தைராய்டு

எனக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்.இரண்டாவது குழந்தைக்கு Try பண்ணுறோம். ஆனா Consive ஆக முடியல PERIOD தள்ளிபோதுணு KID USE பண்ணா Negative nu வருது .எனக்கு Thriod இருக்கு .Thriod இருந்தா Consive ஆக முடியாதா .

Pls yeradu padil solunga frds plss,...

Thyroid cure aanadhan conceive aga mudiyum. Husband or wife yaruku thyroid irunthalum conceive aga mudiyadhu.
Thyroid seekiram cure pannunga.
Adhuku tablet regulara podunga.
Cure aanadhum conceive avenga.

//எனக்கு Thriod இருக்கு// இது உங்களுக்கு எப்படித் தெரிய‌ வந்தது? சொன்ன‌ டாக்டர் இதைப் பற்றிச் சொல்லியிருப்பாங்க‌ இல்லையா? கொடுத்த‌ மாத்திரைகளை ஒழுங்கா எடுத்தீங்களானால், மாத்திரை எடுக்கும் சமயம் தைராயிட் லெவல் சரியாக‌ இருக்கும். கருத்தரிக்கலாம். பிரச்சினை இராது.
~~~~~
//Thyroid cure aanadhan conceive aga mudiyum.// தைராயிட் பிரச்சினைகளுக்கு க்யூர் என்பது இல்லை சகோதரி.

மாத்திரைகள் மூலம் உடலுக்கு தைராயிட் கிடைத்தாலே போதும்; உடற்தொழிற்பாடுகள் சரியாக‌ நிகழும். இதனால்தான் மருத்துவர்கள் தொடர்ந்து மாத்திரைகள் எடுக்கச் சொல்வது.

//Thyroid seekiram cure pannunga.// திரும்பவும் அஜி பிரியாவுக்கு இதைத் தெளிவுபடுத்துகிறேன். நீங்கள் இதைபற்றிப் பயப்பட‌ வேண்டாம். தைராயிட் இருந்தால் கன்சீவ் ஆக‌ முடியாது என்னும் கருத்து முற்றிலும் தவறு.

//Adhuku tablet regulara podunga.// இந்தக் கருத்து மிகவும் சரியானது.

//Cure aanadhum conceive avenga.// இல்லை, கண்ட்ரோல்ல‌ இருந்தால் போதும் கன்சீவ் ஆக‌. தைராயிட் 'க்யூர்' ஆவது இல்லை. மாத்திரையை நிறுத்தினால் ஆட்களைப் பொறுத்து சில‌ நாட்கள் அல்லது சில‌ வாரங்களில் மீண்டும் லெவல் குழம்பிப் போகும். அதனால் டாக்டர் சொல்லாமல் மாத்திரைகளை நிறுத்தவோ டோஸை மாற்றவோ வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

நன்றி இந்துஷா

உங்க பதிலுக்கு நன்றி Imma akka .2 Months ah Medicine எடுக்கிறேன் .2 months period correct ஆ இருந்தது But inda month period தான் 8 நாள் தள்ளி போச்சி .நேத்து தான் Period achi அதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு.

மேலும் சில பதிவுகள்