ஸ்பெசல் சிக்கன் பிரியாணி.

தேதி: February 28, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சீரக சம்பா அரிசி - 1/2 கிலோ,
சிக்கன் - 1/2 கிலோ,
முட்டை - 3,
பெரிய வெங்காயம் - 3,
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 5,
தேங்காய் - 1 ஸ்பூன்,
இஞ்சி - 1 அங்குல துண்டு,
பூண்டு - 10 பல்,
பச்சை மிளகாய் - 8,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
கசகசா - 1/2 டீஸ்பூன்,
தயிர் - 1கப்,
சிவப்பு கலர் கேசரி பவுடர் - 1 டீஸ்பூன்,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
ஏலக்காய் - 2,
பிரிஞ்சி இலை - சிறிது,
புதினா - 1 கைப்பிடி,
கொத்தமல்லி - 1 கைப்பிடி,
எலுமிச்சம் பழம் - 1,
முந்திரி - 8,
பாதாம் - 5,
எண்ணெய் - 4 ஸ்பூன்,
நெய் - 2 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.


 

அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
பூண்டு, இஞ்சியை அரைத்து வைக்கவும்.
சிக்கனை கழுவி சிறிது தயிர் சேர்த்து பிசறி வைக்கவும்.
பெரிய வெங்காயத்தையும், 4 பச்சை மிளகாயையும் நீளமாக நறுக்கி வைக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
சோம்பு, கசகசா, தேங்காய், சிறிய வெங்காயம், பாதி பட்டை, 1 கிராம்பு, 1 ஏலக்காய், பாதி கொத்தமல்லி, புதினா, 4 பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைக்கவும்.
பெரிய பாத்திரத்தில் பாதி நெய், எண்ணெயை விட்டு காய்ந்தவுடன் மீதி பட்டை, கிராம்பு,ஏலக்காய்,பிரிஞ்சி இலை சேர்க்கவும்.
பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன், பச்சை மிளகாய், தக்காளி, மீதி கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
சிறிது நேரம் வதக்கிய பின், அரைத்த மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
வதக்கியபின், சிக்கன் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.
முட்டை பொடிப்பொடியாக ஆனபின், தயிர் சேர்த்து கிளறவும்.
2 நிமிடம் கழித்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதிக்கும் போது, அரிசியை போட்டு மூடி வைக்கவும்.
அரிசி 3/4 பதம் வெந்தவுடன், கேசரி பவுடர், உப்பு சேர்த்து கிளறி மூடவும்.
5 நிமிடம் கழித்து நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், நெய், எலுமிச்சம் பழசாறு சேர்த்து கிளறி 10 நிமிடம் தம்மில் வைத்து இறக்கவும்.


தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை மூடி மேலே ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்தால் தம் ஆகிவிடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு தோழி, ,ஸ்பெசல் சிக்கன் பிரியாணி மைக்ரோவேவ்- ல் செய்தேன். ரொம்ப சூப்பரா இருந்தது. ரொம்ப நன்றி செந்தமிழ் செல்வி.

அன்பு தோழிகளே,

ஹாய் விஜி,
பாராட்டுக்கு நன்றி. அப்படியே ஸ்டெப் - பை - ஸ்டெப் ஃபோட்டோ எடுத்திருந்தா யாரும் சமைக்கலாமில் போட்டிருக்கலாமே?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

இன்று ஸ்பெசல் சிக்கின் பிரியாணி செய்தேன் மிகவும்
சுவையாக இருந்தது.முட்டை போடுவதால் வித்தியாசமான சுவையாக இருந்தது.காரம் குறைவாக
இருந்தது.மகனுக்கு நன்றாக பிடித்துக் கொண்டது.
உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

அன்பு வத்சலா,
இது ஒரு பெரிய ஹோட்டலின் ஸ்பெசல் பிரியாணி. உங்களுக்கு போட்டியா ஹோட்டல் ஆரம்பிக்க மாட்டேன், சும்மா வீட்டில் செய்து பார்க்க தான்னு சொல்லி குறிப்பை வாங்கினேன். மகனுக்கும் பிடித்ததில் சந்தோஷம். அப்ப அடிக்கடி செய்யுங்க.
பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அக்கா மிகவும் ருசியான அருமையான பிரியாணி.அனைவரும் விரும்பி சாப்பிட்டனர்.நான் தம் போடலை.குக்கர்ல வைச்சிட்டேன்.நேரம் இல்லாதனால குக்கர்ல 3 விசில் விட்டு நிறுத்திட்டேன். அப்புறம் இங்க சீரக சம்பா அரிசி கிடைக்கலை.அதனால பாசுமதி அரிசில செய்தேன்.நல்ல அபாரமான சுவை.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

ஹாய் திவ்யா,
பொண்ணு நலமா? ரொம்ப வித்யாசமான சுவையில் இருக்கும் இந்த பிரியாணி. வீட்டுக்கு விருந்தினர் வந்தாங்கன்னா, இந்த முறையில் தான் செய்வேன். பாசுமதி அரிசியிலும் செய்யலாம். சீரக சம்பான்னா இன்னும் சுவை அதிகம். பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

yes Dear selvi,I am great fan of all your recepies,I tried this briyani and it was one of the best I have tried.My kids,hubby all enjoyed it very much.Now every weekend I am trying all of your recepies.Thankyou very much. Regards Indra

yes