இரண்டாவது முறையாக கர்ப்பம்

சகோதரிகளே!
இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளேன்.40வது நாள்.முதல் குழந்தைக்கு 7 வயது.நார்மல் டெலிவரி.போலிக் மாத்திரை மருத்துவர் சொன்னதுபோல சாப்பிடுகிறேன்.முதல் கர்ப்பத்தின் போது சர்க்கரை ட்ரேசில் இருந்தது.சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிகிறேன். காலை 8 முதல் மாலை 7.30 வரை வேலை+பயணம்.என் அம்மாவின் கேன்சருக்கான் பத்திய உணவும் நான் செஞ்சுட்டுருக்கேன்.மாலை 4 மணிக்கு மேல் கடுமையாக பசிக்குது.என்ன சாப்பிடலாம்.வாந்தி இல்லை.குமட்டல் மட்டும்.கவலை,வேலைபளு,முதல் குழந்தை கவனிப்பு,சாப்பாடு,பசி.எல்லா திசையிலும் அடி இடி மாதிரி விழுது.

//கவலை// நீங்கள் நிச்சயம் எல்லாவற்றையும் மானேஜ் பண்ணுவீங்க‌. உங்களுக்கு அந்த‌ தைரியம் இருக்கு. எல்லாவற்றையும் பார்த்து விட்டு, உங்க‌ ஹெல்த்துக்கு கடைசி முக்கியத்துவம் என்கிறதாக‌ மட்டும் இருக்கக் கூடாது இனி.

//என்ன சாப்பிடலாம்.// நட்ஸ்! சர்க்கரை பற்றி யோசிக்கத் தேவையிராது. சமையல் என்று நேரமும் எடுக்காமல் ஒரு ஹெல்தி ஸ்னாக் அது. பயறு, கடலை வகைகள் சாப்பிடலாம்.

‍- இமா க்றிஸ்

எனக்கும் இந்த‌ பதில் தேவையாக‌ இருக்கு. நட்ஸ் என்றால், பாதாம், பிஸ்தா, வால்நட் மாதிரியா? வேறு என்னென்ன‌ இருக்கு? ஊற‌ வைத்துதான் சாப்பிடணுமா?

அன்புடன்
ஜெயா

//பாதாம், பிஸ்தா, வால்நட் மாதிரியா?// வால்நட் தனியே சாப்பிடப் பிடிப்பதில்லை எனக்கு.

//வேறு என்னென்ன‌ இருக்கு?// நிலக்கடலை, கஷூ, பைன் நட்ஸ் இவற்றோடு பயறு, கடலை வகைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். அவையும் புரதம் செறிந்தவைதான்.

//ஊற‌ வைத்துதான் சாப்பிடணுமா?// இல்லை. எல்லாவகை வித்துக்களையும் பச்சையாகச் சாப்பிட‌ முடியாது. வாயுத் தொந்தரவு வரலாம். முளை கட்டக் கூடியவற்றை முளைகட்ட‌ வைத்துச் சாப்பிடலாம்; வறுத்துச் சாப்பிடக் கூடியவற்றை வறுத்துத் சாப்பிடலாம்; அவித்து சுண்டல் போல‌ சாப்பிடக் கூடியவற்றை அவித்துக் கொள்ளுங்கள்.

ஜெயா மணிகண்டனுக்குச் சொன்ன‌ பதில் அவரது தேவையைப் பொறுத்துச் சொன்னது. நேரம் போதாமலிக்கும் சமயத்தில் பசிக்குக் கொறிக்க‌ ஆரோக்கியமான‌ அதே சமயம் உடலில் சர்க்கரை அளவை ஏற்றி விடாமலிருக்கக் கூடிய ஸ்னாக்ஸ் புரத‌ உணவுகள். ஒரு தடவை வறுத்து வைத்துக் கொண்டால் எப்போ வேண்டுமானாலும் கொஞ்சம் கொறிக்கலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்