குழந்தைகள் சிறுவயதிலேயே திறமைசாளியாக

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள், அனைத்து தாய்மார்களுக்கும் தன் குழந்தையை சிறந்தவளாக வளர்க்க வேண்டும் அவர்களுக்கு நல்ல கல்வியையும் நல்ல ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டும் என விரும்புவார்கள். ஒரு சில குழந்தைகள் சிறு வயதிலேயே திறமைசாளியாக இருப்பார்கள் அதற்கு அவர்களின் பெற்றோர்கள் பங்கு அதிகமாக இருக்கும், அந்த வகையில் சிறுவயதிலேயே எந்த மாதிரியான பயிற்சி அளிக்கலாம் அதனை எந்த வயதிலிருந்து ஆரம்பிக்கலாம்,அல்லது அப்படி ஏதும் தேவையில்லை குழந்தைகள் அவர்கள் பாட்டிற்க்கு வளரட்டும் என்கிரீர்களா எனக்கு இதை பற்றிய அறிவுரை தாருங்கள் இது அனைத்து தாய்மார்களுக்கும் உதவும்

Babies parents kitta irundhu dhon discipline kathukaraga .evlo periya school la padika vechalum parrents kitta irundhu dhon discipline varum.ex = baby's munnadi parrents pesara words dhon avaga school la nd friends kitta adhe mari pesuvaga so parents nd veetla iruka periyavaga dhon discipline kathu tharanum

சுவாதி சரியா சொன்னிங்க நம்ம பழக்கவழக்கங்கள் தா நம்ம குழந்தைகளுக்கு வரும்

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

Baby brilliant uh varathuku avaga concentration nd interest venum sis .oru activity mela avagaluku interest venum nd full concentration irundha avaga epovume best dhon sis .parrents dhon engarage pannanum engarage panna panna dhon avagaluku interest valaraum sis.

//அறிவுரை தாருங்கள்// கற்றல் நிச்சயம் தேவை. பாடசாலை வயதிற்கு முன்பான‌ கற்றல் விளையாட்டுடன் சேர்ந்ததாக‌ இருக்க‌ வேண்டும்; பிள்ளைகள் விரும்பும் விதமாக‌ இருக்க‌ வேண்டும். எதுவும் ஒரு அளவோடு இருக்கட்டும். குழந்தைகளை வற்புறுத்த‌ வேண்டாம். மற்றவர்கள் முன் காட்சிப் பொருளாக்க‌ வேண்டாம். குழந்தைக் காலம் போனால் வராது.

‍- இமா க்றிஸ்

Baby thala strong aga evlo months agum sis.

40 to 50days la strong agirum swati

சரிதா சுவாதி எது செய்தாலும் அவர்கள் விருப்பத்தோடு செய்தா நல்ல பலன் கிடைக்கு,நம்ம ஊக்குவிப்பு ரொம்ப முக்கியமான ஒன்று இமா அம்மா நிச்சயமாக நா கட்டாயபடுத்த மாட்டே,எனக்கு குழந்தை கத்துக்கனும் அவங்களுக்கு விளையாட்டின் மூலமாக நான் ஏதாவது கற்றுத்தரவேண்டும் என விரும்புகிறேன் அதனால எந்த மாதிரியான விளையாட்டு பொருட்கள் வாங்கிதரலாம்,எதனை அவர்களுக்கு கற்றுத்தரலாம்,எந்த வயது சரியானது என தெரிந்தால் சொல்லுங்க மா அதோடு இதன் மூலமாக குழந்தைகள் கல்வியை கற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ இது மூலமா அவங்களுக்கு மூளைக்கு வேலை கிடைக்கு,யோசிக்கும் திறன் அதிகரிக்கும்னு நம்பறே,ஆனா நீங்க சொன்ன மாதிரி ஒரு விளையாட்டா தா கற்றுத்தரனும் அம்மா

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

1.குழந்தைகளை குழந்தைகளாகவே வாழ விடுங்க.3 வயது குழந்தைக்கு 5 வயது அறிவு இருந்தால் , 30 வயதில் 45 வயதுககான அமைதி வரும்.ஒரு வித மழலை தன்மை இருக்காது.
2.குழந்தைங்க பெற்றோர் (60%) , TV/friends (20%) Teachers(10%) self (10%) கத்துப்பாங்க.இதுல செல்ஃப்..தானாகவே யோசிக்கும் திறன் நாமதான் வளர்க்கனும்.உதாரணம்.கதவு மூடு. இத கதவ மூடுங்க குட்டி.இல்லன்னா என்னாகும்னு அம்மாக்கு பாப்பா சொல்லுவாங்களம்.எதிர்காலத்தில ஒரு செயலை செய்யும்போது வரும் பின்விளைவுகளையும், ஒரு பொருளை இழந்தால் வரும் இழப்புகளும் புரிய ஆரம்பிக்கும் .
3.பெற்றோர் எல்லா நேரமும் கூட வர முடியாது.நம்ம மேற்பார்வையில் அவங்களாவே பண்ணனும்.
4.படிப்பு படிப்புனு உயிர வாங்க கூடாது..இப்போ ட்ரெண்ட் இதுதான்.விதிவிலக்கு உண்டு.But படிப்பு மதிப்பெண் விரும்பிய துறை தேர்ந்தெடுக்க முக்கியம்னு 1படிவத்திலேயே ஏத்திடனும்பா.
5.குழந்தைக்கு எதுல இன்ட்ரெஸ்ட்னு பாருங்க.பெற்றோர் விருப்பம்,திறமை குழந்தைக்கும் இருக்கும்.முதல்ல அத வளர்க்கணும்.நீங்க பாடுனா, குழந்தைக்கும் ஒரு பாட்டு கிளாஸ் போடுங்க வீட்டு பக்கத்தில.art craft coloring .அரிசி பருப்பு நெத்தி பொட்டு பிடித்த வடிவங்கள்ள ஒட்ட வைக்கறது.பள்ளி ஆக்டிவிட்டீஸ் அவங்களையே பண்ண வைக்கறது.அது சரியாவே இல்லன்னாலும் கைத்தட்டறது.ஓவிய பயிற்சிக்கு அனுப்பி ஓவிய போட்டியில் பரிசு வாங்காட்டியும் பாடநூல் அறிவியல் படங்களை தேர்வின்போது அழகாக,வேகமா வரையர திறமைய பெற்றோர் பிள்ளைங்கட்ட வளர்த்துடனும்.
6.உடல்பயிற்சி : walking running cycle கராத்தே, கம்பு சுத்தரது,இப்டி எதாவது ஒன்னு அவங்க இஷ்டபடி .பாதில நிறுத்தாம , ஆரோக்கியத்துக்கு உதவர மாதிரி .
7.Above all , 1 டம்ளர் = நம்ம மூளை. 1 டம்ளர் தண்ணீயோ இளநீரோ காப்பியோ நாம வைக்கறதுதான்.மூளையிலயும் எல்லாத்தயும் போட்டுக்க முடியாது.எது குழந்தைக்கு பிடிக்கும்.எது குழந்தைக்கு உதவும்னு பாருங்க.எல்லார்க்குமே ஒரு கெப்பாசிட்டி இருக்கு.அந்த எல்லைக்குள்ள செமயா செய்யணும்.எனது கருத்து.விதிவிலக்கு/மாற்று கருத்து இருக்கலாம்.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

1.வண்ணம் தீட்டுதல்.கவன குவிப்ப்பிற்கு சரியான ஒன்று .30 நிமிடமோ 5 நிமிடமோ ஒரு வேலைய உக்கார்ந்து முடிக்கணும்.
2.கலர் கலர் பந்து 10. தூரமா நின்னுகிட்டு ஒரு புத்தம் புதிய குப்பைகூடையில் போடனும்.அப்போ கலர், எண்ணிக்கை சொல்லு கொடுக்கலாம்.
3.ஒரு டப்பில் மண் நிரப்பி கைகளை அளைய விடலாம்.அதுலயே ஒரு குச்சி வைத்து லெட்டர்ஸ் எழுத வைக்கணும். வடிவம் முக்கியம்.அளவு இல்ல. பேப்பரில் எழுதும் போது சரிபண்ணிக்களாம்.
4.டான்ஸ்-வெஸ்டர்ன்,பரதநாட்டியம் டிவி பார்த்தே ஆட விடலாம்.ஒரே பாட்டு நிறைய தடவ.You can notice your child memory .ஸ்டெப்ஸ் மறக்காமல் ஆடராங்களான்னு பாருங்க.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

ஜெயா மிக்க நன்றி அருமையான விளக்கம் கொடுதிங்க

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

மேலும் சில பதிவுகள்