கிரஹ பிரவேசத்திற்கு பிறகு

கடந்த வாரம் தான் நாங்கள் புது வீடு கிரஹ பிரவேசம் நடத்தி முடித்தோம், அதன் பிறகு மூன்று நாள் தங்க வேண்டும் என்று கூறினார்கள், மூன்று நாட்களும் முடிந்து விட்டது, ஹோமம் வளர்த்த கற்கள் சாம்பல் எல்லாம் எடுத்து விட்டோம், மூன்று நாங்கள் வரை நாங்கள் வீட்டை சுத்தம் செய்யாவில்லை, ஒரு சந்தேகம் | எப்போது அசைவம் சமைக்கலாம்? சிலபேர் அடுத்தநாள் சமைக்க வேண்டும் என்கிறார்கள், நீங்கள் தெரிந்தால் கிரஹ பிரவேசத்திற்கு பிறகு என்னென்ன செய்யா வேண்டும் என்று கூறுங்கள்

நன்றி
பாபு நடேசன்

வைகாசி மாதம் கிரகபிரவேசம் செய்த வீட்டிற்கு ஆடி மாதம் குடியேறலாமா? அந்த வீட்டில் ஏற்கனவே ஒரு வாரத்திற்கு மேல் தங்கி விட்டோம். தெரிந்தால் கூறவும், குழப்பமாக உள்ளது.

- பிரேமா

முதலிலேயே சொல்லிவிடுகிறேன் - எனக்குப் பதில் தெரியாது.

வேறு யாராவது இங்கு பதில் சொல்லாவிட்டால், பயமில்லாமல் குடியேறுங்க பிரேமா. எல்லாம் உங்கள் மனதில் இருக்கிறது. என்ன ஆகும் / ஆகாது என்று நினைக்கிறீர்கள் / பயப்படுகிறீர்கள்? ஒரு பழமொழி சொல்லுவாங்க, 'தன் பாவம் கொண்டு வங்காளம் போனாலும் தன் பாவம் தன்னோடு தான்,' என்று. புண்ணியம் கூட அப்படித்தான். :-) நாள், கிழமை எல்லாம் பார்த்துக் குடியேறுபவர்களுக்கும் பிரச்சினைகள் வரலாம். எதைப் பற்றியும் கவனியாதவர்கள் நன்றாக இருக்கலாம். அல்லது மாறியும் நடக்கலாம். மனிதர் என்றால் நோய்கள், பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தேதான் ஆக வேண்டும். அது வரும் விதமும், காலமும் தான் வேறு. குழம்பாமல் உங்கள் வசதி எப்படியோ அப்படி குடி போகலாம். பயமாக இருந்தால் சாமியிடம் உங்கள் பிரச்சினையை விட்டுருங்க. கடவுள் தன் பிள்ளைகளுக்கு தீமை நினைக்க மாட்டார்.

உங்கள் புதுமனைப் பிரவேசமும் மீதி நாட்களும் சந்தோஷமான நிகழ்வுகளை மட்டும் காண வேண்டும் என்று இறைவனைப் பிராத்திக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

நாங்களும் வைகாசி கடைசியில் கிரகபிரவேசம் நடத்தி ஒருவாரம் தங்கினோம்.

நாங்கள் இப்போது புதுவீட்டிற்கு வந்து ஒருவாரம் ஆகிறது .

ஆடியில் வரவேண்டாம் .
ஆவணி மாதம் வாருங்கள்.

நாங்கள் வாடகை வீட்டில் இருந்தோம் .வீட்டு உரிமையாளர் எங்களை ஆனி மாதம் பாதி மாதத்தில் மாற கூறினார் .ஆடி மாதம் யாரும் வீடு மாற மாட்டாங்கனு சீக்கிரம் காலி பண்ண சொல்லிட்டாங்க .

நீங்கள் குழம்ப வேண்டாம்
உங்கள் சூழ்நிலை தகுந்தாற் போல் நீங்கள் மாறலாம்.

ML

மேலும் சில பதிவுகள்