சொய்யான்

தேதி: March 3, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மைதா - 150 கிராம்,
கடலை பருப்பு - 1/4 கிலோ,
வெல்லம் - 1/4 கிலோ,
தேங்காய் - 1/2 மூடி,
ஏலக்காய் - 5,
உப்பு - சிறிது,
எண்ணெய் - பொரிக்க.


 

கடலை பருப்பை கிள்ளு பதமாக வேக வைத்து, மிக்ஸியில் அரைத்து வைத்து கொள்ளவும்.
தேங்காயை துருவி, லேசாக வறுத்து வைக்கவும்.
வெல்லத்தை தட்டி, 1/4 டம்ளர் தண்ணீரை சேர்த்து, கரைத்து, வடிகட்டி அடுப்பில் வைக்கவும்.
கொதிக்கும் போது, அரைத்த கடலை பருப்பு, தூளாக்கிய ஏலக்காய், தேங்காய் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.
ஆறியவுடன் எழுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும்.
மைதாவுடன் உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
எண்ணெயை காய வைத்து உருட்டிய உருண்டைகளை, ஒவ்வொன்றாக மைதா கரைசலில் முக்கி எடுத்து பொரிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இதை என் பெரியம்மா செய்து சாபிட்டு இருக்கிறேன். நான் முதன் முறையாக உங்கள் குறிப்பை பார்த்து முயர்சித்தேன்.... அருமை. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனிதா,
பாரம்பரிய சமையலிது. பாராட்டுக்கு நன்றி. முயற்சி திருவினையானது :-)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.