நன்றி பாபு அண்ணா

நன்றி பாபு அண்ணா உங்களைப் பற்றி கூறியதிற்கு.
யாரேனும் எனது சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள். சாதாரணமாக ஸ்பூன் என்றால் எனக்கு தெரியும். ஆனால் டீஸ்பூன் , டேபிள் ஸ்பூன் மற்றும் மேஜைக் கரண்டி இன்னும் வேற என்ன ஸ்பூன் எதேனும் இருந்தால் விளக்கமாக கூறவும்

அன்பு சுஜாத்தா, தாங்கள் பொதுவாக சமையல் உபயோகத்திற்க்கு பயன் படுத்தும் கரண்டிகளைப் பற்றி தான் விளக்கம் கேட்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன்.
தாங்கள் குறிப்பிடுள்ள ஸ்பூனும் தேக்கரண்டியும் கிட்ட தட்ட ஒரே அளவு கொண்டவையாகத்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். காரணம் பொதுவாக எல்லோரும் பரிமாறும் கரண்டிகளை தவிர மற்ற எல்லா கரண்டியையும் பொதுவாக சின்ன ஸ்பூன் என்றோ, பெரிய ஸ்பூன் என்றோ தான் அழைப்போம்.ஆனால் அளவுகள் என்று பார்க்கும் பொழுது தான் சரியான வடிவங்கள் தேவைப்படுகின்றது.உதாரணமாக:
ஒரு தேக்கரண்டி (one teaspoon)என்றால், ஐந்து மில்லி லிட்டர் (5ml)கொள்ளளவை கொண்டது.
ஒரு மேசைக்கரண்டி என்றால்(one tablespoon), மூன்று தேக்கரண்டிகளின்(15ml) கொள்ளளவை கொண்டது.
கால்க் கோப்பை என்றால் (1/4 cup)நான்கு மேசைக்கரண்டிகளின் (60ml)கொள்ளளவைக் கொண்டது.
ஆனால் திட, திரவ பொருட்களில் இந்த கொள்ளவுகளில் மாற்றம் இருக்கும். ஆகவே திட பொருட்களை அளப்பதற்க்கு எடைக்கருவியைப் பயன்படுத்தினால் தான் துள்ளியமாக இருக்கும்.
மற்றபடி வீடுகளில் குழம்பை பரிமாற பயன்படுத்தும் கரண்டியை குழிக்கரண்டி(serving spoon)என்றும் கூறுவோம். சுமார் ஒரு குழிக்கரண்டி என்றால் குறைந்தது மூன்று மேசைக்கரண்டியாவது அதன் கொள்ளளவு இருக்க வேண்டும். ஒகேவா, நன்றி.

மேலும் சில பதிவுகள்