தாய்மை

வணக்கம் தோழிகளே.நான் அறுசுவைக்கு புதிது. திருமணமாகி 2 வருடங்கள். குழந்தை இல்லை. அதற்கு நானே தடை எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ரொம்ப பயமாக உள்ளது.எப்படியோ காலத்தை கடத்தி விட்டேன். ஆனால் எனக்கு இப்போது குழந்தைக்கு ஆசையாக உள்ளது. அதை நினைத்தாலே உடம்பு நடுங்குகிறது பயம் வேறு என்னை கொள்கிறது. நான் என்ன செய்வது எனக்கு உதவுங்கள் தோழிகளே..

:‍) என் பையனைப் போல‌ இருக்கீங்க‌. அவரோடு யாராவது தமிழில் பேசினால் ஆங்கிலத்தில் பதில் சொல்ல‌ மாட்டார்; ஆங்கிலத்தில் பேசினால், பேசுபவர் தமிழரே ஆனாலும் தமிழில் பதில் சொல்ல‌ மாட்டார்.

தமிங்கிலம் _ படித்தால் தமிழ் தான். அதனால் மற்ற‌ சகோதரிகளைப் பின்பற்றாமல் இந்த‌ ஒரு விஷத்தில் நீங்கள் ஆரம்பித்தது போல‌ எப்பொழுதும் தமிழிலேயே தட்டுங்கள். இது தமிழ்த் தளம். அவர்களெல்லாம் 'அறுசுவை' வேண்டுகோளைப் பொருட்படுத்துவதில்லை என‌ மாட்டேன்; அவர்கள் மோபைலில் தமிழ் தட்டும் வசதி இல்லாதிருக்கலாம். உங்களால் முடிகிறது எனும் போது எதற்காக‌ தமிங்கிலம்!

//எல்லோரும் எனக்கு உதவி செய்ங்க.// என் உதவி தமிழில் தட்டுபவர்களுக்குத் தான் முதலில் கிடைக்கும். :‍)

//எனக்கு மட்டும் ஏன் மனசு இப்படி இருக்கு// உங்களுக்கு மட்டும் அல்ல‌. பலருக்கு இப்படி இருப்பதுண்டு.

//நான் தாயாவதை நினைத்தாலே என் மனதுக்கு கஸ்டமாக இருக்கு.// இல்லையென்று தோன்றுகிறது. இது ஒரு போர்வை. உண்மைக் காரணம் வேறு எதுவோ என்று தோன்றுகிறது எனக்கு. இந்த எண்ணப் போர்வைக்குள் உண்மைக் காரணத்தை மறைக்க‌ நினைக்கிறது உங்கள் மனது.

//மற்ற குழந்தைகளை பார்த்தால் அன்பு வருகின்றது// இது பெண்மைக்கான‌ குணம். //ஆனால் என் குழந்தை என்று எனக்கு எந்த பாசமும் வரவில்லை// வராது தானே! இதிலென்ன‌ குறை இருக்கிறது! பார்த்தது உங்கள் குழந்தை அல்ல‌; பாசம் எப்படி வரும்? எம் குழந்தை மேல் வருவது பாசம், நேசம் எல்லாம். மற்றக் குழந்தைகள் மேல் வருவது... சற்றுக் குறைவான‌ வகை... அன்பு! பிரியம்! கவர்ச்சி!

//நான் என்ன செய்வது.// மனதை வேறு விடயங்களில் திருப்புங்கள்.

வேலைக்குப் போகிறீர்களா? எங்கே என்ன‌ வேலை? வீட்டில் பொழுதுபோக்குகள் என்ன‌? தோட்டம், பிராணிகள் இவற்றில் ஈடுபாடு உண்டா? அழகாக‌ ட்ரெஸ் செய்யப் பிடிக்குமா? மேக்கப் பிடிக்குமா? உங்களுக்கு ஈடுபாடு அதிகமான‌ விடயம் என்ன‌? பதில் சொல்லி வையுங்கள். மீண்டும் வருகிறேன். நாளை முழுவதும் வரக் கிடைக்காது. உங்கள் பதில் இன்னும் 9 மணி நேரத்திற்குள் கிடைக்காவிட்டால் என் பதில் ஞாயிறு மதியத்தின் பின் தான் கிடைக்கும்.

//நான் இப்படி வாழ விரும்ப வில்லை.// இது உங்கள் தெரிவு. குழந்தையைப் பின்போட்டது ஒரு வகைத் தெரிவு. அதில் தவறு எதுவும் இல்லை. அதை எண்ணி மனம் வருந்தக் கூடாது எப்போதும். சில‌ தெரிவுகள் எம் கையை மீறிய‌ வகை. சேலை வாங்குவது போல‌ அல்ல‌. வயது, காலம் என்று பல‌ வேறு காரணிகள் உங்கள் இந்த‌ இரண்டாவது தெரிவு நிறைவேற‌ உதவியாக‌ இருக்க‌ வேண்டும். இப்போதாவது வெளியே வர‌ நினைத்தது நல்ல‌ விடயம்.

//எனக்கு குழந்தை வேண்டும்.// இது வரை குழந்தை கிடைக்காததற்கு என்ன‌ காரணம் என்பதைத் தெரிந்துகொள்ளலாமா? பின்போட்டீர்கள் என்று மட்டும் சொன்னால் போதாது. விபரம் வேண்டும். எப்படிப் பின் போட்டீர்கள்? மாத்திரைகளாலா? அல்லது உங்கள் கணவர் உதவியோடு பின்போட்டீர்களா? அல்லது உடலுறைவைத் தவிர்த்தீர்களா? எப்படி? ஆரம்பத்தில் ஏன் தயக்கம் வந்தது என்பதையும் சொல்ல‌ வேண்டும். பதில் சொன்னால் உதவப் பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்

//அதற்கு நானே தடை// எப்படி?
//எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ரொம்ப பயமாக உள்ளது.// ஏன்? என்ன‌ பயம்? //பயம் வேறு என்னை கொள்கிறது.// கொல்கிறதா? என்ன‌ பயம்?
//அதை நினைத்தாலே உடம்பு நடுங்குகிறது// எதை? ஏன்?

//குழந்தை இல்லை.// என்பதற்கும் 'தவிர்த்தேன் / பின்போட்டேன்' என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மருத்துவரிடம் செல்ல‌ நேர்ந்தால் தெளியவாக‌ இதைச் சொல்ல‌ வேண்டும். அல்லாவிட்டால் உங்கள் உடலில் தான் குறை இருப்பதாகத் தவறாக‌ எண்ணிக் கொண்டு சிகிச்சையில் இறங்கி விடுவார்கள்.

எப்படியோ காலத்தை கடத்தி விட்டேன்.// எப்படி?

//நான் என்ன செய்வது// முதலில் மேலோட்டமாகத் தகவல் கொடுப்பதை விட்டு விபரமாகத் தட்டுங்கள். என்ன‌ செய்யலாம் என்பதைப் பிறகு பார்ப்போம்.

‍- இமா க்றிஸ்

மன்னிசிடுங்க அக்கா. நான் தமிழிலயே பதிவு போடுறன் இனி.நானே தடை என்று சொன்னது என் பயம் தான் அதற்கு காரணம். கணவர் ஆணுறை பாவித்ததால் குழந்தை பெற்றுக்கொள்ள வில்லை.எனக்கு தெரிந்தவர்கள் சென்னார்கள் பிரசவம் ரொம்ப வலியா இருக்கும் என்று அதை யோசித்து யோசித்து மனசு ரொம்ப பயந்துட்டு.
வீட்டுல் மீன்., கிளி வளர்க்கிறேன். ஆனால் எதிலும் என் கவனம் செல்ல வில்லை. குழந்தை நினைவாகவே உள்ளது. இப்போது கணவர் குழந்தை வேண்டும் என்கிறார். எனக்கோ மனக்குழப்பமாக உள்ளது.

எதற்கு பயமாக‌ இருக்கு உங்களுக்கு 2 வருடங்கள் உங்களுக்காக‌ உங்கள் கணவர் பொறுத்து கொண்டுள்ளார்.நாங்கள் எல்லாம் எப்ப எங்களுக்கு கடவுள் அந்த‌ பாக்கியம் குடுப்பார் என்று காத்து கொண்டு இருக்கோம்.யாரையுமே செய்யாத‌ விசயத்தையா நீங்கள் செய்ய‌ போகிறீர்கள் எதற்கு பயம் வேண்டாம்
பயம் என்று சொல்லி கொண்டு பின்னால் கவலைப்படாதீங்க‌.உங்களுக்கு எந்த‌ பிரச்சனையும் இல்லாமல் இருந்து பயம் மட்டும் தான் காரணம் என்றால் அதை விடுத்து சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

நான் என்னை மாற்றிக்கறன் அக்கா. இம்மா,நீங்க, மற்ற அக்கா எல்லோரும் சொல்லும் போதும் மனசுக்கு ஆறுதலா இருக்கு. என் கணவர் ரொம்ப நல்லவர் அவருக்கு ஒரு குழந்தைய பெற்றுத் தரனும் என்று தான் நானும் விரும்புரன்

எனக்கு சற்று மாதவிடாய் தள்ளி போய்விட்டது.என் முதல் குழந்தை பெண்.நான் கர்ப்பமாக இருக்கும்போது எனக்கு காலையில் சோர்வு அதிகமாக இருந்தது.. நிறைய வெள்ளை படுதல் இருந்தது.
இப்பொழுது வெள்ளை படுதல் இல்லை. சிறுநீர் கொஞ்சம் நாற்றம் எடுக்கிறது.
முதுகு வலி,கால் வலி,மார்பு வலி மட்டும் கொஞ்சம் இருக்கிறது.
நான் நல்ல ஆக்டிவாக இருக்கிறேன்.
உங்களுக்கு இந்த மாதிரி இருந்ததா?
என் முதல் குழந்தைக்கு ஒரு வயது ஆறு மாதம்ஆகின்றன..
நான் தினமும் உடற்பயிற்சி செய்து வருகிறேன்
என் வயிற்றில் தொப்பை குறைய..
ஆனால் நான்கு நாட்களாக உடற்பயிற்சி செய்தும் வயிறு வட்ட வடிவில் இருக்கிறது.
அதுதான் கொஞ்சம் சந்தேகமாக உள்ளது..

Naan garbama ga irukum pothu en magaluku 10maathangal than apoluthum thaai paal kuduthu kondu irunthen 1vayathu vari koduthen. En paiyan pirakum pothu 19 maatham ponuku. Enaku vellai paduthal athigamaga irunthathu, ponuku vomit irunthuchu paiyanuku illai. Maarbu vali illai pa. Active a irunthen 7months vara rations vara ration kadaiku kuda naan than poven. Enaku normal delivery nala perusa kasta padala 2nd baby ku apuram en ponum engaum pogamaten nu hospital la than en kuda iruntha. Family planning 3days apa ila remba engi poita. Piranthathuku apuram than 2dum china pilaigala samalika than konjam kastama iruku. Neenga 1st check panuga +ve na vetulayum docter consul panuga. Ungaluku 1st child normal delivery na prblm ilanu nenaikuren, c-section na docter consul panuga unga health ku ok va nu.

Enaku periods vanthutunga.. Yedho intha time konjam asaiya irunthuchi. Arusuvai la naraiya beru conceive ah irukaganu pakumbothu.. Saringa ellame nanmaiku dhan.
Unga adviceku romba thanksga..
Ungalukum unga sisterkum same ah delivery acho??neega sonnatha niyabagam iruku.
Na pona month only one day contact la irunthom.adhan pregnant ah irukumonu thonuchi...
Koodiya seekiram nanum conceivenu solrenga..
Romba asaiya iruku..
First first conceive aanappo payangara payam enaku yarume support kedayadhu..payanthu payanthe caesarean achi..
Ippo neegalam irukrathala thuli kuda payam illa..caesarean na kuda ok nu thonudhu..

Mm ok sister apa sekirama gud news solunga. 2ndu kulanthai aduthu aduthu na oru 2yr valaka than kastam konjam vanthutanga na apuram namaku easy a irukum. Naan ipa housewife than. Oru 3yr kalichu 2du peraum pre kg, lkg sethu tu velaiku pogalam nu iruken pa.

Nanum ungala madhiri dhan mudivu eduthurukenga. Next year innor baby pethukittu..two yearsku apram job poganum..

மேலும் சில பதிவுகள்