கர்ப்பத்திற்கு முயற்சிக்கும் தோழிகளுக்கு

கர்ப்பத்திற்கு முயற்ச்சி செய்யும் தோழிகளுக்கும் நிறைய சந்தேகங்கள் இருக்கும் . உதாரணத்துக்கு கருமுட்டை பற்றி , மருந்துகள் சிகிச்சைகள் இப்படி ஏராளமான கேள்விகள் இருக்கும் அது இங்க நிறைய இலைகளில் இருக்கு ஆனால் அதை அவர்களை தேடி எடுக்க சற்று சிரமாக இருக்கலாம் அதனால் என்ன முடிந்த சில இலைகளின் லிங்க் இங்கை பதிவிடுகிறேன் அது உங்களுக்கு உதவியாக இருக்கலாம் . அப்பறம் ஒரு சின்ன அட்வைஸ் தப்பாக என்ன வேண்டாம் இங்கு சில தோழிகளின் பதிவை பார்த்து இருக்கேன் அதில் நாள் தள்ளி போயி கூட கரு இல்லை என்றதும் மிகவும் மனவேதனை அடைகின்றனர் கண்டிப்பாக இருக்கும் . ஆனால் நான் சொலவ்து என்ன வென்றால் எல்லாமே நலத்துக்குனு எடுத்துக்கங்க இந்த தடவை இல்லனா கண்டிப்பாக அடுத்த தடவை முயற்சி செய்யிங்கள் இந்த உலகத்தில் முடியாது என்று நடக்காது என்று எதுவும் இல்லை எந்த நல்ல முயற்சியும் வீண் போனது இல்லை கவலை கண்டு துவண்டு விடாமல் . நம்பிக்கையுடன் இருங்கள் இறைவனை நம்புங்கள் .

கருமுட்டை பற்றிய சந்தேகங்களுக்கு http://www.arusuvai.com/tamil/node/22151

எதனை நாள் கர்ப்பம் டெஸ்ட் எடுப்பது http://www.arusuvai.com/tamil/node/18256

கருமுட்டை வளர என்ன செய்யவது http://www.arusuvai.com/tamil/node/18256

மலை வேம்பு ஜூஸ் http://www.arusuvai.com/tamil/node/18256

ஐ யு ஐ என்றால் என்ன? http://www.arusuvai.com/tamil/node/32907?page=3

iui-stomak pain http://www.arusuvai.com/tamil/node/32508?page=4

குழந்தை எதிர்ப்பார்கும் கவனத்திற்கு http://www.arusuvai.com/tamil/node/13942

இது ஏற்கனவே இருக்கு இது தேவை இல்லை என்று நினைத்தால் இதை நீக்கி விடலாம் பல தோழிகள் நான் லிங்க் கொடுத்தும் அதை அவர்களால் கவனிக்க முடியவில்லை காரணம் ஒரு வேலை இது தோழிகளின் இழையில் கருத்து தெரிவிற்கும் இழை நடுவுல உள்ளதால் அவர்கள் கண்ணில் பட வாய்ப்பு குறைவாக இருக்கலாம் அதனால் இதற்கு என்று புதிய இல்லை உருவாக்கி பதிவு பண்ணி இருக்கேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

அன்பு தோழிகளே மாதவிடாய் நேரத்தில் உறவு கொன்டால் குழந்தை உடனே இருக்கும் என்று சொல்லுகிறார் அது சரியா மாதவிடாய் நேரத்தில் உறவு கொன்டால் குழந்தை கண்டிபாக இருக்குமா இதற்கு பதில் சொல்லுங்க pls இல்லைனா இது தப்பா

//குழந்தை உடனே இருக்கும்// புரியவில்லை. அந்தச் சயம் நிச்சயம் கருத்தரிப்பீர்கள் என்று யாராவது சொன்னார்களா? இல்லை. மாதவிலக்கு சமயத்தில் கருத்தரிக்க முடியாது. (வெகு அருமையாக, அதிசயமாக யாருக்காவது இப்படி நடக்கலாம்.)

மாதவிலக்கின் போது, கருக்கட்ட முட்டைக் கரு இராது. இருந்தாலும் இரத்தம் வெளியேறும் சமயம் என்பதால், விந்து கருப்பையின் உள்ளே தங்குவதற்கான சாத்தியங்கள் குறைவு. அது கருப்பைச் சுவர்ப் படை உரிந்து வெளியேறும் காலம். கரு பதிந்து வளர கருப்பைச் சுவர் தயாராக இராது.

இரட்டைக் கருப்பை உள்ளவர்கள் எப்போ வேண்டுமானாலும் கருத்தரிக்கும் சாத்தியம் இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

மாதவிடாய் நேரத்தில் உறவு கொள்வதால் infection ஆகும் என்று சொல்வார்கள். நீங்கள் மாதவிடாய் முடிந்து 4 அல்லது 7 நாட்களில் சேர்ந்து இருங்கள்.

OK imma sister.but periyavanga ellarum solranga period mudinthu 3 or 4th day sernthal Karu nikkum endru.Enaku ithu varaikum 12 per sollitanga

@ dhanalakshmi-mdu

//மாதவிடாய் நேரத்தில் உறவு கொன்டால் குழந்தை உடனே இருக்கும் என்று சொல்லுகிறார் அது சரியா மாதவிடாய் நேரத்தில் உறவு கொன்டால் குழந்தை கண்டிபாக இருக்குமா// இது தான் நீங்கள் முதலில் கேட்டிருந்த கேள்வி. என் பதில் அந்தக் கேள்விக்கானது.

//but// ;)))) அதே கேள்விக்கு என் பதில் தப்பாக இருந்திருந்தால் நீங்கள் 'பட்' என்று ஆரம்பித்துக் கேள்வி கேட்டிருக்கலாம். :-)

//period mudinthu 3 or 4th day sernthal Karu nikkum endru.Enaku ithu varaikum 12 per sollitanga// 'பட்' யாராவது ஒருவர் வந்து இங்கு நீங்கள் இரண்டு இடத்திலும் ஒரே கேள்வியைத் தான் வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லட்டும் பார்க்கலாம்.

//மாதவிடாய் நேரத்தில்// என்பதும் //period mudinthu 3 or 4th day// இரண்டும் ஒன்று இல்லை தானே! :-) '0' என்பதும், '3'ம் '4'ம் ஒன்றல்ல.

உங்களுக்கு பதில் சொன்ன இமாவுக்கு... நாலு குட்டு குட்டீரலாமா! :-) //periyavanga ellarum solranga// இமா ரொம்ப சின்னப் பொண்ணு. உங்க கேள்வியைத் தப்பா புரிஞ்சுட்டேன். மன்னிச்சு விட்டுருங்க. :-)

‍- இமா க்றிஸ்

ok imma sister ungala kolapura madiri kelvi ketruntha.... sorry...ennoda question periods mudinju 4th day menses light ah irukumla appo sernthal athu observe pannum nu solranga...unga anubavathula itha neenga kelvi patrukeengala?

//athu observe pannum// :-) எனக்கும் தமிங்கிலத்துக்கும் வெகு தூரம் கண்ணா. ;-( நீங்க தமிழில் போட்ட கேள்வியையே சரியா புரிஞ்சுக்கல நான். ம்ஹும்! விட்டுருறேன். வேற யார்ட்டயாவது கேளுங்க.

‍- இமா க்றிஸ்

ok imma sister...enakkum tamil typing kum vegu thooram...so thanks for your response.

முதலில் இமா சிஸ்டர் இல்லை இமா அம்மா..அவங்களுக்கு உங்க அம்மாவை விட வயது அதிகம்.அறுசுவைக்கு இன்னொரு அட்மின் மாதிரி .உங்களுக்கு தேடி வந்து பதில் குடுத்து இருகாங்க .அனுபவம் மிகுந்தவங்க சொல்லுறதை கேளுங்க .முதல் கேள்வி மாதவிடாய் நேரத்தில் உறவு கொள்ளலாமா என்று கேட்டு விட்டு இரண்டாம் கேள்வி மாதவிடாய் முடிஞ்சு என்று தான் கேட்டு இருக்குறீங்க.மாதவிடாய் நேரத்தில் உறவு கொண்டால் உங்களுக்கும் கம்போர்ட்டபிள் இருக்காது ..இன்பெக்சன் வர வாய்ப்பு தான் நிறைய....உங்களுக்கு புரியற மாதிரி சொல்லனும்னா மாதவிடாய் நேரம் என்பது கருப்பை பழைய கழிவுகளை சுத்தம் செய்து கொண்டு இருக்கும் நேரம்.அப்போ விந்து அணு போனாலும் அதனால் பலன் இருக்குமா?உங்கள் சொந்தக்காரர்கள் சொன்னால் முயற்சித்து பாருங்கள் அது உங்கள் விருப்பம் ...all the best

hello susi, imma sister ah illa imma ammava nu chatting la theriyathu ok va.eppdi pregnancy cycle epdi nadakuthunu nallave enakkum theriyum susi sister.ennoda doubt ah ketruken. may be avanga yes possible nu avanga answer panni irunthal athu eppidi possible nu avanga kitta explanation ketrupen.thats all

மேலும் சில பதிவுகள்