எதனால் அந்த நோய் வந்தது ? உதவுங்கள் நண்பிகளே?

என் பெண் குழந்தைக்கு வயது 5 . இருமல் என்று கை மருந்து கொடுத்து வந்தேன் ( இஞ்சி சாறு தேன், மிளகு தேன், மாதுளம்பழம் தேன் ) . வந்து சுகம் ஆகிடும். 4 மாதத்துக்கு முதல் சளி யால் அவதிப்படும் போது இங்க ஒரு அக்கா சொன்னா கற்பூரம் எண்ணையில் விட்டு காச்சி அதை பூசு சரியாகும் என்று. நான் 1ம் 1/2துண்டும் எடுத்து 1 மேசை கரண்டியில் காச்சி பிள்ளைக்கு நெஞ்சு 2 பக்கமும் , கழுத்தும், முதுகு பக்கமும் சூடு இருக்கும் போது தடவினேன் . ஆனாலும் சளியைமர இருமலும் குறையவில்லை. முதல் எல்லாம் சாதாரணமாக இருமலாக இருக்கும் ஆனால் இது ஏங்கி ஏங்கி 2நிமிடத்துக்கு தொடர்ந்து இருக்கும் . இப்படி இருமாத நாளே இல்லை . Doctor இடம் காட்டினதும் சாதாரண இருமல் என்று இருமல் மருந்து தருவார்கள் . அதற்கும் நிக்கவில்லை. எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு Doctor இருமுவதை நேரே பார்த்திட்டு அஸ்ம என்று ventoline Sirupe எழுதி தந்தார் . சுகமாகி திருப்பி திருப்பி வருகுது. நான் கற்பூரம் போட்டதால் இந்த பிரச்சனை என்று எனது அம்மா பேசுவார. சொல்லி தந்த அக்காவிடம் சொன்னேன் , கற்பூர எட்ணையோ அது சின்ன பிள்ளைக்கு போட கூடாது என்று மாத்தி சொல்றா. எனக்கு பயமாக உள்ளது இதனால் ஏதும் ஆபத்தா ? தெரிந்தவர்கள் சொல்லுங்கள் please!!

//இருமல் என்று கை மருந்து கொடுத்து வந்தேன்// வெகு சாதாரணமாக இருந்தால் கை மருந்துகள் கொடுக்கலாம். தொடர்ந்து இருந்தால் கொஞ்சம் யோசிக்க வேண்டும். இருமல், தடிமல் எல்லாம் மூச்சு தொடர்பான விஷயங்கள். கவனமாக இருங்க.

//எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு Doctor இருமுவதை நேரே பார்த்திட்டு// டொக்டரிடம் போகும் சமயம் இருமாமல் இருந்தால் அவர்களால் சரியாகக் கணிக்க முடியாது. இது, குழந்தை படும் சிரமத்தை நேரில் கண்டதால் கொடுத்த மருந்து தவறாகச் சாத்தியம் மிகக் குறைவு.

//அஸ்ம என்று ventoline Sirupe எழுதி தந்தார் . சுகமாகி திருப்பி திருப்பி வருகுது.// அஸ்மா திரும்பத் திரும்ப வரும் நோய்தானே! ஒரு தடவை கொடுக்கும் மருந்தோடு முற்றாக சரிவருவது கிடையாது. திரும்பவும் மருந்து கொடுக்க வேண்டும். "நெடுக வாற விஷயம்தானே! நாளைக்குக் காட்டுவம்," என்று விடக் கூடாது. உடனுக்குடனே காட்டுறது நல்லது. கஷ்டப்படுறது நீங்கள் இல்லை. சின்னவதான்.

எதனால் அஸ்மா வருகிறது என்பதைக் கண்டுபிடியுங்கள். ஏதாவது சரிவரவில்லையா? குளிப்பு முழுக்கு பிரச்சினையாக இருக்கிறதா? அல்லது இருமல் தடிமல் தொற்று வருவதைத் தொடர்ந்து வருகிறதா? கண்டுபிடித்தால் கவனமாக இருக்கலாம். இருமல் தடிமல் இருப்பவர்களிடமிருந்து குழந்தையைக் கொஞ்சம் எட்ட வைத்திருப்பது நல்லது.

//கற்பூரம் போட்டதால் இந்த பிரச்சனை// இல்லை. போடாமலிருந்திருந்தாலும் இருந்தேதான் இருக்கும். கற்பூரம் அந்த நேரத்துக்கு, அதுவும் கொஞ்ச நேரம் மட்டும் மூச்சை இலகுவாக்கி விடுமே தவிர பெரிதாக லாபம் எதுவும் இல்லை. இதையெல்லாம் பெரியவர்கள் முயற்சி செய்யலாம். சின்னப் பிள்ளைகளால், "நெஞ்சுக்குள்ள இறுகுது; குடையுது," என்றெல்லாம் சொல்ல ஏலாது. //கற்பூர எட்ணையோ அது சின்ன பிள்ளைக்கு போட கூடாது என்று மாத்தி சொல்றா.// :-) அவவில பிழை இல்லை. அவட பிள்ளைகளுக்கு இருந்த பிரச்சினைக்கு கற்பூர எண்ணெய் வேலை செய்திருக்கும். அதனால்தான் சொல்லியிருக்கிறா. அவவைக் கோவிக்காதைங்கோ. உங்களுக்கு அவ டொக்டர் இல்லையெண்டு தெரியும்தானே! தெரிஞ்சுதான் சொன்னதை நம்பினனீங்கள். :-)

//எனக்கு பயமாக உள்ளது// பயப்பட ஒன்றும் இல்லை.

//ஏதும் ஆபத்தா?// அஸ்மாவும் ஆபத்து இல்லை; கற்பூர எண்ணெய் பூசினதும் ஆபத்து இல்லை.

அஸ்மா... சரியானபடி தவிர்க்க வேண்டியதைத் தவிர்த்து கொடுக்க வேண்டிய சமயம் தாமதிக்காமல் மருந்தைக் கொடுத்தால் கட்டுப்பாட்டில் வரக் கூடியது தான். இனி எக்ஸ்பெரிமண்ட்ஸ் எல்லாம் வேணாம். கஷ்டப்படுறது பிள்ளை. அதுக்கு இன்னது செய்யுது என்று உங்கள்ட்ட சொல்லத் தெரியாது. பாவம். உங்களுக்கும் தெரியவராது. ஒழுங்கா டொக்டர்ட்ட காட்டி சொல்லுற மருந்தைச் சொன்ன மாதிரிக் குடுங்க.

//தெரிந்தவர்கள் சொல்லுங்கள்// எங்க இருக்கிறீங்கள்? ப்ரொஃபைலில ஒண்டும் காணேல்ல. நீங்கள் மொஸ்கிட்டோ கொய்ல் வைக்கிறனீங்களோ! வீட்டில எயா ஃப்ரெஷ்னர் ஸ்ப்ரே பண்றனீங்களோ! இதெல்லாம் பிள்ளைக்குக் கஷ்டம் குடுக்கும். சிலருக்குத் தலை வேர்த்தால் சரிவராது. புழுதி சரிவராது. கவனிச்சுப் பாருங்க.
~~~~
த்ரெட் தலைப்பைப் பொருத்தமானபடி மாற்றிவிடுங்கோ. தமிழில் தட்டினால் இன்னும் நல்லம்.

‍- இமா க்றிஸ்

சிரமம் பார்க்காமல் எனது கேள்விக்கு பதில் தந்தமைக்கு நன்றி . முதல் சாதரணமாகத்தான் இருமலாக இருக்கும் . கைமருந்துக்கு சுகமாகிடும் . கற்பூர எண்ணை போட்ட பிறகு அந்த இருமலில் வித்தியாசமாக இருந்தது அதனால் தான் சந்தேகமாக இருந்தது. நாங்கள் வெளிநாட்டில் இல் இருக்கின்றோம் .மொஸ்கிடோ கொயில், எயா ஃப்ரெஷ்னர் ஸ்ப்ரே ஒன்றும் பாயன்படும்துவது இல்லை. தலை முடி கூட நன்றாக வெட்டி உள்ளது , அதனால் தலைக்கு குளிக்க பார்ப்பதும் நன்றாக துடைப்பதும் அதனாலும் பிரச்சனை இல்லை இமா. விளையாடும் பொம்மைகள் தூசு என்று அதை கூட கட்டி எறிந்துவிட்டேன், தூங்கும்
அறை தூசு அதனாலோ என்று இடமும் மாறி பார்த்தேன் . ஒன்றும் சுகம் இல்லை. நேற்று மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட உடனடியாக மருத்துவமனை க்கு கொண்டு போனோம். அங்கு மூச்சை பார்க்க hard துடிக்கும் வீத்தத்தை scan பண்ணினார்கள். 1 நாள் நிக்க வைத்து மருந்து கொடுத்தார்கள். Doctor சொன்னார் சுவாசப்பாதை சுருங்கி உள்ளதாம். அதனால் சளி வராமதான் அந்த இருமல் என்று இப்போ spray ஒன்று தந்து உள்ளார் அதுப்புரவு குணமாகவில்லை என்றால் 2 week ஆனதும் வரட்டாம் பார்த்துட்டு X-ray பண்ணி பார்ப்பம் என்று. அந்த அக்கா மேல் கோவம் இல்லை அவ போடுங்க என்று சொல்லிட்டு இப்போ சின்ன பிள்ளைக்கு போட கூடா என்று சொன்னது மனதுக்கு கஸ்ரமாக இருந்தது. நான் கற்பூரம் பற்றி net இல் பார்த்ததும் அது கொடியாக நஞ்சு வீட்டில் வைக்க கூடாது என்று ஒரு சம்பவம் வாசித்து பார்த்ததும் அழுகைதான் வந்தது அதனால் தான் இந்த கேள்வி கேட்டேன் .

//spray ஒன்று தந்து உள்ளார் அதுப்புரவு குணமாகவில்லை என்றால் 2 week ஆனதும் வரட்டாம் பார்த்துட்டு X-ray பண்ணி பார்ப்பம் என்று.// நல்ல விஷயம். ஒன்றும் இல்லாமல் இருக்க வேணும் அன்று மன்றாடுகிறேன். அனேகம் இதுக்கு சரி ஆகும். சின்ன ஆள். கஷ்டத்தைச் சொல்லத் தெரியாது, பாவம். 2 கிழமைக்குப் பிறகு சரியாகி இருந்தாலும், பிறகு எப்ப இப்பிடி வந்தாலும் வைச்சிருக்காமல் கொண்டு போய் மருந்து எடுங்க.

சில நேரம் நாங்கள் பிரச்சினையாக நினைக்காத சின்ன விஷயம் ஏதாவது இருக்கும், சுவாசப்பாதையைச் சுருங்க வைக்க. கண்டுபிடிக்கிறது கஷ்டம். சமையல் வாசனை, பாவிக்கிற சோப், ஷம்பூ கூட சிரமம் தரலாம். நெடுக இப்பிடி இல்லாமல் இடையில் உடலில் வந்த மாற்றமாக இருக்கலாம். சரியாகிரும். நீங்கள் டொக்டர்ஸ் சொல்லுற மாதிரி பாருங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்