2 வயது குழந்தை பேசவில்லை

நான் சவுதியில் இருக்கிறேன்
என் ஆண் குழந்தைக்கு இரண்டு வயது ஆகி விட்டது
ஆனால் ம்மா மட்டும் தான் சொல்கிறான்..
மற்ற எதுவும் இன்னும் பேசவில்லை..
அனைவரும் பயமுறுத்தும்படியே பேசுகிறார்கள்..
என்னால் முடிந்த அளவு நான் அவனுக்கு பேச சொல்லி
தந்து கொண்டு தான் இருக்கிறேன்.ஆனால் பேசவில்லை..
உங்களில் யாராவது இந்த நிலையை கேட்டதுண்டா்...
எதாவது தீர்வு இருந்தால் சொல்லுங்கள் தோழிகளே..

தாமதிக்காமல் ஒரு ஸ்பீச் தெரபிஸ்ட்டிடம் போவது நல்லது. ஒரு குழந்தை நல மருத்துவர் கூட போதும். அழைத்துப் போங்கள். தமிழர் ஒருவரிடம் செல்ல முடிந்தால் நல்லது.

‍- இமா க்றிஸ்

பயம் வேண்டாம்.. சில‌ குழந்தைகள் சீக்கிரமே நடந்துவிடும் ஆனால் பேசாது.. சில‌ குழந்தைகள் சீக்கிரமே பேசி விடும் ஆனால் நடக்காது.. தவழ்ந்தே இருக்கும். என் தோழியின் பையனும் இரண்டு வயது வரை பேசவில்லை.. அது கிராமம் என்பதால் டாக்டரிடம் அழைத்து செல்லாமல் அதுவாகவே தன்னாலே பேசி விட்டது..

நீங்க‌ இமா அம்மா சொன்ன மாதிரி ஒரு டாக்டர்கிட்ட கூட்டிட்டு போங்க‌. மற்றதை அவங்க‌ பார்த்துப்பாங்க‌. தைரியமா இருங்க‌.. உங்க‌ பையன் சீக்கிரமே பேசிடுவான்.

- பிரேமா

hi friend en paiyanuku 2 yr 7 months...he is also same problem....inga language vera...veetukullaye erukan....athunalathan late aguthu....en paiyan 8 monthslaye nadaka arambichuttan...but speech innum ila,,,,ipo onnu rendu words solran,,,,play schoool ponathum nalla pesuvanga...anga neraiya kids erupangla avangaloda vilayadina automatic vanthudum....i consult doc also...they told same....nenga pesite erunga,,,,avanga pesiduvanga

நன்றி

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

கவலை படாதீங்க தோழி எல்லா குழந்தையின்களும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க சரியாய் மற்றவர்கள் பயம் காட்டுறாங்கனு நீங்க மனசை கஷ்ட படுத்திக்காதிங்க என் குழந்தைக்கும் 15 மாதம் ஆகிறது அமைதியா இருக்க எப்பாவது தான் எதாவது உளறிட்டு இருப்பா உங்களுக்கு பயம் இருந்தால் நீங்க டாக்டரிடம் இதற்க்கு ஆலோசனை கேக்கலாம் அவர்கள் தான் இதற்கு சரியான ஒரு தீர்வு சொல்ல முடியும் தோழி

மேலும் சில பதிவுகள்