பாதாம் பிசின்

தோழிகளே நீங்கள் பாதாம் பிசின் உபயோகித்துள்ளீர்களா அதை பற்றி விளக்கவும்

இங்கே பாதாம் பிசின் பற்றி நிறைய பேசியிருக்காங்க..மேலே சர்ச் பாக்ஸில் பாதாம் பிசின் என்று போடுங்க..நிறைய வரும்..ஏதும் கிடைக்கலையென்றால் சொல்லுங்க.. அதைப் பற்றி சொல்றேன்..

அவந்திகா

பாதாம் மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் தான் இது.

ஓரளவு சின்னதாக உடைத்து ஊற விட்டால் ஆறு, ஏழு மணி நேரத்தில் ஜெலி போல மென்மையாகி பெரிதாகி இருக்கும். சர்பத், ரோஸ்மில்க், ஜிகர்தண்டா போன்ற பானங்களின் மேல் போட்டுப் பரிமாறுவார்கள்.
http://www.arusuvai.com/tamil/node/18205
www.arusuvai.com/tamil/node/26058
www.arusuvai.com/tamil/node/9407

இதைக் கரைத்து முட்டை வெள்ளைக் கருவுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். http://www.arusuvai.com/tamil/node/27188

மிட்டாய்த் தயாரிப்புகள், சூயிங்கம் என்று பல உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. உணவுப் பொருள் என்பதற்கு வெளியே இதற்குப் பல பயன்பாடுகள் உள்ளன.

இப்போது பெரும்பாலும் எல்லா பலசரக்குக் கடைகளிலும் கிடைக்கின்றன. வேறு வேறு அளவுகளில் உடைத்தும் மாவாகவும் விற்கிறார்கள். பாதாம் பிசின் பயன்படுத்தும் எல்லா இடங்களிலும் 'கம் அரபிக்' பயன்படுத்தலாம்.

‍- இமா க்றிஸ்

தங்கள் கருத்திற்கு நன்றி

thanku

பாதாம் பிசின் மிகுந்த‌ மருத்துவப் பயன் உள்ளது. உடற்சூட்டைக் குறைக்கும். அல்சருக்கு மருந்து, இரத்தபேதியை நிறுத்தும். வயிற்று எரிச்சலை நீக்கும். கெட்ட‌ கொழுப்பை நீக்கும். உடல் எடையைக் கூட்டும். எலும்புக்கு நல்லது. வட‌ இந்தியர்கள் இதை நெய்யில் வறுத்து
பொடித்து வெல்லத்தோடு சேர்த்து லட்டு செய்து கருவுற்ற‌ பெண்களுக்கு
உண்ணக் கொடுப்பார்கள்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்