தாய்மை

வணக்கம் தோழிகளே.நான் அறுசுவைக்கு புதிது. திருமணமாகி 2 வருடங்கள். குழந்தை இல்லை. அதற்கு நானே தடை எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ரொம்ப பயமாக உள்ளது.எப்படியோ காலத்தை கடத்தி விட்டேன். ஆனால் எனக்கு இப்போது குழந்தைக்கு ஆசையாக உள்ளது. அதை நினைத்தாலே உடம்பு நடுங்குகிறது பயம் வேறு என்னை கொள்கிறது. நான் என்ன செய்வது எனக்கு உதவுங்கள் தோழிகளே..

Mm k pa Nalathu. Kudi sekiram nala saithiya pathivu panuga arusuvai la.

//எனக்கு தெரிந்தவர்கள் சென்னார்கள் பிரசவம் ரொம்ப வலியா இருக்கும் என்று// எல்லோருக்கும் அப்படி பொறுக்க‌ முடியாத‌ விதமாக‌ வலி இருப்பதில்லை. உங்கள் அம்மாவும் மாமியாரும் என்ன‌ சொன்னார்கள்? 'வலி பொறுக்க‌ முடியாது உங்களால்,' என்றார்களா? கேட்டுப் பாருங்கள். //ரொம்ப வலியா இருக்கும்// என்று சொன்ன தெரிந்தவர்களுக்கு ஒரே ஒரு குழந்தைதானா? அவர்கள் கூட‌ இரண்டாவது குழந்தை பெற்றிருப்பார்கள். பொறுக்க‌ முடிந்ததால்தானே இது சாத்தியமாயிற்று! இருக்கிற‌ வலியும் கொஞ்ச‌ நேரம்தான். பிறகு மெதுவே உடல் பழைய‌ நிலைக்கு மாறிவிடும். திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில் வரும் பிரசவக் காட்சிகளை நம்ப‌ வேண்டாம். சற்று மிகையாக‌ எடுக்க‌ வேண்டிய‌ தேவை அவர்களுக்கு இருக்கிறது. அது வியாபார‌ தந்திரம்.

//என் கணவர் ரொம்ப நல்லவர் அவருக்கு ஒரு குழந்தைய பெற்றுத் தரனும் என்று தான் நானும் விரும்புரன்// (சம்பந்தம் இல்லாமல் தலைப்புக்கு வெளியே ஒரு கேள்வி _ நீங்கள் இலங்கையரா?) :‍) பெற்றுக் கொடுக்க‌ வேண்டும் என்று விரும்புகிறீர்களே தவிர‌, 'நீங்கள் பெற்றுக் கொள்ள‌ வேண்டும்,' என்று விரும்பவில்லை. மற்றவர்களுக்கு உதவுவது போல் நினைத்து குழந்தை பெற்றுக் கொள்வது... ம்ஹும்! சரிவராது. பெற்ற‌ பிறகு நல்ல‌ தாயாக‌ இருக்க‌ உங்களால் முடியுமா? அதற்கு நீங்கள் மனதளவில் தயாரில்லை என்று தோன்றுகிறது. உங்களுக்கே உங்களுக்கு என்று விருப்பம் இருந்தால் தவிர‌, தயக்கங்கள் & அதன் காரணமாக‌ மனம் சாக்காகச் சொல்லும் சந்தேகங்கள் எல்லாம் இருந்தே ஆகும்.

உங்களுக்கு உதவ‌ நினைத்து நான் கேட்டிருந்த‌ கேள்விகள் பலவற்றுக்கு எனக்குப் பதில் கிடைக்கவில்லை. பதில் கிடைக்காததிலிருந்து இங்கு நீங்கள் உதவி கேட்டது _ முழுமனதாகத் கேட்கவில்லை என்பதாகத் தான் எடுத்துக் கொள்ள‌ முடிகிறது.

//எதிலும் என் கவனம் செல்ல வில்லை. குழந்தை நினைவாகவே உள்ளது.// இதில் சொன்ன‌ 'குழந்தை நினைவு' மற்றவர்கள் இந்தத் தலைப்பில் உங்களோடு பேசிய‌ பேச்சுக்களின் நினைவே தவிர வேறு எதுவும் இல்லை. அவர்களிடம் என்ன‌ சொல்லலாம் என்கிற‌ பதில்களைத் தயாரிப்பதில் மனம் ஈடுபட்டு இருக்கிறது. உங்கள் மனதில் உங்களுக்குக் குழந்தை இல்லையே என்னும் ஏக்கம் இல்லை. சரிதானே!

//எனக்கோ மனக்குழப்பமாக உள்ளது.// இன்னொரு இழையில் உங்கள் பதிவுகள் படித்தேன். நீங்கள் குழப்பமாக‌ இல்லை. தெளிவாகவே இருக்கிறீர்கள் _ குழந்தை இப்போது வேண்டாம் என்னும் முடிவில் தெளிவாக‌ இருக்கிறீர்கள். இங்கு சகோதரிகளிடமிருந்து கிடைக்கும் பதில்கள் எதுவும் உங்கள் மனதை மாற்றப் போவது இல்லை.

உங்கள் மனது இன்னும் தாய்மைக்குத் தயாராக‌ இல்லை. 'வயது இருக்கிறது,' என்று உங்களுக்கே தோன்றுகிறது. வீட்டார் என்ன‌ வேண்டுமானாலும் சொல்லலாம். உங்கள் கணவர் கூட‌ விரும்பலாம். ஆனால் அவர்கள் எவராலும் உங்களுக்காகக் குழந்தையை தம் வயிற்றில் சுமக்கவோ அந்தக் காலகட்டத்தை உங்களுக்காக‌ வாங்கிக் கொள்ளவோ முடியாது. அரை மனதாக‌ இறங்கக் கூடிய‌ காரியம் அல்ல‌ தாய்மை. விரும்பி முழுமனதாக‌ உள்ளே இறங்க‌ வேண்டும். அப்படியானால் மட்டும் தான் நீங்களும் உங்கள் குழந்தையும் சந்தோஷமாக‌, ஆரோக்கியமாக‌ இருக்க‌ முடியும்.

இப்போது இருப்பது போலவே வாழ்க்கையைத் தொடருங்கள். மனம் தயாரான‌தும் உங்கள் உள்ளுணர்வு சொல்லும். அதன் பின்னால் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். அதுவரை சந்தோஷமாக் வாழ்க்கையை அனுபவியுங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

~~~~~~~
ஒரு வேண்டுகோள், இனி இந்தத் தலைப்பில் என்ன‌ பேசுவதானாலும் இருக்கும் இந்த‌ 2 இழைகளிலுமே பேசுங்கள். திரும்ப‌ தனி இழை தொடங்க‌ வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

வணக்கம் அம்மா. எனக்கு 20வயது தான். திருமணமாகி 2 வருடங்கள் கழித்து இப்போ தான் குழந்தை பெற நினைக்கிறேன் மனம் குழந்தைக்கு ஆசை படுகிறது தான் ஆனால் பயம் தான் என்னை தடுக்கிறது வேறு எந்த காரணமும் இல்லை. அது தான் அந்ந பயத்தை தணிக்க அறுசுவைல பிரசவம் எப்படி வலி எப்படி இருக்கும் என்று தெருந்து கொள்ள பதிவு போட்டேன். ததெரிந்தவங்ககிட்டயும் அதில் எனக்கு திருப்தி இல்லை. பயம் நீங்கினால் நான் தைரியமாய் தாய்மைக்கு தாயாராகுவேன்.
நான் இலங்கை ல தான் இருக்கேன். அம்மா மாமியார் எல்லாம் 2 வருடம் குழந்தை தள்ளி போட ஆலோசனை சொன்னாங்க..

இந்த பொண்ணு பத்தி நான் நினைத்தது அனைத்தும் நீங்கள் கூறிவிட்டீர்கள். உண்மை அனைத்தும் உண்மை.
அதனால் தான் எனக்கும் பதில் போட விருப்பம் இல்லை.
எல்லோரையும் தன்னிடம் பேச வைக்கவே மாற்றி மாற்றி கருத்து கூறினார்.
நீங்கள் நேரடியாக கூறிவிட்டீர்கள்.
உங்கள் தைரியம் அனைத்திற்கும் என் நன்றிகள்..
உங்களுக்காகவே என் அலைபேசியில் தமிழில் தட்டுகிறேன்..

//அந்ந பயத்தை தணிக்க அறுசுவைல பிரசவம் எப்படி வலி எப்படி இருக்கும் என்று தெருந்து கொள்ள பதிவு போட்டேன்.// :‍) உங்களை இன்னும் பயமுறுத்துவது போலவும் இங்கு பதில்கள் கிடைக்கலாம். :‍)

//தெரிந்தவங்ககிட்டயும் அதில் எனக்கு திருப்தி இல்லை.// & //பயம் நீங்கினால் நான் தைரியமாய் தாய்மைக்கு தாயாராகுவேன்.// இதற்கு உங்கள் குடும்ப‌ மருத்துவரிடம் கதைப்பது ஒரு நல்ல‌ வழி. கதைச்சுப் பாருங்க‌.

//நான் இலங்கை ல தான் இருக்கேன்.// ப்ரொஃபைலில் காணவில்லை. ஊகித்தேன், அதனால் கேட்டேன்.

//அம்மா மாமியார் எல்லாம் 2 வருடம் குழந்தை தள்ளி போட ஆலோசனை சொன்னாங்க.// இந்த‌ மாதிரி அட்வைஸ் சொல்லக் கூடிய‌ அம்மாவும் மாமியும் இருக்கிறது எவ்வளவு நல்ல‌ விஷயம் தெரியுமா? அவர்களை விட உங்களை அறிந்தவர்கள் வேறு யாரும் இருக்க‌ முடியாது. தேவையானால் அவர்களை விட்டே உங்கள் கணவரிடம் கதைக்க‌ வைக்கலாம். இன்னும் இரண்டு என்ன‌, 5 வருடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். வயது முதிர்ச்சி உங்கள் பயத்தைத் தானாகப் போக்கிவிடும்.

அது வரை... ஏதாவது படிக்கலாமே! நன்றாக‌ உடுத்து சந்தோஷமாக‌ வாழ்க்கையை அனுபவிக்கலாம். தாய்மையின் பின்பு, இப்போது இருக்கிற‌ சுதந்திரம் கொஞ்சமாவது குறைந்து தான் போகும். கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துங்க; சந்தோஷமாக‌ இருங்க‌.

‍- இமா க்றிஸ்

உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி அம்மா

// உண்மை அனைத்தும் உண்மை.// நான் அப்படி நினைக்கவில்லை சகோதரி. எம் ஊகங்கள் தப்பாகவும் இருக்கலாம். //எல்லோரையும் தன்னிடம் பேச வைக்கவே மாற்றி மாற்றி கருத்து கூறினார்.// இங்கு வரும் பெரும்பாலானோர் பேச்சு இப்படி இருப்பதை அவதானித்திருக்கிறேன். இதில் தவறு எதையும் என்னால் காண‌ முடியவில்லை. தம் எண்ணத்தை முழுமையாக‌ வெளிப்படுத்த‌ முடியாத‌ தருணங்களில் / சகோதரிகளிடமிருந்து தாம் நினைத்ததற்குச் சாதகமான‌ பதில் கிடைக்காத‌ தருணங்களில் உதவி கிடைக்கவில்லையே என்கிற‌ ஆதங்கத்தில் தொடர்ந்து கேள்விகளை வைக்கிறார்கள். படிப்பவர்கள் பார்வைக்கு இது எப்படி வேண்டுமானாலும் தெரியலாம்.

எம் பதில் கூட‌ கேள்வியைப் படிக்கும் சமயம் உள்ள‌ எம் மனநிலையைப் பொறுத்து ஆதரவாகவோ அல்லாமலோ அமைந்துவிடும் இல்லையா? :‍) கேள்வி கேட்பவரது அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது இது.

//உங்கள் தைரியம் அனைத்திற்கும் என் நன்றிகள்..// :‍) நன்றி சகோதரி. ஆனால் அதற்குப் பெயர் தைரியம் அல்ல‌. உண்மையில் அவருக்கு உதவ‌ வேண்டும் என்கிற‌ எண்ணம் இருந்தது. சில‌ சமயங்களில் என் தொழிற்பழக்கம் காரணமாக‌ டமார் என்று நினைக்கிறதைப் போட்டு உடைத்துவிடுகிறேன். :‍) பதிலைப் பெற்றவர் அடிபட்டுப் போய் விடுவாரோ என்கிற‌ பயம் எப்பொழுதும் அடிமனதில் இருப்பதுண்டு. என் பதில் அவர்களைச் சிந்திக்க‌ வைக்குமானால் அதுவே அவர்களைத் தீர்வை நோக்கி வழிநடத்தப் போதும் என்று சமாதானம் ஆகி விடுவேன். :‍)

//உங்களுக்காகவே என் அலைபேசியில் தமிழில் தட்டுகிறேன்..// :‍) ஆஹா! அருமை. மிக்க‌ நன்றி. இனி அறுசுவைக்காக‌ தொடர்ந்து தமிழில் தட்டலாம் இல்லையா! நிச்சயம் தட்டுவீங்க‌ என்று நம்புகிறேன்.

‍- இமா க்றிஸ்

Na arsuvaiku pudusu pa Enaku thirumanam mudindhu 8 month agudhu na innum consive agala enaku edhhavadhu vazhi sollungapa

Enaku thirumanam mudindhu 8 month agudhu na innum consive agala enaku edhhavadhu vazhi sollungapa

நல்லதே நடக்கும்.பயப்படாதீங்க. இந்த லின்க் போய்ட்டு எது வேணுமோ அதை பொறுமையாக படிங்க,

http://www.arusuvai.com/tamil/forum/297

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

மேலும் சில பதிவுகள்