தாய்மை

வணக்கம் தோழிகளே.நான் அறுசுவைக்கு புதிது. திருமணமாகி 2 வருடங்கள். குழந்தை இல்லை. அதற்கு நானே தடை எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ரொம்ப பயமாக உள்ளது.எப்படியோ காலத்தை கடத்தி விட்டேன். ஆனால் எனக்கு இப்போது குழந்தைக்கு ஆசையாக உள்ளது. அதை நினைத்தாலே உடம்பு நடுங்குகிறது பயம் வேறு என்னை கொள்கிறது. நான் என்ன செய்வது எனக்கு உதவுங்கள் தோழிகளே..

எனது 24 வது வயதில் நான் திருமணத்திற்கே பயந்தேன்.மாப்பிள்ளை எப்டி அமையுமோன்னு. இந்த பொன்னு 20 வயதில் பயப்படுவது தப்பே இல்லை.
1.SN பேபி: உங்களுக்கு பேபி வேணுமா இல்ல வேணாமா.
2.வேணாம்னா கணவர்ட்ட உங்க மனச எடுத்து சொல்லுங்க.
3.வேணும்னா , முழுமூச்சா முயற்சியில் இறங்குங்க.
4.பிரசவலிக்கு பயமா? திரைப்பட மசாலாவை நம்பாதீங்க.பெட்ஷீட்டை கிழிப்பது ஆஆஆனு கத்துவதும் உண்மையல்ல. எனது பிரசவம் சரியாக 3 மணி நேரமே.விட்டு விட்டு வலித்தது.தாங்கும்படியே மலம் கழிக்கும் உணர்வே இருந்தது.
5.அருசுவையில் படித்தது: ஆக்சிடென்ட் ஆகிட்டு 300 தையல் போடும்போது உள்ள வலிய விடவா பிரசவ வலி பெரியது.
6.அட போமா.. ஒரு பிரசவ வலிக்கு பார்த்தால் எத்தன் பேரு அடுத்தடுத்து பெத்துடு இருக்காங்க.
7.நிறைய பேரு கிடைக்கலன்னு வாழ்க்கையை வெறுத்துட்டு இருக்காங்க.ஒரு குழந்தை வயிற்றில் இருந்தால் அன்பு பாசம் பொறுப்பு எல்லாமே ஒன் தி வே.
8.திரும்பவும் 1 ,2,3 படிங்க. எனக்கும் உங்க முடிவை சொல்லுங்க..

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

பாராட்ட வார்த்தையே இல்ல. என்னா ஒரு தெளிவான விளக்கம். சூப்பர் ஜி. இதுதான் ENGIதமிழ். :-)

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

ஹாய் தோழிகளே...

நான் அறுசுவைக்கு புதுசு, நான் இதில் நிறைய கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொண்டேன், அப்றம் ஓவுலேஷன் நாட்களில் வெள்ளை படும் என்று கூறி இருந்தீர்கள், அதே போலவே வெள்ளை பட்டது, அப்றம் வலது பக்க வயிற்றில் ஏதோ ஊடுறுவது பொல் தென்படுகிறது இது எதனால் என்பது புரிவில்லை, வலது பக்கம் திரும்பி படுத்தால் வயிற்றில் ஏதோ முட்டுவது போல் உணர்வு ஏற்டுகிறது, எனக்கு நேற்று தான் 14 வது நாள்,

மேலும் சில பதிவுகள்