கருத்தடை

குழந்தை பிறந்து 13 நாட்கள் ஆகிறது. முதல் குழந்தை நார்மல் , இரண்டாவது குழந்தை சூழ்நிலை காரணமாக சிசேரியன் .... இருந்தாலும் நான் கருத்தடை செய்து கொள்ளவில்லை ... என் கணவருக்கு இந்த ஆப்பரேசனில் உடன்பாடு இல்லை அதனால் செய்யவில்லை ...என் கேள்வி என்ன என்றால் நான் எந்த கருத்தடை பயன்படுத்துவது,, தெரிந்தவர்கள் கூறுங்கள் தோழிகளே ...
என் குழந்தை மை பார்க்க வருபவர்கள் எல்லோரும் ஏன் மாத்திபோடாமா விட்டிங்க மறுபடியும் ஆப்ரேஷன் பன்னி இன்னோரு பெத்துக்க போரியானு கேட்கிறார்கள் மனசு கஷ்டமா இருக்கு ....என் குழப்பத்துக்கு ஒரு தீர்வு கூறுங்கள் தோழிகளே....எனக்கு நார்மல் டெலிவரியா இருந்திருந்தால் இதை யோசிச்சிருக்க மாட்டேன் .... சிசேரியன் செய்தும் பனனாம விட்டுடமேனு வருத்தமாக இருக்கு

Candoms எந்த அளவுக்கு சேப்டி .... மாத்திரை, காப்பர்டி இதில் விருப்பம் இல்லை ... தெரிந்தவர்கள் கூறுங்கள் தோழிகளே தயவு செய்து உதவுங்கள்

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

//என் குழந்தை மை பார்க்க வருபவர்கள் எல்லோரும் ஏன் மாத்திபோடாமா விட்டிங்க மறுபடியும் ஆப்ரேஷன் பன்னி இன்னோரு பெத்துக்க போரியானு கேட்கிறார்கள் மனசு கஷ்டமா இருக்கு// கேள்வியை கடமுடான்னு ஒரு தமிழ்ல‌ த‌ட்டியிருக்கீங்க‌. :‍) ஆனாலும் புரியுது. முதல்ல‌ மற்றவங்க‌ என்ன‌ சொல்றாங்க‌, நினைக்கிறாங்க‌ என்கிறதை வைச்சு உங்க‌ வாழ்க்கையைத் தீர்மானிக்கிறதை விடுங்க‌. இது உங்க‌ வாழ்க்கை. நீங்கதான் சாதகபாதகங்களை யோசிச்சு முடிவு செய்யணும். நீங்க‌ இன்னொண்ணு பெத்துட்டா பார்க்கிறவங்களுக்கு என்ன‌ குறையாம்!! அவங்க‌ சுமக்கப் போறதும் இல்லை; பிரசவிக்கப் போறதும் இல்லை. நீங்கதானே வளர்க்கப் போறீங்க‌! கர்ர்...

//என் குழப்பத்துக்கு ஒரு தீர்வு கூறுங்கள்// நீங்க‌ ஆப்பரேஷன் செய்யாதது நல்ல‌ விடயம்தான். இமா சென்டிமென்ட் எல்லாம் பார்க்காம‌ உண்மையைச் சொல்றேன். என்னடா இப்பிடி சொல்றாங்கன்னு கவலைல்லாம் படக் கூடாது. நீங்க‌ ஒரு கோழில‌ ஒரு செட் முட்டை, 13 அடை வைச்சுப் பாருங்க‌. அத்தனையும் காக்கா, கீரி, பறவை நோய்கள் எல்லாவற்றையும் கடந்து முழுக்கோழிகளாக‌ வளர்கின்றனவா? பதினைஞ்சு மிளகாய்க்கன்று நட்டால் அத்தனையும் தப்பி வளர்ந்து பலன் தருதா? இல்லைல்ல‌! எல்லாம் சரியாப் போனா சந்தோஷம். இல்லாட்டா!!! இப்போ சர்ஜரி பண்ணிட்டு பிறகு யோசிக்கிற‌ மாதிரி ஆகிரலாம்.

//சிசேரியன் செய்தும் பனனாம விட்டுடமேனு வருத்தமாக இருக்கு// வருந்துறதுக்கு ஒண்ணுமே இல்லை. சந்தோஷப்படுங்க‌. சர்ஜரி ரிவர்சிபிள் இல்லைல்ல‌!

//எந்த அளவுக்கு சேப்டி// சேஃப்டி குறைவுதான்.

‍- இமா க்றிஸ்

நீங்கள் சொன்னது புரிகிறது ...இனி நான் வருத்தபடமாட்டேன் .... எதாவது ஒரு முறை படி தள்ளி வைக்க வேண்டியது தான்....என் கணவருக்கு கருப்பை மாத்தி போடுவதில் துளி கூட விருப்பம் இல்லை ....அதனால் நானும் எதுவும் சொல்லவில்லை .என் குடும்பத்தில் அம்மா,பெரியம்மா ,சித்தி,அத்தை எல்லோரும் இதை செய்தது இல்லை .. இருந்தாலும் அவங்க கிட்ட ஐடியா கேட்க ஒருமாதிரி இருக்கு ...அதான் கேட்டேன் ......நன்றி இமாஅம்மா

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

எனக்கும் முதல் டெலிவரி நார்மல்..2 வது குழந்தைக்கு தலை இரங்கலனு operation பண்ணினாங்க... நான் முதல் குழந்தையை ரொம்ப எதிர்பார்த்து நான்கு வருடத்திற்கு பிறகு பெற்றேன்...2 வது குழந்தையை முதல் குழந்தைக்கு 1 வருடம் இருக்கும் போதே conceive ஆகிட்டேன்.2 வது குழந்தை operation ஆனது நால ரொம்ப பயமா இருக்கு... நானும் கருத்தடை பன்னல என் கணவருக்கு விருப்பம் இல்லை..காப்பர்டி போட பயமா இருக்கு..weight போட கூடாதேன்னு..மாத்திரை போடவும் ,விருப்பம் இல்லை...இப்ப 2 மாதமாக கணவர் கூட வெளி நாட்டில் வசிக்கிறேன்...என் குழந்தைக்கு இப்ப 1வருடம் 2 மாதம் தான் ஆகிரது...

எல்லாம் நன்மைக்கே

Unga nilamai than yenakum ...Marupadiyum operations pannika viruppam illai ....Yethathu oru karuthadai upayogithal Nallathu ...Na Ennoda first baby porantha apparam one and half years condoms use panninom athu yenaku alergya irunthuchi othukala...Apparam periods yenaku regular 30 days la correct a vanthrum...So periods munnadi 5 days um after 5 days contact irupom one and yr apparam consive anen but situation karanam abort panniten so uterus tube block ahitu ippam treatment yeduthu consive anenpa first babyku 5 yrs ,,,paiyan poranthu 15 days ahuthu....

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Operation senjappam...Nenga yevvalavu naal oinment potinga ,,,, yevvalavu naal bleeding irunthuchi ,, yeppam normal aninga ,,, konjam soldringa please

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

//கருப்பை மாத்தி போடுவதில்// அப்பிடின்னா என்ன‌!

‍- இமா க்றிஸ்

Imma Amma inga yellarum appadithan solvanga ...Karuthadai operation atha inga appadithan solvanga athathan nanum sonnen

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

நான் 40 நாட்கள் ointment போட்டேன்..40 days ல checkup வர சொன்னாங்க...அது வரை ointment போட்டேன்.முதல் குழந்தை சுகபிரசவம் நால 20 days period நல்ல வந்து பட்டுச்சு...operation பன்னுனதுல 15 days தான் period வந்துசு அதுவும் கொஞ்சம் கொஞ்சம் தான் தினமும் வரும்....வயிரு எனக்கு நல்ல விட்டிடுச்சு..belt use பண்ண தான் செய்தேன்...

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்