7 மாத குழந்தைக்கு சத்துமாவு

என் பாப்பாக்கு 7 மாதம் ஆரம்பம்..சத்துமாவு ரெடி பண்ண என்னென்ன தானியம் சேர்க்க வேண்டும்..எப்படி சத்து மாவு ரெடி பண்ணுவது.. வேறு என்ன திட உணவுகள் கொடுக்கலாம்? Please answer friends

http://www.arusuvai.com/tamil/node/1872
இது உங்களுக்கு உதவலாம்.
சத்துமாவிலுள்ள‌ தானியங்களை தனித்தனியாக‌ கொடுத்துப் பார்த்ததன் பின் கொடுப்பது நல்லது.

சத்துமாவு பாக்கெட் வாங்கி அரைத்தால் அதில் உள்ள‌ வேர்க்கடலை, பாதாம், ஏலம் இவற்றை நீக்கி விடவும். வேர்க்கடலையில் சொத்தைக்
கடலையும், பாதாமில் கசப்புச் சுவையுடைய‌ பருப்பும் இருக்க‌ வாய்ப்பு
உண்டு, ஏலம் சேர்த்தால் கஞ்சியை பால் கலந்து மட்டுமே தர‌ முடியும்.
ஆனால் இவை மூன்றையும் தனியாக‌ அரைத்து வைத்துக் கொண்டு
வேண்டும்போது சேர்த்து பால் கஞ்சியாகத் தரலாம். இவை மூன்றும்
இல்லாமல் அரைத்தால் இந்தக் கஞ்சியோடு, பால், மோர், சூப் வகைகள்
பருப்பு, கீரை, என்று எதோடு வேண்டுமானாலும் கலந்து தரலாம்.
இனிப்பு, கார‌ கொழுக்கட்டை. தட்டைகள், அடை வகைகள் என்று எப்படி வேண்டுமானாலும் தரலாம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நன்றிமா. என்னென்ன தானியங்கள் எவ்வளவு அளவு எப்படி தயார் செய்வது என்று ஒரு list குடுத்தா ரொம்ப உதவியாக இருக்கும். இங்கு எல்லாமே கிடைக்கும் நான் தனித்தனியாக வாங்கிக்கறேன்..

நன்றி gajany. நான் செக் பண்ணி பார்க்கறேன் ..

10 மாத குழந்தைக்கு ஃப்ரூன்ஸ் ட்ரை ப்ரூட் தரலாமா? ??

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

நடைமுறையில் இருக்கும் சத்து மாவோடு தனியாக‌ தற்பொழுது நமக்குக் கிடைக்கும் பாரம்பரிய‌ அரிசிவகைகளை வாங்கி (மாப்பிள்ளைச் சம்பா, சீரகச் சம்பா, குழி வெடிச்சான், கொத்தமல்லிச் சம்பா, கார் அரிசி‍ _ கருப்பு, சிவப்பு, சிவப்பு சோளம் போன்றவகைகள்)
இவற்றை வாங்கித் தனியாக‌ வறுத்து அரைத்து வைத்துக் கொண்டு
இதையும் கஞ்சியாகவோ முன்கூறியது போல் பல்வகை பணியாரங்களாக‌ செய்து தரலாம் என்பது என்கருத்து.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Poongai amma doubt clear pannunga pls.

உன்னுடைய‌ சந்தேகம் என்ன‌ என்று தெரியவில்லையே.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Amma yen Friend kulanthaiku 4 month start achu,milk kuraiva irukkunu cow milk kodukara bottle ippave use pannalamanu avaloda doubt.teeth munnadi varumnu payapara.

மேலும் சில பதிவுகள்