறார் எடை கூட என்ன செய்வது. தோழிகளே உதவுங்கள். மிக மிக கவலையாக உள்ளது.ஒரு உணவு அட்டவணை தாருங்கள். தயவுசெய்து

// என் குழந்தைக்கு பத்து மாதம் முடிந்து இரண்டுநாள் ஆகிறது எடை ஏழு கிலோ தான் இருக்கிறது. // அட என் பொண்ணுக்கு ஒரு வயசாகுது அவளே இன்னும் 8 kg தான் இருக்க .// மருத்துவர் திட்டுகிறார் எடை கூட என்ன செய்வது.// இயற்கையாய் எடை கூடணுமே தவிர இதற்கு மருந்தோ வச்சு எடை கூட நினைக்க சிறந்தது அல்ல . நல்ல ஹெல்தியான சாப்பாடு கொடுங்கள் . இப்போது நீங்கள் குழந்தைக்கு என்ன சாப்பாடு குடுக்கிறீகள் அதை சொன்னால் தானே மற்ற தோழிகள் அதற்க்கு ஏற்ப உணவு அட்டவணை தர முடியும் . மன்னிக்கவும் நான் ஏதாவது தப்பா பதிவிட்டிலிருந்தால் எனக்கு தெரிந்ததை சொன்னேன் தோழி எனக்கு டாக்டர் நல்ல சாப்பாடு கொடுங்க மத்தபடி எதுவும் தேவை இல்லை எடை கூடன்னு சொல்லிட்டாங்க நான் இப்போதைக்கு கொஞ்சம் பருப்பு சாதம் , ஆப்பிள், பனானா , இந்த மாதிரி சாப்பாடு தன குடுத்துட்டு இருக்கேன் பயம் வேண்டாம் தோழி என்ன பொறுத்தவரை குண்டா இருந்த நல்ல ஹெல்தியா இருக்குனு அர்த்தம் இல்லை அது போல ஒல்லியாக இருந்தால் ஹெல்தியாக இல்லாமல் இருக்கும் என்றும் அர்த்தம் இல்லை குண்டா இருக்கோ இல்லை ஒல்லியாக இருக்கோ உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டாம் அது தான் முக்கியம்

உண்மை தான் தோழி நான் பாப்பாக்கு பருப்பு சாதம் ஆப்பிள் கேரட் பனானா. தருகிறேன். வேறு என்ன தருவது என்று தெரியவில்லை உணவு அட்டவனை இருந்தால் நன்றாக இருக்கும். தோழி

Badhusangeetha

http://www.arusuvai.com/tamil/node/14967. இந்த இழை உங்களுக்கு உதவியாக இருக்கும்

நன்றி. தோழி firoz

Badhusangeetha

மேலும் சில பதிவுகள்