சிறுநீர் பிரச்சினை

நான் மூன்று மாதம் கர்பமாக உள்ளேன் எனக்கு இது முதல் குழந்தை ஒரு வருடத்திற்கு பிறகு கருவுற்றுகிறேன் எனக்கு வாந்தி தலை வலி உள்ளது ஆனால் என்னால் அடிக்கடி சிறுநீர் கழிக்க முடியவில்லை. இதனால் எனக்கு கட்டியாக வெள்ளை படுகிறது . தண்ணீர் சுத்தமாக குடிக்க முடியவில்லை கொஞ்சம் தண்ணீர் குடித்தால் கூட சாப்பிட அனைத்தும் வாந்தி வருகிறது சிறுநீர் தொற்று உள்ளதா என்று செக் பன்னினேன் அதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் இருந்தாலும் ஒருவித பயம் இருந்து கொண்டே இருக்கிறது இதனால் எனது குழந்தைக்கு எதாவது பிரச்சினை வருமா.

கர்ப்ப‌ காலத்தில் வெள்ளைப்படுதல் ஒரு பிரச்சனை இல்லை.. உங்களுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.. சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல் இருந்தால் உடனடியாக‌ டாக்டரை பாருங்கள்.. நீர் கடுப்பாக‌ கூட‌ சில‌ சமயம் இருக்கும். மோரில் வெந்தயம் கலந்து குடித்து பாருங்கள்..
வாந்தி அதிகமாக‌ இருந்தால் அதற்கென மாத்திரைகளை டாக்டர் பரிந்துரைப்பார். முற்றிலும் பாதுகாப்பானது.. இதனால் குழந்தைக்கு எந்த‌ பாதிப்பும் வராது.. வாந்தியை கன்ட்ரோல் பண்ணினால் எல்லாம் சரியாகும் என்று நினைக்கிறேன். அதற்காக‌ தண்ணீர் குடிக்காமல் இருக்காதீங்க‌.. தண்ணீர் தான் ரொம்ப‌ முக்கியம்.. ஒரேடியா குடிக்க‌ முடியலன்னாலும் கொஞ்சம் கொஞ்சமா குடிங்க‌. உங்க‌ குழந்தைக்கு எந்த‌ பாதிப்பும் வராது. தைரியமா இருங்க‌..

- பிரேமா

இந்த நாட்களில் வரும் பிரச்சனைதான் பயம் வேண்டாம்.நீர் அருந்த முடியவில்லை என்றால் சிறுநீர் கழிப்பதில் கஷ்்டம் ஏறபடுவது மட்டுமன்றி உடல் உஸ்ணம் அதிகரித்து வெள்ளைப் போக்கும் ஏற்படும். நான் கர்ப்பமாக இருக்கும் போது எலுமிச்சையும் உப்பும் கலந்த நீர் மட்டுமே குடிப்பேன்

மேலும் சில பதிவுகள்