Kulanthai valarppu

Enakku twins boy baby 3 1/2 years agiduchi June 15th irunthu school Ku poga poraga. Veetla rendu perum romba setta panraga rendu perum otthumaya irukk mattraga. Naan amaithiya sollium pathen, thittium parthen, adichum parthuten. AvangA ketkAmatraga. AvangAla mariduvagala, illa naan eppadi masthurAthu.

//3 1/2 years agiduchi// அவங்க‌ வயசுக்கு அப்படித்தான் இருப்பாங்க‌. //June 15th irunthu school Ku poga poraga.// அப்போது கொஞ்சம் மாற்றம் தெரியும். உங்களுக்கு பகலில் ஓய்வு கிடைக்கும். வீட்டுக்கு வந்ததும் களைப்பில் கொஞ்சம் தூங்குவாங்க‌. அந்த‌ நேரத்தை உங்களை சார்ஜ் பண்ணிக் கொள்ள‌ பயன்படுத்துங்க‌.

//Veetla rendu perum romba setta panraga// இது வெளியே போகும் போது இல்லாதவரை சந்தோஷம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். வீட்டில்தான் சின்னவர்கள் சேட்டை செய்ய‌ முடியும். சுதந்திரமாக‌ இருப்பதற்குத்தான் வீடு இருக்கிறது. நாம் நம் வீட்டில் சுதந்திரமாக‌ இருப்பதைத் தானே விரும்புகிறோம். வேறு இடத்தில் இருப்பது போல‌ அழகாக‌ உடுத்திக் கொண்டு, அமைதியாக‌, மேசையில் அமர்ந்து ஸ்டைலா சாப்பிடுகிறோமா? இல்லைல்ல‌! இஷ்டத்துக்கு எங்காவது கதிரைல‌ கால் போட்டு ஹாயா உட்கார்ந்து சாப்பிடுறது இல்லையா! அதற்குத் தான் வீடு. இப்போ சேட்டை பண்ணாமல் அவங்க‌ எப்போ சேட்டை பண்ணுறதாம்!

//rendu perum otthumaya irukk mattraga.// அதை எதிர்பார்க்க‌ வேணாம். உங்க‌ கணவருக்கும் உங்களுக்கும் எல்லா விதத்திலும் கருத்து ஒற்றுமை இருக்கிறதா? இல்லை அல்லவா? அவர்கள் இரட்டையர் ஆனாலும் இரு தனித்துவ‌மான‌ மனிதப் பிறவிகள். தவிர‌, குழந்தைகள் வேறு. என்ன‌ புரியும் அவர்களுக்கு! தான், தன் பொருள், தன் விளையாட்டு என்பது மட்டும்தான் புரியும். ஒற்றுமை, வேற்றுமைக்கெல்லாம் அர்த்தம் தெரியாது.

//Naan amaithiya sollium pathen, thittium parthen, adichum parthuten.// ;)) அவங்களுக்கு திட்டினா _ அம்மா கோவமா இருக்கிறாங்க‌; அப்புறம் சரியாகிருவாங்க‌ என்று மட்டும் தோன்றும். அடிச்சா _ உங்க‌ மேல‌ கோபம் வரும். இன்னும் அதிகம் சேட்டை பண்ணவும் தோணும். நீங்க‌ அன்பா திருத்தப் பார்த்ததா எங்கும் சொல்லல‌. //AvangA ketkAmatraga.// அவங்களுக்கு மூணரை வயசுதானே ஆகுது! எப்பிடிங்க‌ கேட்பாங்க‌? வளர்ந்த‌ குழந்தைகளே அம்மா பேச்சு கேட்கிறதில்லை. இது எதுவும் புரியாத‌ வயசு இல்லையா?

//AvangAla mariduvagala,// இது வளரும் போது கொஞ்சம் நடக்கும். மெதுவே குறையும். //naan eppadi masthurAthu.// அன்பால் மட்டும்தான் மாற்றலாம். என்னைக் கேட்டால்... மாற்ற‌ நினைக்க‌ வேண்டாம். நீங்கள் மாறுங்கள் என்பேன். வேலைகளை ப்ளான் பண்ணி முடிச்சுருங்க‌. மிகவும் அவசியம் இல்லாத‌ வேலைல்லாம் இப்போ பண்ண‌ வேண்டாம். அதிக‌ நேரம் குழந்தைகளோடு குழந்தையாக‌ நீங்களும் விளையாடுங்க‌. அவங்க‌ சேட்டை பண்ணலை என்கிறது புரியும். இந்த‌ நேரத்தை விளையாட்டா கற்பிக்கப் பயன்படுத்தலாம்; உணவு ஊட்டப் பயன்படுத்தலாம். ஆரம்பிச்சுப் பாருங்க‌. சுலபம் என்கிறது புரியும். ஆனால்... சந்தோஷமாக‌ முழுமனதாக ரசித்துச் செய்தால் தவிர‌ இது வேலை செய்யாது. "மனம் உண்டானால் இடம் உண்டு." (தாங்ஸ் அதிரா.)

பொதுவாக‌, வெவ்வேறு வயசுக் குழந்தைகள் மத்தியில் கூட‌ சுய‌ஒப்பீடுகள் இருக்கும். பாசம் இருந்தாலும் சகோதர்களுக்காக‌ விட்டுக் கொடுக்க‌ முடியாது அவர்களால். 'தான்' 'தனக்கு' என்னும் விருப்பம் _ எதிர்பார்ப்பு இருக்கும். இவர்கள் மத்தியில் ஓடுவதும் அதுவேதான். ஒற்றுமையின்மை அல்ல‌ அது. மனித‌ இயல்பு. மனிதர் மட்டுமல்ல‌, பறவைகள் பிராணிகளிடமும் இந்தப் போட்டி போடும் குணம் இருக்கிறது. சின்ன‌ வயதில் போட்டிபோட்டு வெல்லத் தெரிந்த‌ குழந்தைக்கு, பிற்காலத்தில் வரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பது கடினமான‌ காரியமாகத் தோன்றாது. இது ஒருவகையில் ஆரோக்கியமான‌ விடயம் தான். அதைச் சரியானபடி வழிநடத்துவது உங்கள் கையில் இருக்கிறது.

இந்த‌ இழையையும் படிச்சுப் பாருங்க‌. எங்காவது உங்களுக்கு சின்ன‌ டிப் கிடைக்கலாம். http://www.arusuvai.com/tamil/node/31893

‍- இமா க்றிஸ்

Sis apdi tan irukaga enakum .twins Ila one year 4 months different .always fighting playing .sleeping hours too less .only playing .naughty adhigama panraga .school innum join pannala .second son very naughty so Amma veetla tan irupaga .first son kuda serndha ennala samalikave mudila .elarum solraga school poita sariagidum nu...ipo yethayum think panna vendam .school poita changes varum .

மேலும் சில பதிவுகள்