சோள தோசை

தேதி: March 4, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

சோளம் - 2 டம்ளர்,
பச்சரிசி - 1/2 டம்ளர்,
சின்ன வெங்காயம் - 10,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்துமல்லி - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.


 

சோளத்தை தண்ணீர் தெளித்து, பிசிறி, மிக்சியில் போட்டு, ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கவும்.
உமி தனியாக வரும், வராவிட்டால் இன்னொரு முறை போட்டு எடுத்து, உமியை புடைத்து எடுக்கவும்.
சோளத்தை, அரிசியுடன் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு கிரைண்டரில் போட்டு நைசாக அரைக்கவும்.
வாணலியில் நறுக்கிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, உப்பு சேர்த்து கரைக்கவும்.
மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, சுட்டு எடுக்கவும்.


தொட்டுக் கொள்ள வெங்காய சட்னி, கார குழம்பு பொருத்தமாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Nethu tv la salem special nu senjanga pa. Essence dosai nu masala gravy senju , adha dosai ulla vechu serve panranga. Yarukavadhu andha recipe theriyuma?

சாதாரணமா நாம மட்டன் வறுவல்/சுக்கா பண்றோமே அதையே கொஞ்சம் உள்ள வச்சு குடுக்குறதுதான் எசென்ஸ் தோசை மமட்டின் பீஸ் கொஞ்சம் பொடி பொடியா இருக்கனும்.நான் பண்ணியிருக்கேன்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

Apadiyanga?! Ok.

Nan adhu veg dish nu nenachuten. Tv la veg thaan pa senjanga.

வெஜ், நான் வெஜ் நம்ம டேஸ்ட பொறுத்தது.நாமலே பண்ணலாம்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி