மாத்தி யோசி

காக்கா நரி கதை

நான் தலைமையாசியராக‌ பணி புரிந்தாலும் முதல் வகுப்புக்கு பாடம் சொல்லித்தர‌ மிகவும் விரும்புவேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் முதல் வகுப்பில் தான் இருப்பேன். பொதுவாகவே பிள்ளைகள் செல்ப் கான்பிடன்ஸ் ஆக‌ வளரவேண்டும் என்பதே என் எண்ணம்.

பொது அறிவு வளர்ச்சிக்கும், நீதி போதனை வகுப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன். மாலை வகுப்பு முடியும் போது நகைசுவையாக‌ எதாவது சொல்லி அதற்கான‌ பதிலை தெரிந்து வரச் சொல்வேன்.

ஒரு நாள், நமது பாரம்பரியக் கதையான‌ ''காக்கா நரி வடை'' கதையை சொல்லி, அந்த‌ முடிவுக்கு பதில் வேறு முடிவுகளை மாத்தி யோசித்து வரச் சொன்னேன். அப்பாடா வந்தது பாருங்க‌ முடிவுங்க‌, ஒவ்வொருத்தரும் நான்கு ஐந்து முடிவு சொல்லிட்டாங்க‌.

எப்படி எல்லா மாத்தி யோசிக்கறாங்க‌ பாருங்க‌. ''காக்கா காகா நு பாடவும், வாயிலிருந்த வடை கீழே விழுந்தது. நரி வடையைத் தூக்கிட்டு ஒடீ விட்டது, காக்கா ஏமாந்து போயிடுச்சு''இது தான் நாம் வழக்கமா சொல்வது. பிள்ளைகள் மாத்தி யோசிச்சி சொன்ன முடிவுகள் இதோ

!. காக்கா வடையை பாதுக்காப்ப‌ தன் கால்களில் வைத்துக் கொண்டு 'கா கா கா'' நு பாடிட்டு வடையை தின்றது.

2. காக்கா வடையை முழுவதையும் சாப்பிட்டு முடித்து விட்டு நிதானமா நரியைப் பார்த்து சொன்னது, ''எங்கத் தாத்தா பாட்டி எமாந்து இருக்கலாம், நாங்க‌ இப்ப‌ உன்னை விட‌ புத்திசாலிகள் நாங்க‌ ஏமாற மாட்டோம் ''''இப்ப‌ என்ன‌ பண்ணுவே, இப்ப‌ என்ன‌ பண்ணுவே''நு கும்மியடித்தது.

3. 'நரி அண்ணா, நரி அண்ணா நீ அப்பவே எனக்கு சொல்லி இருந்தா நா அந்தப் பாட்டியை ஏமாற்றி இரண்டு வடையை தூக்கிட்டு வந்து இருப்பேனே''நு காக்கா நரியை பார்த்து சொன்னது.

4.'''நரியே நரியே நீ ஏன் சும்மா நீ அழகா இருக்கே பாட்டுப்பாடுனு கத்திக்கிட்டு இருக்கே, நானே இந்த‌ ஊசிப் போன‌ வடையை யார் தின்பது நு கவலையா இருந்தேன் நீயே வந்துட்டே இந்தா உனக்கே வடை''வீசி விட்டது.

5.நரியே நரியே நீ கபாலி மாதிரி திரும்பத்திரும்ப‌ வந்து தொல்லைக் கொடுத்துக் கொண்டே இருப்ப‌, இந்தா இந்த‌ வடையை நீயே எடுத்துக்கோ'நு காக்கா கொடுத்துவிட்டது.

6. நரித் தாத்தா, நாங்க‌ கறுப்புனு எங்களை கேலி பண்ணாம‌ , எனக்கு பசிக்குதுனு கேட்டு வாங்கி சாப்பிடு, ஓகேவானு ''காக்கா நட்பா நரியைப் பார்த்தது.

7. காக்கா நரியிடம்,'''நாங்க‌ இப்போ பேர் அன்ட் ல்வெள‌ லி போட்டு சினிமா ஸ்டார் மாதிரி இருக்கோம் , இன்னும் எவ்ளொ நாளைக்கி காக்கா நீ கருப்பு கருப்புனு சொல்வ‌, உன் கருப்புக் கண்ணாடியை மாத்து''' சொல்லிச் சிரித்தது.

நாம‌ நம்ம‌ பிள்ளைகளுக்கு சின்ன‌ சின்ன‌ கதைக்களைச் சொல்லி ,மாத்தி யோசிக்கச் சொல்லி அவர்களது கற்பனைத் திறனை வளர்க்க‌ வேண்டும் அவசியம்.

3
Average: 3 (2 votes)

Comments

ஆஹா! :‍) அழகான‌ முடிவுகள். 4 & 5 ‍ ரசித்தேன்.

‍- இமா க்றிஸ்

Imma
Thanks for your kind words

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

முதலாம் வகுப்பிற்கு பாடம் சொல்லித்தருவது ஆனந்தமான விடயம். குழந்தைகளின் உலகத்துக்கு நாமும் செல்லலாம்.

நீங்க கற்பிக்கும் முறை கவரும் வண்ணம் உள்ளது.

குழந்தைகளின் கற்பனையோ அபாரம் .அதிலும் நாலாவது பாயிண்ட் அருமை

;))) இப்போ இடுகைகளுக்குப் புது அழகு கிடைச்சிருக்கு ரஜினி. இனிமேல் பைசன் மாதிரி இருக்கிற அந்த பைக்கைப் போடாதீங்க. இப்படியே வித்தியாசம் வித்தியாசமா அழகான படங்களாப் போட்டுங்க. பைக் போர். ;( இது பிடிச்சிருக்கு; படிக்கவும் தூண்டுது.

‍- இமா க்றிஸ்