5 மாத‌ கர்ப்பம்.. வறட்டு இருமல்

தோழிகளே,

எனக்கு 5வது மாதம் நடக்கிறது.. சளித்தொல்லையால் அவதிப்பட்டு வருகிறேன்.. இருமல் மிகவும் அதிகமாக‌ உள்ளது.. டாக்டரிடம் காண்பித்தும் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டும் குணமாகவில்லை.. அதிகமாக‌ இருப்பதாகவே தோன்றுகிறது.

கைவைத்தியங்களும் பலன் கொடுக்கவில்லை.. வெந்நீர் தான் குடிக்கிறேன்.. எனக்கு உதவ‌ முடியுமா?

இருமி இருமி அடிவயிறு மிகவும் வலிக்கிறது.. இதனால் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு வருமோ என்று பயமாக‌ இருக்கிறது..

ஏதேனும் வழி இருந்தால் கூறுங்கள். முயற்சி செய்து பார்க்கிறேன். ப்ளீஸ் !!

Immediately consult doctor...

மறுபடியும் மருத்துவரா ?

சரி போய் பார்க்கிறேன். பதிலுக்கு நன்றி

- பிரேமா

hi, prema how r u baby enna solranga, irumal adhigama irundha doctora poi parunga pls

ஹாய் வித்யா,

உங்ககிட்ட‌ பேசி எவ்ளோ நாள் ஆச்சு? எப்படி இருக்கீங்க‌?

குழந்தை நல்லா இருக்காங்க‌..

இருமலுக்கு டாக்டரை பார்த்துவிட்டேன் பா. மாத்திரை, இருமல் சிரப் தான் கொடுக்கிறார்கள். அதிலும் குணமாகவில்லை என்பதாலேயே இங்கு கேள்வியை வைத்தேன்.

இன்னும் சரியாகவில்லையென்றால் மருத்துவரை மீண்டும் பார்க்கவேண்டியது தான்.

எதாவது கை வைத்தியம் சரிவரும் என்று தோன்றுகிறது. மாத்திரை மருந்து பலன் அளிக்கவில்லை.

உங்களுக்கு எதாவது தெரிந்தால் சொல்லுங்கள் ..

- பிரேமா

பிரேமா எனக்கும் இருமல் தொல்லை இருந்தது டாக்டர் பார்தேன் மாத்திரை கொடுதாங்க ஆனால் சுடுதண்ணீர் குடித்ததனால் சரியானது எனது மருத்துவரும் அதை தான் கூறினார், நிங்க நன்கு காய்ச்சி குடிங்க சீக்கிரமா சரி ஆகிடு பயப்படாம இருங்க

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

ரொம்ப‌ நன்றி அனிதா..

கண்டிப்பா வெந்நீரையே பயன்படுத்துகிறேன். உங்கள் பதிலுக்கு மிக்க‌ நன்றி

- பிரேமா

enakku oru doubt,ungaloda karba kaala starting stage la,ungalukku entha madiri ellam iruntahthu nu konjam sonningana,enakku useful-ah irukkum ple mam

எனக்கு இருந்த‌ அறிகுறிகளை சொல்றேன்.. ஆனா நமக்கு இப்படி இல்லையே? நிஜமாகவே நாம‌ கர்ப்பமா தான் இருக்கோமா? அப்படின்னு நினைச்சு குழப்பிக்க‌ கூடாது.. ஏன்னா ஆரம்பத்துல‌ நானும் அப்படித்தான் நினைச்சு பயந்தேன்.

1. காலையில் பிரஷ் பண்ணும் போது (பேஸ்ட் ஸ்மெல்லுக்கு) ஒரு வித‌ குமட்டல் மற்றும் நீர்த்த‌ வாந்தி (கசப்பாக‌ வரும்)

2. உடல் சூடு அதிகமானால் லேசாக‌ வயிற்று வலி வரும். அப்போது வெந்தயம் போட்டு தண்ணீர் குடித்தால் உடனடியாக‌ சரியாகும். உடல் சூடு தணியும். இல்லையேல் மோரில் காயப்பொடி கலந்தும் குடிக்கலாம். தண்ணீர் நிறைய‌ குடித்தால் எந்த‌ பிரச்சனையும் வராது.

3. ஒரு நாளைக்கு 3 தடவை வாந்தி வரும். (எனக்கு) ஒவ்வொரு தடவையும் சாப்பிட்ட‌ பின் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு கொஞ்சம் நடக்க‌ வேண்டும். அப்போது தான் நல்லது. வாந்தி வருவதை சில‌ நேரங்களில் வாக் செய்வதால் தடுக்கலாம்.

4. உங்களுக்கு வாந்தி உணர்வு அதிகமாக‌ இருந்தால் சீரகத்தை லெமன் சாற்றில் ஊறவைத்து ஒரு தட்டில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு வாந்தி வருகிற‌ மாதிரி இருக்கும் வேளைகளில் அந்த‌ பொடியை சிறிது வாயில் போட்டு கொண்டால் வாந்தி வராது. ஜீரணமும் ஆகும்.

5. கர்ப்ப‌ கால‌ ஆரம்பத்தில் மலச்சிக்கல் எட்டிப்பார்க்க‌ ஆரம்பிக்கும். அதை தவிர்க்க‌ தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். கீரை அதிகம் எடுத்துக்கொண்டாலும் மலச்சிக்கலை தவிர்க்கலாம். உடம்புக்கும் குழந்தைக்கும் கீரை மிகவும் நல்லது.

6. பொரித்த‌ உணவுகள், ஜன்க் ஃபுட் என்று சொல்லப்படும் உணவுகள், இளநீர், பப்பாளி, அன்னாசி, சிக்கன் ஆகியவற்றை தவிர்க்கவும். உடல் சூடு அதிகமாகவும் இருக்க‌ கூடாது. அதிக‌ குளிர்ச்சியாகவும் இருக்க‌ கூடாது..

7. விரும்பியதை சாப்பிடுங்கள். ஆனால் 3 மாதம் வரை சிலருக்கு சரியாக‌ சாப்பிட‌ முடியாது. சாப்பாட்டை பார்த்தாலே குமட்டும். தாளிக்கிற‌ வாடை, பருப்பு வாடை, சாதம் கொதிக்கிற‌ வாடை, சில‌ வாசனை திரவியங்களின் வாடை எதுவும் சில‌ பேருக்கு பிடிக்காது. (எனக்கு அப்படித்தான் இன்னமும் இருக்கிறது)

8. சில‌ நேரங்களில் இனம்புரியா சந்தோஷம், சில‌ நேரங்களில் காரணமில்லாத‌ கோபம், எரிச்சல், எதிலும் நாட்டமில்லாமல் இருக்கும். (எனக்கு இரண்டு தடவை அவ்வாறு நடந்திருக்கிறது)

9. யூரின் அடிக்கடி செல்லும். அதற்காக‌ தண்ணீர் குடிப்பதை குறைக்க‌ கூடாது.

10. வயிற்றில் ஆண் பிள்ளையாக‌ இருந்தால் சரும நோய்கள் அதாவது சரும‌ பளபளப்பின்மை, சரும வறட்சி அரிப்பு இருக்கும் என்கிறார்கள். எனக்கு இல்லை.. பெண் பிள்ளையென்றால் முகம் பளபளப்பாகும். நிறம் அதிகரிக்கும். (எனக்கு இப்படி தான் இருக்கிறது என்று என் அம்மா சொல்கிறார்கள்)

11. சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். எனக்கு இதுவரை இருந்ததில்லை. மார்பகம் கனமாக‌ இருக்கும். தொட்டால் வலிக்கும்.

12. மாதம் செல்ல‌ செல்ல கால் வலி, கால் வீக்கம், மூச்சுத்திணறல் வரலாம். எனக்கு கால் வலி இருக்கிறது. அப்பப்ப‌ மூச்சுத்திணரல் உள்ளது அதற்கு காரணம் சளி. சளி பிடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

13. மாதா மாதம் சரியாக‌ மருத்துவரை செக் அப் காக‌ சந்திக்க‌ வேண்டும். உடலில் தெரியும் மாற்றங்களை மறக்காமல் டாக்டரிடம் தெரிவித்து ஆலோசனை பெற‌ வேண்டும். மறந்துவிடும் என்றால் குறிப்பு எழுதி வைத்துக்கொள்ளலாம்.

14. பிரக்னன்ஸி ஆப் ஐ ப்ளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு வாரத்திற்கான‌ உடல் மாற்றங்களையும் அடுத்த‌ வாரம் வரும் அறிகுறிகளை பற்றியும் தெளிவாக‌ போட்டிருப்பார்கள். அந்த‌ அறிகுறிகள் தோன்றலாம், இல்லாமலும் இருக்கலாம். ஒரு தகவலுக்காக‌ வைத்துக்கொள்ளலாம். (நானும் அந்த‌ ஆப் வைத்திருக்கிறேன். நமக்கு தெரியாத‌ அறிகுறிகள் வந்தால் கூட‌ அந்த‌ ஆப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நானும் தெரிந்து கொண்டேன்)

எனக்கு தெரிந்ததை சொன்னேன் பா. இன்னும் எதாவது இருந்தால் சொல்கிறேன். இந்த‌ அறிகுறிகள் தவிர‌ வேறு சில‌ அறிகுறிகளும் சிலருக்கு புதுசா வரும். அதனால் இந்த‌ தகவல்களை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஆராயவேண்டாம்.

குறிப்பு : இன்டர்நெட்டில் அறிகுறிகள் பற்றி அதிகம் தேட‌ வேண்டாம். சில‌ நேரங்களில் கை கொடுத்தாலும். சில‌ தகவல்கள் நம்மை குழப்பி கவலையடைய‌ செய்யும். என்ன‌ மாற்றங்களானாலும் மருத்துவரை கேட்காமல் எந்த‌ மருந்துகளும் எடுக்க‌ கூடாது. எதை சாப்பிட்டாலும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசித்தே சாப்பிட‌ வேண்டும். அடிக்கடி மருத்துவரை மாற்ற‌ கூடாது..

ம்ம்ம்ம்ம்ம்..அவ்ளோ தான் பா.. டேக் கேர்

- பிரேமா

ivlo visayam sollitu,avlothan pa nu solringa,
neenga sonnathula,breast pain & motion problem & adikadi urine porathu,intha 3-symptoms tha irukku.
vomit,thalai sutral,mayakkam ethum illa mam,
but neenga sonna visayam enakku usefulla irukku..
enakaga time othuki replay pannathuku,remba remba remba thanx mam...

இதுல‌ என்ன‌ திவ்யா இருக்கு? ஆரம்பத்துல‌ நானும் உங்கள‌ மாதிரி கேள்வி கேட்டுட்டே இருப்பேன்.

நான் சொன்னதுல‌ சில‌ அறிகுறிகள் தெரிய‌ இன்னும் சில‌ மாதங்கள் செல்ல‌ வேண்டும். கர்ப்ப‌ காலத்தை அனுபவியுங்கள்..

இந்த‌ நாட்கள்ல‌ வலி கூட‌ சுகம் தான் :‍)

- பிரேமா

மேலும் சில பதிவுகள்