குழந்தைக்கு காதில் சீழ்

வணக்கம் தோழிகளே என்னுடைய 1 1/2 மாத குழந்தைக்கு காதில் சீழ் வடிகின்றது. Doctor இடம் சென்றோம் ear infection in left ear என்று கூறி abtibiotics 10 days ku கொடுத்தார்கள் நாங்களும் கொடுத்தோம் இப்போது இன்னொரு காதிலும் infection சளியால் மூக்கடைப்பு ஏற்பட்டு காதில் சீழ் வடிகின்றது ஏதாவது வீட்டுக்கு வைதியம் தெரிந்தால் கூறுங்கள் மிகவும் வருத்தமாகவும் பயமாகவும் இருக்கின்றது

திரும்பவும் கூட்டிப் போய் மருந்து எடுங்க‌. சில‌ குழந்தைகளுக்கு இப்படி தொடர்ந்து வருவது உண்டு. கவனிக்காமல் விடக் கூடாது. குளிக்க‌ வைக்கும் போது சின்னதாக‌ இரண்டு பஞ்சுத் துண்டுகளை சிறிது எண்ணெயில் நனைத்து காதில் வைத்துவிட்டு குளிக்க‌ வார்ப்பது நல்லது. காதினுள் நீர் போகாது. மெல்லிதாக‌ அடைத்தால் போதும்; அழுத்த‌ வேண்டாம். குழந்தைக்கு சளி வைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்