இரவில் குழந்தை சரியாக தூங்குவதில்லை

அறுசுவை தோழிகளுக்கு வணக்கம் என் மகளுக்கு 12வது மாதம் ஆரம்பமாகியுள்ளது இரவில் இட்லி அல்லது பால் சாதம் போன்ற திட உணவு தான் கொடுத்து தூங்க வைக்கிறேன் ஆனாலும் அவள் சரியாக தூங்குவது இல்லை அடிக்கடி எழுந்துவிடுகிறாள். இதற்கு என்ன செய்வது வேறு உணவு கொடுக்கவா இடையில் ஒரு 2 மணி நேரத்திற்க்குள் எழும்பொழுது பால் கொடுதாலும் குடிப்பதில்லை அதனால் பசி அல்ல என நினைக்கிறேன் பதில் சொல்லுங்கள் தோழிகளே

தோழிகளே உதவுங்கள்

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

இரவில் பால் குடிக்கவில்லை என்றால் பசி இல்லை என்று அர்த்தமா?இரண்டு வயது வரை நாம் என்ன உணவு கொடுத்தாலும் நள்ளிரவில் குழந்தைகளுக்கு பசி எடுக்கும்.
பால் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
Complan kesar badam வெந்நீரில் கலந்து கொடுங்கள்.
பசி இருந்தால் குழந்தை தூங்காது.
பசி எடுக்கும் சமயம் ஏதேனும் பிடித்ததை கொடுங்கள்.
நள்ளிரவில் இரண்டு முறைகண்டிப்பாக கொடுக்க வேண்டும்..

இரவில் பால் குடிக்கவில்லை என்றால் பசி இல்லை என்று அர்த்தமா?//இரவில் பால் குடிப்பதில்லை என்று சொன்னேன் ஆனால் நள்ளிரவில் அல்ல இந்து, ஒரு 9 மணிக்கு தூங்க வைத்தால் அரை மணி அல்லது 2 மணி நேரத்தில் எழும்பொழுது தான் குடிப்பதில்லை.3 அல்லது 4 மணி நேரத்தில் எழும்பொழுது குடிப்பால் அதனால் அது பசியின்மை என்றே தோன்றுகிறது. உங்கள் பதிலுக்கு நன்றி நா நீங்க சொன்ன மாதிரி முயற்சி செய்து பார்க்கிறேன்

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

இது எல்லா குழந்தைகளும் பன்றது தான். சாப்பிட்டதும் தூங்க வைக்கும் முன் பால் அரை டம்ளராவது கொடுத்து விட்டு தூங்க வையுங்கள். அப்பொழுது தான் அரை மணிநேரத்தில் எழுப்ப மாட்டார்கள்.
தொண்டை வறண்டு போகும் நேரம் தூக்கம் ஒரு பக்கம் இரண்டுமே காரணம் குடிக்காமல் போவதற்கு.
தூங்கும் முன் என்ன சாப்பிட்டாலும் பால் கொடுத்து தூங்க வையுங்கள்..

இழைத் தலைப்புக்குச் சம்பந்தமில்லாதது போல் இருக்கலாம் இந்த‌ இடுகை. ஆனால் இது முக்கியமாகக் கவனத்தில் எடுக்க‌ வேண்டிய‌ விடயம் என்பதால் சொருகி விட்டுப் போகிறேன். ;‍)

இப்போது குழந்தைக்கு இருப்பவை பாற்பற்கள்தான் என்றாலும் அவற்றிலும் கவனம் இருக்கட்டும். இரவில் தூங்கும் முன் ஒரு தடவை பல் துலக்கிவிடுங்கள்; காலையிலும் மறக்க‌ வேண்டாம். பல்வலி வந்தால் படுத்தி எடுத்து விடுவார்கள் குழந்தைகள். பெரியவர்களாலேயே தாங்க‌ முடியாத‌ விடயம் அல்லவா?

‍- இமா க்றிஸ்

இந்து என்ன உணவு கொடுத்தாலும் பால் கொடுத்துதான் தூங்க வைக்கிறேன்,இமா அம்மா என் பொன்னுக்கு நான்கு பல் முளைத்துள்ளது 11 மாத குழந்தைக்கு டூத்பேஸ்ட் பயன்படுத்தலாமா (பேபி டூத்பேஸ்டைதான் கேட்கிறேன் அம்மா) இருவருக்கும் எனது நன்றிகள்.

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

ஒரு சின்ன சந்தேகம் தெரிந்து கொள்ள ஆர்வம். நீங்கள் இலங்கை தமிழர் என்று நிறைய பதிவை பார்த்து அறிந்து கொண்டேன். ஆனால் தமிழ் உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது.
இலங்கையில் தமிழில் பாடம் கற்பிப்பார்களா?
உங்கள் தமிழ் வாங்கியம் மிகவும் தூய தமிழாகவும் அழகாகவும் உள்ளது.
உங்கள் பதிவை பார்த்து நிறைய தமிழ் வார்த்தை அறிந்து கொண்டேன்.

Unga baby walk panragala? Nalla vilayada viduga .ennoda son ennoda brother son elam nalla vilayaduvaga sapadave mataga compule panna dhon sapduvaga .neega food 7.30 Kumar kouduthu nalla vilayada viduga apram thugu na baby nalla thuguvaga .mother feeding irundha night la kouduga .Baby valara valara sleeping time kuraiyum.unga baby ku first bday mudunjuducha

Hi swati how r u unga baby epdi irukanga en ponnu wall puduchu nadakra iipo dha 11month complete agiruku

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

Ennoda baby fine .Baby ku night food ooti konja neram vilayada vaiga .apram one glass milk or mother feeding kouduthu thuga vaiga .pasi ya irundha baby aluguvaga .valara valara baby sleeping time reduce agum sis.two years varaikum baby ku mid night pasikum .so athuketha mathiri cow milk or feeding koudutha nalla thuguvaga sis.

மேலும் சில பதிவுகள்