ஹலோ தோழிகளே
என் அண்ணன் அதிக குடிப்பழக்கம் உள்ளவன். திருமணம் ஆகவில்லை. எல்லாரையும் முகத்தில் அடிப்பது போல் பேசுவான். அவனுடைய நடவடிக்கையால் நான் அவனை வெறுத்தே விட்டேன். இப்பொழுது என் கணவருக்கும் மதுப்பழகத்தை ஏற்ப்படுத்துகிறான். என் கணவர் பீர் மட்டும் குடிப்பார். நான் தடுத்தால் வேலை களைப்பு அதனால் என்று நான் சொல்வது எதுவும் கேட்ப்பதில்லை. சில நேரங்களில் உன் அண்ணனின் நடவடிக்கை சரி இல்லை என்று என்னிடம் சொல்லுகிறார். ஆனால் அவன் வந்தால் அவனுடன் சென்று மது அருந்துகிறார். நேற்று குடித்து விட்டு ஒரே வாந்தி. என் அண்ணனை திட்டினால் நீ செய்த சமயலினால் தான் வாந்தி எடுக்கிறார் என்று அண்ணன் என் மீது பழியை போடுகிறான். அண்ணனின் சில தகாத நடவடிக்கையால் நானே அண்ணன் வேன்டாமென்று முடிவெடுத்து விட்டேன். சந்தோஷமாக இருக்கும் என் குடும்பத்தில் என் அண்ணன் குழப்பத்தை ஏற்ப்படுத்துகிறான். என்ன செய்வதென்றே தெரியவில்லை ஆலோசனை கூறுங்கள் தோழிகளே
சங்கீதா
உங்கள் பதிவை படித்தேன்.
உங்கள் அண்ணன் அதிக குடிப்பழக்கம் உள்ளதாக கூறியிருக்கிறீர்கள். அவர் குடிக்கும் நேரத்தில் மற்றவர்களை மதிக்காமல் பேசுகிறாரா இல்லை எப்போதுமே அப்படி தான் இருப்பாரா?
//என் கணவர் பீர் மட்டும் குடிப்பார்//சில நேரங்களில் உன் அண்ணனின் நடவடிக்கை சரி இல்லை என்று என்னிடம் சொல்லுகிறார். // இது அவர் குடிக்கும் போது சொல்கிறாரா சாதாரணமாக இருக்கும் போது சொல்கிறாரா? ஏனெனில் அமைதியாக இருக்கும் உங்களவரை உங்கள் அண்ணன் குடி ஆசை காட்டி குடிப்பதற்கு துணை தேடுகிறார்.. உங்கள் அண்ணனை சந்திக்கமுடியாமல் எதாவது செய்யமுடியுமா என்று பாருங்கள். உங்கள் அண்ணன் தவறானவர் என்று நம்மால் சொல்லமுடியாது. குடியை விட்டால் ஒரு வேளை அவர் நல்லபடியாக இருக்க வாய்ப்பிருக்கு. இந்த குடி தான் பல பேரின் குடும்பத்தில் குட்டையை குழப்புகிறது..
//அண்ணனின் சில தகாத நடவடிக்கையால் நானே அண்ணன் வேன்டாமென்று முடிவெடுத்து விட்டேன்.// இப்படி முடிவெடுப்பது தவறென்று தோன்றுகிறது. உங்கள் அண்ணன் ஒரு வேளை நாளையே திருந்தி விட்டால் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டீர்களா?
இவை அனைத்திற்கும் உங்கள் அண்ணனுக்கு "கால் கட்டு" போடுவதை தவிர சிறந்த வழி எதுவுமில்லை என்றே சொல்ல தோனுகிறது. காரணம், அவருக்கென்று ஒருத்தி வந்துவிட்டால் அவள் அவரை மாற்ற முயற்சி செய்வாள். அவள் இருப்பதால் உங்கள் அண்ணன் வெளி இடங்களில் நேரம் செலவழிப்பதை குறைப்பார். அவளும் உங்கள் அண்ணனை கண்காணிப்பாள். எல்லாம் சரியாகி விடும்.
நீங்களும் உங்கள் கணவர் சாதாரணமாக / சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் இதை பற்றி பொறுமையாக அன்பாக சொல்லி பாருங்கள். உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களின் எதிர்காலம் பற்றி பேசி மனதை மாற்ற முயற்சியுங்கள்.
உங்களுக்கு ஆலோசனை கூறுமளவுக்கு எனக்கு வயதிருக்கிறதா என்று தெரியவில்லை.. மனதில் பட்டதை சொன்னேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்..
- பிரேமா
சங்கீதா,
உங்கள் வீட்டு பெரியவர்கள்(மாமனார், மாமியார், அம்மா,அப்பா) யாரிடமாவது இது பற்றி பேசுங்கள். நீங்கள் உங்கள் அண்ணனிடம் பேசுவதை விட அவர்கள் யாராவது பேசினால் அதற்கு மதிப்பு அதிகமாக இருக்கும். ஏதாவது அதிகமாக பேசி நாளை பிரச்சனை என்றால் கூட, பெரியவர்கள் ஏதோ கோபத்தில் அப்படியெல்லாம் பேசி விட்டார்கள் என்று உங்க அண்ணனை சமாதானம் செய்து கொள்ளலாம். அப்படி கோபப்பட்டு சில நாட்கள் உங்க கணவரை சந்திக்காமல் இருந்தாலும் நல்லதுதான். உங்க கணவரை அடிக்கடி குடிக்க விடாமல் நீங்க தடுக்க முடியும்.
//சந்தோஷமாக இருக்கும் என் குடும்பத்தில் என் அண்ணன் குழப்பத்தை ஏற்ப்படுத்துகிறான்// பெற்ற தாயாகவே இருந்தாலும் இதை அனுமதிக்க முடியாது.
யோசித்து உங்க சூழ்நிலைக்கு தகுந்தபடி முடிவு செய்யுங்க. ஏன்னா நாங்க பதில் சொல்றது உங்க பார்வையிலிருந்துதான். இது தவறாக கூட இருக்கலாம். உங்க குடும்பத்தில் சந்தோஷமும் அமைதியும் திரும்ப கடவுள் துணை இருப்பார்.
பிரேமா
நல்லாயிருக்கீங்களா? உங்க பதிவை பார்த்தேன். எனக்கு சில விஷயங்கள் மனசில் பட்டது. என்னோட கருத்து தவறா இருந்தா மனசில வெச்சுக்காதீங்க.
1. சங்கீதாவுடைய கணவர் அடிக்கடி குடிப்பவர் அல்ல.
2. அவங்க குடும்பத்தில் குழப்பம் விளைவிப்பது அண்ணந்தான்னு சொல்லீருக்காங்க. அவங்க அண்ணனை வெறுக்கறதா சொல்றாங்க.
ஒருவேளை அவங்க அண்ணனுக்கு திருமணம் ஆகாம இருந்தா,
//அண்ணனின் சில தகாத நடவடிக்கையால் நானே அண்ணன் வேன்டாமென்று முடிவெடுத்து விட்டேன்.//
3.அப்ப அவங்களோட குடிப்பழக்கமும், அவர் நடவடிக்கையும் சொந்த சகோதரிக்கே பிடித்தமானதா இல்லனும்போது, எங்கேயோ பிறந்து வளர்ந்து நல்ல வாழ்க்கை வாழ கனவுகளோட இருக்கும் ஒரு பெண்ணை கல்யாணம் செய்து வைக்கறது அவளோட வாழ்க்கையை எவ்வளவு பாதிக்கும்.
//அவருக்கென்று ஒருத்தி வந்துவிட்டால் அவள் அவரை மாற்ற முயற்சி செய்வாள்//
4. பெண்கள் ஆண்களை திருத்துவதற்காக பிறக்கவில்லையே. ஒரு பெண் சந்தோஷமாக வாழவே விரும்புவாள். ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாம் கெடுக்க வேண்டாம்.
Poornima
பெண்கள் ஆண்களை திருத்துவதற்காக பிறக்கவில்லையே. ஒரு பெண் சந்தோஷமாக வாழவே விரும்புவாள். ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாம் கெடுக்க வேண்டாம்//நூத்துல ஒரு வார்த்தை பா.கரெக்டா சொன்னிங்க.
Prema, Poorni அவர்களுக்கு
என் அண்ணன் குடித்தால் மட்டும் அல்ல எப்பொழுதுமே மற்ற்வர்களை மதிக்க மாட்டான். என் க்ணவர் குடிக்காமல் இருந்தால் தான் என் அண்ணன் சரி இல்லை என்று சொல்லுகிறார். குடித்தால் அவனுக்கு சப்போர்ட் செய்கிறார். நானும் என் கணவரிடம் நான் வேண்டுமா இல்லை அண்ணன் வேன்டுமா என்று கேட்க்க போகிறேன். என் அண்ணன் தகாத உறவால் ஒருத்தியிடம் சிக்கி இருக்கிறான். அவனை மாற்ற முயன்று தோற்றுத்தான் நான் அவனை வெறுத்தேன். என் மாமியார் நல்ல குணமுள்ள அழகான பெண்ணை பார்த்தார். அந்த பெண்ணை பிடிக்கவில்லை என்றான். வாட்ஸ் அப்பில் தான் போட்டோ அனுப்பினேன். அதற்க்கு அவன் போட்டோ zoom செஇது பார்த்தேன் பிடிக்கவில்லை என்றான். என் திருமன விஷயத்தில் இனி நீ தலையிடாதே என்று சொல்லி விட்டான். என் மாமனார் என் கணவரிடம் பேசியதற்க்கு அவர் சரியாக பதில் சொல்வதில்லை. என் மாமனார் குடித்தால் அமைதியாக வந்து படுத்துக்கொள் என்று என் கணவரிடம் சொல்லுகிறார்.
M.Nithi
thanks for accepting my thought.
ஆண்கள் குடிச்சுட்டு தப்பு தப்பா நடந்தாலும், அது தப்புன்னு தெரியாமலா பண்றாங்க. இவங்களுக்காக ஒரு பெண்ணோட விலைமதிப்பில்லாத வாழ்க்கையை வீணாக்க முடியாதில்லைமா. பொண்ணுங்களையும் கஷ்டப்பட்டுதான பெத்து வளர்த்து இருப்பாங்க. என்ன இவங்களை திருத்தறதுக்குதான் பிறப்பெடுத்து வந்து இருக்காங்களாமா? சங்கீதா சிஸ்டர் படற அதே கஷ்டத்தைதான் வரப்போற பொண்ணும் படுவாங்க. அவங்க அண்ண்னே திருந்தி நல்ல படியா இருந்தா அப்போ அவங்க வாழ்க்கை வீணாகுதேன்னு வருத்தப்படலாம். இப்பொ இன்னொருத்தரோட வாழ்க்கையை பணயம் வைக்க முடியாதில்லையாமா? ஒரு வேளை நம்ம வீட்டு பொண்ணா இருந்தா நாம ஒத்துக்குவமா?
இது என்னோட கருத்து. தவறா இருந்தால் மன்னிக்கவும்.
அன்பு சங்கீதா
//என் கணவர் குடிக்காமல் இருந்தால் தான் என் அண்ணன் சரி இல்லை என்று சொல்லுகிறார். குடித்தால் அவனுக்கு சப்போர்ட் செய்கிறார்//
இதை உங்க கணவருக்கு புரிய வைக்க முயற்சி செய்யுங்க.
அண்ணனால் உங்களுடைய வாழ்க்கை வீணாகி விடும் என்று சொல்லுங்கள்.
//என் திருமன விஷயத்தில் இனி நீ தலையிடாதே என்று சொல்லி விட்டான்//
எல்லை மீறி போயாகிவிட்டது. உங்க அம்மாவிடம் அல்லது அப்பாவிடம் சொல்லி ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள்.
//என் மாமனார் என் கணவரிடம் பேசியதற்க்கு அவர் சரியாக பதில் சொல்வதில்லை. என் மாமனார் குடித்தால் அமைதியாக வந்து படுத்துக்கொள் என்று என் கணவரிடம் சொல்லுகிறார்.//
கொஞ்சம் அமைதியா எல்லாரையும் கூப்பிட்டு வைத்து கணவருடன் பேசி பாருங்க. கவுன்சிலிங் போய் சரிப்படுத்தலாம் என்று சொல்லுங்கள். புத்திசாலித்தனமா யோசித்து உங்க வாழ்க்கை சந்தோஷத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள். பிரச்சனையிலிருந்து வெளி வர மனோதிடம் அவசியம். தைரியமா இருங்க சங்கீதா.
பூர்ணிமா கார்த்திகேயன்
நல்லா இருக்கேன் பூரணி, நீங்க எப்படி இருக்கீங்க?
//சங்கீதாவுடைய கணவர் அடிக்கடி குடிப்பவர் அல்ல.// நான் அடிக்கடி குடிப்பவர்னு சொல்லல. அப்படி தெரிஞ்சுருந்தா சாரி போத்..
//அப்ப அவங்களோட குடிப்பழக்கமும், அவர் நடவடிக்கையும் சொந்த சகோதரிக்கே பிடித்தமானதா இல்லனும்போது, எங்கேயோ பிறந்து வளர்ந்து நல்ல வாழ்க்கை வாழ கனவுகளோட இருக்கும் ஒரு பெண்ணை கல்யாணம் செய்து வைக்கறது அவளோட வாழ்க்கையை எவ்வளவு பாதிக்கும்.// நீங்க சொல்றது சரி தான். ஆனா அவர் இப்படியே திருமணம் ஆகாமலே இருப்பார்னு நம்மால உறுதியா சொல்லமுடியுமா? ஒரு வேளை இவர் இப்படியே இருந்து, இன்னும் சில வருடங்களுக்கு பிறகு கூட அவருக்கு திருமணம் நடக்கலாம்.. அவர் குடிப்பவர்னு தெரிஞ்சும் அந்த பொன்னு கல்யாணம் பண்ணிக்கலாம். இல்லை தெரியாம கூட இருக்கலாம். திருமணத்திற்கு அப்புறம் பொதுவாக நமக்கு எல்லாமே கணவர்னு ஆயிடும். அப்படி இருக்கும் போது ஒரு வேளை அவளுக்கு அவள் கணவ்ர் குடிகாரர் கெட்டவர் என்று தெரியவரும் போது அவள் அவரை விட்டு போய்விடுவாளா? இல்லை அவரை திருத்துவதற்கு முயற்சி செய்வாளா? என்பதை யோசிக்க வேண்டும். இது வாழ்க்கை அல்லவா?
சொந்த சகோதரியால திருத்த முடியாத அண்ணனை எங்கிருந்தோ வந்த பொன்னு திருத்திட்டா? அந்த எண்ணத்துல சொன்னேன் பா. இவங்க இப்ப அண்ணனை வெறுத்தாலும் நாளைக்கு அவர் அண்ணன் இல்லாமலா போய்ருவாரு? அதான் அப்படி சொன்னேன்.
//பெண்கள் ஆண்களை திருத்துவதற்காக பிறக்கவில்லையே. ஒரு பெண் சந்தோஷமாக வாழவே விரும்புவாள். ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாம் கெடுக்க வேண்டாம்.// இது மேடை பேச்சுக்காக நல்லா இருக்கலாம். ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராது என்பது என் கருத்து.
/ஒரு பெண் சந்தோஷமாக வாழவே விரும்புவாள்.// நிச்சயம், எல்லாரும் அப்படி தான் நினைப்போம். எந்த பெண்ணின் சந்தோஷம் அந்த இடத்தில் கிடைக்க வில்லையோ அதற்காக அந்த பெண் அதை பெற போராடுவாரே தவிர அதை விட்டு சந்தோஷம் கிடைக்கும் இடத்திற்கு செல்லமாட்டாள்.. ஆனாலும் இப்படி பட்ட அவருக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைப்பது என்பது ரொம்பவே கஷ்டமான விஷயம். அது நிச்சயம் அந்த பெண்ணின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் என்பதும் உண்மையே.. உங்கள் கருத்துக்கள் அருமை !!
// ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாம் கெடுக்க வேண்டாம்.// சரியே!!
என் பதிவில் (பதிலில்) ஏதேனும் குறையிருந்தால் தங்கையாக கருதி என்னை மன்னிக்கவும். !!
:)
- பிரேமா
பூர்ணிமா கார்த்திகேயன்
//அவங்க அண்ண்னே திருந்தி நல்ல படியா இருந்தா அப்போ அவங்க வாழ்க்கை வீணாகுதேன்னு வருத்தப்படலாம். இப்பொ இன்னொருத்தரோட வாழ்க்கையை பணயம் வைக்க முடியாதில்லையாமா? ஒரு வேளை நம்ம வீட்டு பொண்ணா இருந்தா நாம ஒத்துக்குவமா?//
அருமையான கருத்துக்கள் !! தவறேதும் இல்லை
- பிரேமா
பூரணி
எனக்கு அப்பா அம்மா இருவரும் இல்லை