குழந்தைக்கு சாப்பிட‌

ஹலோ தோழிகளே

என் 3 வயது மகனுக்கு 5 நாட்களுக்கு முன் காய்ச்சல் வந்தது. டாக்டரிடம் காட்டினோம். காய்ச்சல் சரியாகி விட்டது. ஆனால் இருமல். எதுவுமே சாப்பிடுவதில்லை. நான் வேலைக்கு வந்து விடுவதால் பகலில் மாமியாரிடம் எதுவும் சாப்பிடுவதில்லையாம். அவனுக்கு பகலில் என்ன‌ குடுக்கலாம். சளி பிடிக்காத‌ பழ‌ வகைகள், உணவுகள் என்னென்ன‌ குடுக்கலாம் உதவுஙள் தோழிகளே

சுரம் போனாலும் வாய்க் கசப்பு இருக்கும். இருமல் இருந்தால் சளி இருக்கும். சாப்பிடப் பிடிக்காது. மீறி வலுக்கட்டாயமாக‌ சாப்பிட‌ வைத்தால் வாந்தி எடுப்பார்கள். உணவு, புழுங்கல் அரிசிக் கஞ்சி,
இடியாப்பம். இட்லி, அதிகக் காரம் இல்லாத‌ தக்காளி ரசம் மிளகு சீரகம் பூண்டு சேர்த்த‌ ரசத்தை மேற்கூறிய‌ உணவுகளோடு சேர்த்துத் தரலாம்.சாத்துக் குடிப் பழம் மட்டுமே இப்போதைக்கு மிகவும் நல்லது.
காய்கறிகளை சூப் வைத்து மிளகு சீரகம் பொடி சேர்த்து அரை டம்ளர்
மட்டுமே ஒருதடவைக்கு குடிக்கவையுங்கள், தக்காளி சூப்பில் தூதுவளைக் கீரையை சேர்த்து சூப்பை மட்டுமே குடிக்கவையுங்கள்.
அதேபோல் குப்பைமேனிக்கீரையயும் சூப்பாகக் கொடுங்கள், இரண்டு
கீரைகளுமே சுரத்தை நீக்கும், இருமலை நீக்கும், சளி இருந்தால்
வாந்தியாகவோ அல்லது மலத்தின் மூலமாகவோ கட்டாயமாக‌ வெளியேற்றி விடும். வயிற்றில் பூச்சி இருந்தால் குப்பைமேனி அவற்றைக் கொன்று விடும் . எளிய‌ வீட்டு வைத்தியம். பாலைக் குழந்தைகள் இப்போது குடிக்க‌ விரும்பமாட்டார்கள். அச்சப்படத்
தேவையில்லை.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

இதையே 11 மாத‌ குழந்தைக்கும் தரலாமா? ஒருமுறைக்கு குப்பைமேனிக்கீரை \ தூதுவளைக் கீரை எத்தனை கொடுக்கலாம்?

அன்புடன்
ஜெயா

சாத்துக்குடிப் பழம் அப்படியே சாப்பிட‌ குடுக்கலாமா அல்லது ஜூஸ் போடலாமா.
சாத்துக்குடி ஜூஸ் குடித்தால் சளி பிடிக்காதா?

பொதுவாக‌ மூன்று மாதம் வரையில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தாயின் உணவு முறைகளிலேயே மருந்தையும் சேர்த்து
விடுவதால் (பிரசவ‌ லேகியம், உரைமருந்து போன்றவை) அவ்வளவாக‌
குழந்தைக்கு என்று தனியாக‌ மருந்து தருவது இல்லை. இருந்தபோதும்
குழந்தைகளைக் குளிப்பாட்டும் அன்று உரைமருந்தைக் கட்டாயம் தருவார்கள், சளி பிடித்தால் தாய்ப்பாலில் குப்பைமேனிக்கீரை சாறு கலந்து குடிக்கவைப்பதைப் பார்த்திருக்கிறேன். அதேபோல் மலம் கழிப்பதில் சிக்கல் இருந்தால் தாய்ப்பாலில் ஒரு சொட்டு ஊறெண்ணெய் என்று அழைக்கப் படும் காய்ச்சி எடுத்த‌ விளக்கெண்ணெய் கலந்து
குடிக்கவைப்பார்கள். இரண்டு மூன்று முறை மலம் கழித்த‌ பின் சரியாகும். அதிக‌ சூட்டினால் ஏற்படும் தொல்லைகளும் நீங்கும்.
பொதுவாக‌ எந்த‌ மருந்திற்கும் கட்டுப்படாமல் அவ்வப்போது வந்து
ப்யமுறுத்தும் சுரங்களை அடியோடு போக்கவல்லது தூதுவளைக்கீரை. குப்பைமேனி ஒரு மிகச் சிறந்த‌ தோல் நோய் மருந்து. வயிற்றுப் பூச்சிகளை கொல்லும் அருமையான‌ மருந்து.
சளியைக் கரைத்து வாந்தி மூலமாகவும், மலத்தின் மூலமாகவும்
வெளியேற்றுவதிலும் முதன்மையான‌ மருந்து என்று தாராளமாகக் கூறலாம். இந்தக் கீரைகள் எல்லாம் உடலை முதுமை அடைவதை
தடுக்கும் காயகல்ப‌ மருந்தகளின் வகையைச் சார்ந்தவை.
சாத்துக்குடிப்பழம் குளிர்ச்சி இல்லாதது. சதைபகுதியைச் சுற்றி
இருக்கும் மெல்லிய‌ தோலையும் உள்ளிருக்கும் கொட்டையை எடுத்து விட்டு அப்படியே சாப்பிடக் கொடுங்கள். மேற்சொன்ன‌ சூப் வகைகளையும் தரலாம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Amma yennoda paiyanuku 2 years complete aga poguthu kuppaimayni keerai yeppadi kodupathu saru mathiri mattum tha kudukka mudiuma pls sollunga

ஒருவயது வரை சாறாக‌ கொடுப்போம். அதற்குப் பிறகு மற்ற‌ கீரைகளோடு சேர்த்து பொரியல். கூட்டு. கடைந்தோ எப்படி (சூப்,முருங்கை கீரையோடு சேர்த்து சூப்பாகக் கொடுக்கலாம்.விஷக் கடிகளுக்கு உள்ம ருந்தாகவும், பலவியாதிகளுக்கு வெளிப்பூச்சாகவும்
பயன்படுகிறது ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி கீரை போதும.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Ok amma thank you

_/\_ வணக்கம் அம்மா.. எனக்கு டெலிவரி ஆகி 5 மாதங்கள் ஆகிறது.. தற்போது டெலிவரிக்கு பின்பு அடிக்கடி சளி பிடிக்கிறது.. அடிக்கடி சளி, காய்ச்சல் வருகிறது.. தற்போதும் சளியுடன் தான் இருக்கின்றேன்.. முன்பு (டெலிவரிக்கு) இது போல் சளி பிடிக்காது. அரிதாக எப்போதாவதுதான் பிடிக்கும்.. நான் இருப்பது சிறிது குளிர்ச்சியான பகுதி..அடிக்கடி தண்ணீரிலும் இருப்பதில்லை..சமையல் மட்டுமே நான் செய்வேன்.. மற்றவைக்கு ஆள் இருக்கிறார்கள்..சளி தீர, அடிக்கடி பிடிக்காமல் இருக்க ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா அம்மா? உதவ முடியுமா அம்மா?

அவந்திகா

அன்புள்ள‌ அவந்திகாவிற்கு, சளியும் காய்ச்சலும் குளிரினால் மட்டுமே
வருவது இல்லை. அதிக‌ சூட்டினாலும் வருவது உண்டு, குழந்தை பிறப்பிற்குப் பின் தாயின் உடலில் ஏற்படும் பலவீனம், நோய் எதிப்புத்
தன்மை குறைபாடு இவையே முக்கியக் காரணம் என்பது என்கருத்து.
முன்பெல்லாம்
தாய்க்கு பிரசவத்திற்குப் பின் பிரசவ‌ மருந்து கொடுப்பார்கள். அதனை உண்ணும் தாய்க்கும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கும் எந்த‌ நோயும் அண்டாமல் இருந்தது.
இப்போதும் எந்தக் கவலையும் வேண்டாம். முதல் வேலையாக‌
உங்கள் ஊரில் சித்தமருத்துவம், அல்லது ஆயுர்வேதமருத்துவம் இந்த‌
இரண்டு வைத்தியத்திலும் பிரசவ‌ லேகியம் கிடைக்கும். இந்த‌ இரண்டில் ஏதாவது ஒரு வைத்தியப் முறையில் பிரசவலேகியம் வாங்கி
அதில் மேலும் சிறிது தேனும், பசு நெய்யும் சேர்த்து அதில் கூறியுள்ள‌ முறைப்படி தினந்தோறும் அனேகமாக மூன்றுவேளையும் சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வரவும். லேகியத்தில் ஏறக்குறைய‌ 21
மருந்துகளுக்கு மேல் சேர்ப்பார்கள். அவற்றின் மருத்துவத்தன்மையால்
சளி சலதோஷ்ம் நீங்கும். அனேகமாக‌ சுரமே வராது உங்கள் பாலைக் குடிப்பதால் குழந்தைக்கும் நோய் எதிப்புச் சக்தி உண்டாகும்.
மேலும் அறுசுவையிலேயே நிறைய‌ மருத்துவக் குறிப்புகள் உள்ளன‌.
குழந்தை பிறந்த‌ பின் தாய்மார்கள் நிறைய‌ வெற்றிலை போடுவார்கள். அதனோடு சேரும் சுண்ணாம்பு பாக்கு இரும்புச் சத்தும் பாக்கின் துவர்ப்பு சத்தும் மற்றும் ஏலம் லவங்கம், பச்சைக் கற்பூரம்,வால்மிளகு, சாதிக்காய்,சாதிபத்திரி போன்றவை பிரசவத்திற்குப் பின்னால் வரும் அத்தனை தொல்லைகளயும் நீக்கும்
தினந்தோறும் ஏதாவது ஒரு கீரை வாரத்தில் குறைந்தது அரைக்கீரை
மூன்று நாளாக இருந்தால் நல்லது, அது குளிர்ச்சி சூடு என்று அனேகமாக‌ நடுநிலையான‌ கீரை. இரும்புச் சத்து, சிறந்த‌ மலமிளக்கி
நன்கு சீரணம் செய்யும், பாக்கு புழுக்கொல்லி, மிளகு விஷ நீக்கி,
பச்சைக்கற்பூரம் வைரஸ்கொல்லி, சாதிக்காய், சாதிபத்திரி நன்கு
உறக்கத்தை வரவைப்பவை ஏலம் லவங்கம் மனதிற்கு நிம்மதி தரும்
மேலும் விவரங்களுக்கு யூடுயுபில் நாட்டு மருத்துவம், பாரம்பரிய‌
மருத்துவம் பார்க்கவும். பப்பாளியை காயாக‌, பழமாக‌ எப்படியும்
வாரம் ஒருமுறை உண்ண‌ சளி சுரம் காணாமல் போகும். வருத்தம்
வேண்டாம்
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Hai poongothai amma good evening nan Madhu nan intha site KU new amma
Ungaludiya ideas neraiya nan padichen amma enakum neenga help pannanum pls UNGA advice enakum vendum enaku marriage aki 5 years akudhu 3 years la oru son irukan en marriage appa nan 55 weight irunthen ippa weight decrease akiduchu ippa ennoda weight 49 than . En hus KUm enakum problem ah iruku en weight decrease nenachu nan romba feel pantren nan weight increase Panna enna Pannalam nu idea sollunga pls enake en face pakka pidikala ma enakula iruka confiden kuda kuranchu pochu amma

மேலும் சில பதிவுகள்