அனைவருக்கும் வணக்கம்.உடல் எடை,தொப்பை,உடல் பருமன் ஆகியவற்றிற்கு முயற்சி செய்பவர்கள் ,முயன்று பலன் அடைந்தவர்கள் தங்கள் முறையை ஷேர் செய்யலாம்.
பழைய இழைகளிலுள்ள டிப்ஸ் நியாபகம் இருந்தால் ஷேர் செய்யுங்கள் தோழிகளே.
எனக்கு தெரிந்த அனைத்தையும் பதிவிடுகிறேன்.
அனைவருக்கும் இந்த இழை பயனுள்ளதாக இருக்க வேண்டும்..
Tips இருக்கும் பக்கங்கள்: 1,2,5,7,8,9,11,12.,
தொப்பை குறைய
1.ஆறு சின்ன வெங்காயம்,4 பல் பூண்டு நன்கு அரைத்து வைத்து ஒரு டம்ளர் கொதிக்கும் தண்ணீரில் போட்டு இன்னம் கொஞ்சம் கொதிக்க விட வேண்டும்.
கொஞ்சம் உப்பு சேர்த்து இறக்கி துணியால் வடிகட்டி பருகவும்.
2. இஞ்சி அரை கிலோ தோள் நீக்கி அரைத்து துணியால் வடிகட்டி சாறு எடுத்து நன்கு கொதிக்கவிட வேண்டும்.இரண்டு டம்ளர் தேனை அடுப்பை அனைக்கும் முன் ஊற்றி அனைத்து விடுங்கள்.ஆறியதும் ஒரு பாட்டிலில் ஊற்றி தினமும் காலை மாலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் 40நாளில் பயன் பெறுவீர்.
விரைவில் அடுத்த குறிப்பு...
தொடை சதை குறைய
தினமும் காலை மாலை பத்து தடாசனா(Tadasana) செய்தால் போதும்.
நின்று கொண்டே செய்யும் மிக எளிய ஆசனா.
பலன் நிச்சயம் உண்டு.
முகம் பொழிவு பெற
தினமும் இரவு தூங்கும் முன் அரை ஸ்பூன் ஆலிவ் ஆயில் முகத்தில் பூசி லேசா மஸாஜ் செய்யவும்.சுருக்கங்கள் இன்றி இளமையாக இருக்கலாம்.
இன்னொரு முறை:தினமும் அரிசி கழுவின நீரைக் கொண்டு முகம் கழுவிப் பாருங்கள்.மாற்றம் உணருவீர்கள்...
முகம் பொழிவு பெற
இந்திரா உங்கள் டிப்ஸ் எல்லாம் பயனுள்ளாதாக உள்ளது.முகம் பொலிவிற்கு எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.
2 ஐஸ்கட்டியை ஒரு காட்டன் துணியில் சுற்றி
முகத்தில் நன்கு ஒத்தடம் குடுக்க வேண்டும்.
ஐஸ் நன்கு கரையும் வரை செய்யனும்.பின்பு முகத்தை
நன்கு துடைத்து விட்டு சோற்றுகற்றாலை ஜெல்லை முகத்தில் Apply பண்ணணும்.அரை
மணி நேரம் கழித்து Face wash பண்ணவும்.இதை தொடர்ந்து Night time la தூங்கறத்துக்கு முன்னாடி பண்ணா நல்ல Result கிடைக்கும்.
Pimples,dark circles,block spots,ithellam iruntha cure agum.face nalla shine a irukum.1month try panna good result kidaikum.
Thanks nithi
Intha madhiri ice cubes vachi panna சுருக்கங்களும் மறையும்.
பிரசவத்திற்கு பின் வயிறு குறையவில்லையா
இரண்டு துப்பட்டாவை எடுத்து மேல் வயிறையும் கீழ் வயிறையும் இறுக்கிக் கட்டிக் கொண்டு அன்றாட வீட்டு வேலையைச் செய்து பாருங்கள்...பலன் கிடைக்கும்..வீட்டினுள்ளே நடந்துக் கொண்டிருங்கள்..
ஊளைச்சதை குறைய
தினமும் இரவில் கொஞ்சம் கொள்ளுவை ஊற வைத்து அந்த நீரை காலை வெறும் வயிற்றில் குடியுங்கள்..
உங்கள் எடை 70கிலோவுக்கு மேலா இனி கவலை வேண்டாம்
தினமும் காலை மாலை இரு வேலைகளிலும் இரண்டு டம்ளர் அல்லது அதற்கு மேல் oats கஞ்சி குடியுங்கள்.
நான்கு மாதத்தில் 25கிலோ நிச்சயம் குறையும்.
முடிந்தால் ஒரே ஒரு உடற்பயிற்சி செய்கிறேன்
நீங்கள் மிகவும் சோம்பேறியா?
உங்களுக்கான ஒரு பெஸ்ட் exercise
தினமும் மூன்று நிமிடம் தோப்புக்கரணம் போடுங்கள்.
கை,கால்,காது,தொப்பை,அனைத்துக்கும் தீர்வு...
செய்முறை:இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து கீழே உட்காரும்பொழுது மூச்சை இழுத்து எழும்பொழுது மெதுவாக விடவும்.பொறுமையாக செய்யவும்.இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் தொட்டுக்கொண்டு செய்ய வேண்டும்..
உதடுகள் சிவக்க
தினமும் இரவு தேங்காய் எண்ணெயுடன் ஜாதிக்காய் பொடியைக் குழைத்து பூசி வர உதடு சிவக்கும்
இரவில் கொத்தமல்லி இலை சாறை பூசினாலும் சிவக்கும்
வெண்ணெயை தடவி வர பளபளப்பாக மாறும்