இரண்டு பெண் குழந்தைகளை சமாளிக்க வழி சொல்லுங்கள்.

வணக்கம்.எனக்கு 2 பெண் குழந்தைகள்..பெரிய பொண்ணுக்கு 2 வயது.சிறிய பொண்ணுக்கு 2 மாதம்.பெரிய பொண்ணு எதற்கு எடுத்தாலும் அடம் பிடிக்கரால்.ரொம்ப சுட்டி.இப்போ அம்மா வீட்ல இருக்கேன்.அம்மா அப்பா ரெண்டுபேரும் வயசு ஆனவக.எனக்கு 2 குழந்தைகலூம் ceserian.family planing பண்ணி இருக்கு.என்னலா இன்னும் வீட்டு வேலை சரியா செய்ய முடியல.அம்மா எனக்கு வேலை செய்யவே time சரியா இருக்கு.பெரிய பொண்ணு அம்மாவ எந்த வேலையும் செய்யவிடமா அவல எடுத்து வச்சிக்க சொல்லி அடம் பிடிக்கரா.பெரிய பொண்ண சமாளிக்கவே ஒரு ஆள் தேவைப்படுது.இன்னும் ஒரு மாதத்துல எங்க வீட்டுக்கு போக போறம்.நாங்க தனிக்குடித்தனம் உதவிக்கு யாரும் இல்லை. ரொம்ப அடம் பண்ணும் போது அம்மாவோ அப்பாவோ அடிச்சரான்கா.அவ அழும் போது எனக்கு அழுகை வந்துருது.நான் இப்போ வரைக்கும் அடிச்சது இல்ல.ரெண்டு குழந்தை யும் சமாளிக்க எனக்கு வழி சொல்லுங்க.

மூன்று வயசு வித்தியாசத்தில் இரண்டாவது குழந்தைக்கு நீங்க பிளான் பண்ணி இருக்கலாம் இப்போ உங்களுக்கும் சிரமம் ரெண்டு குழந்தைக்கும் சிரமம். சரி விடுங்க இப்போ என்ன பண்ணலாம்னு யோசிங்க.

எனக்கும் என் தங்கைக்கும் ஒரே சமயத்தில் குழந்தை பிறந்ததால் என் பொண்ணுக்கும் தங்கச்சி பையனுக்கும் 4 மாத வித்தியாசம் தான் அம்மா வீட்டில் தான் நான் இருக்கிறேன் என் தங்கை பக்கத்தில் தான் கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்கோம் அதனால் எப்பவும் என்னோட பாப்பாவும் குட்டி பையனும் அடம் பிடிச்சிட்டே இருக்காங்க ரெண்டு பேருக்குமே ரெண்டு வயசு ஆகுது இப்போ ரொம்ப குறும்பு தான் எங்களாலும் சமாளிக்க முடியறது இல்ல அவீங்க பிறந்ததுல இருந்தே ரெட்டை குழந்தைகள் பாத்துகிற மாதிரி தான் இருக்கு எங்களுக்கு :)

எனக்கு புரியுது உங்க பீலிங் . நான் என்னோட பாப்பா சமாளிக்க செய்ற விஷயங்களை ஷேர் பன்றேன் ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப அடம் பிடிக்கும் சமயத்தில் பாப்பாக்கு என்னோட மொபைல்-ல பொம்மை சாங்ஸ் போட்டு கையில் கொடுத்துருவேன் கொஞ்சம் நேரம் தான் அது வேலை செய்யும் ஆனா ரொம்ப முக்கியமா வேலை செய்யும் போது இப்படி பண்ணுங்க . அப்புறம் நிறைய மார்க்கெட்-ல் புதுசு புதுசா குழந்தைங்க விளையாட்றதுக்கு வித்தியாசமா பொம்மை, கட்டிங் ப்ரூட்ஸ் வெஜிடபிள்ஸ் னு வந்து இருக்கு அது வாங்கி கொடுங்க பாப்பாக்கு.. நல்ல அவளாவே தனியா விளையாட பழக்குங்க எல்லாம் கொஞ்சம் நாள் தான் அப்புறம் சின்னவ வளந்திட்டா ரெண்டு பேருமே ஒண்ணா விளையாடுவாங்க அப்புறம் சிரமம் கம்மி ஆயிரும் :)

குட்டி பாப்பாக்கு இப்போ ரெண்டு மாசம் தான ஆகுது அடிக்கடி அப்போ தூங்கிருவாங்க இல்ல அந்த டைம் பெரிய பாப்பா மடியில் வெச்சு பேசுங்க அவளும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவா இல்ல இவ்ளோ நாள் அவளையே பாத்துட்டு இருந்து இருப்பீங்க இப்போ புதுசா குட்டி பாப்பாவை எந்நேரம் வெச்சு இருந்தீங்கன்னா அவளுக்கும் யாரையாவது எடுத்து வைக்க தான் சொல்லுவா சோ முடிஞ்ச வரைக்கும் பெரிய பாப்பாக்கும் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க இப்போ தான் ரெண்டு வயசு சொல்றீங்க என் பொண்ணுக்கும் ரெண்டு வயசு தான் இப்போ மழலையா பேச ஆரம்பிச்சிருப்பா இல்ல அதெல்லாம் ரசிக்கணும் இல்ல அவ கூட நிறைய பேசுங்க நிறைய விளையாடுங்க நம்ம கைல தான் இருக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகிக்க வேண்டாம் தனியா போனதும் நேரமா எந்திரிச்சு டைம் டேபிள் போட்டு செய்ங்க வேலை எல்லாம்... நம்ம குழந்தைங்க தானே முக்கியம் அவீங்கள நல்லா பாத்துக்க வேண்டியது நம்ம பொறுப்பு அதை நம்ம சரியா செய்யணும். தனியா போனாலும் பெரிய பாப்பாவை உங்க கண்காணிப்பிலே வைங்க யாரையும் நம்பி பக்கத்து வீட்டில் இப்படி எல்லாம் தர வேண்டாம் நம்ம குழந்தைகள நம்ம பாத்துக்கிட்டா தான் சரி வரும் காலம் அப்படி இருக்கு உங்களுக்கு புரியும் நினைக்கிறேன் .நீங்க ரொம்ப குழம்பிக்க வேண்டாம் பிரீ யா விடுங்க சந்தோஷமா இருங்க குழந்தைக கூட.

//ரொம்ப அடம் பண்ணும் போது அம்மாவோ அப்பாவோ அடிச்சரான்கா.அவ அழும் போது எனக்கு அழுகை வந்துருது.// பாவம் அம்மாவும் வயசானவங்க சொல்றீங்க வேலை செய்றது சிரமம் தானே பட் அடிச்சா கஷ்டமா தான் இருக்கும் அடிக்க வேண்டாம் ன்னு அம்மா கிட்ட பொறுமையா சொல்லுங்க .எங்க அம்மா என்னோட பாப்பாவை அடிச்சதே இல்ல எவ்வளவு சேட்டை பண்ணாலும் சத்தம் தான் போடுவாங்க இத்தனைக்கும் நான் வேலைக்கு போகிறேன் அவீங்க தான் பாத்துப்பாங்க தம்பியையும் பாப்பாவையும் :) பாப்பா கிட்ட பிரீ டைம் ல பேசுங்க அம்மம்மா தொல்லை பண்ண வேண்டாம் நீ குட்டி பாப்பா கூட பேசு அவ உன்ன பாத்து சிரிக்கிறா பாரு இப்படி எல்லாம் பேசிட்டே இருங்க 2 வயசு தானே புரியவா போகுதுன்னு நினைக்க வேண்டாம் அதெல்லாம் நல்லாவே புரியும் . பெரிய பாப்பாவையும் ஒரு நேரம் தூங்க வைங்க நல்ல ரசம் சாதம் காய்கறி கொடுத்து . தூங்காம இருந்தாலும் அடம் பிடிப்பாங்க அதான் சொல்றேன் அவளுக்கும் சாப்பாட்டு விஷயத்தில் கவனிங்க . சந்தோஷமா இருங்க நல்ல சத்துள்ள புட் ஆ நீங்களும் எடுத்துக்கிங்க ரெண்டு குழந்தையும் நல்லா பாத்துக்கோங்க :)

En ponuku Nov 2 vanthathan 2vayasu aga poguthu, paiyanuku 7months pa. But Normal delivery. Naanga joint family. Enaku 45days la family panom. Apa than en sister kum delivery achu. So operation pani mamiyar vetuku vanthu ten avangalum vayasanavanga naanga irukurathu madila joint family a thavira 5days la decharge anathula irunthu en pilaigala kulipata, bathroom kaluva ellame naan than pathukiten methu va methu va remba kasta paten sapadu matum senchu kudupanga epayachum papa va vachuku vanga. En ponu thukunu than adam pidipa avaluku pidicha song ila video poduven tv la. Mudiyatha visayathuku adam pidicha mind a pidicha visayathula choclate, biscuit, snacks kuduthu divert panuven athukum kekati vitruven aluthu te thungiruva. Ipa vara thuvaika, samaika, kulipata, nama kulika, 2pilaikum sapadu oota na 24hrs 24minutes mathiri oodiruthu free a paduka mudiyala. Naan kuda sila time remba kovam vantha adipen enga amma satham poduvanga ena than. Thita kuda matanga papa va.

//பொண்ணு எதற்கு எடுத்தாலும் அடம் பிடிக்கரால்.// & //பெரிய பொண்ண சமாளிக்கவே ஒரு ஆள் தேவைப்படுது.இன்னும் ஒரு மாதத்துல எங்க வீட்டுக்கு போக போறம்.// இதனால்தான் இரண்டாவது வயிற்றில் தங்கியதுமே முதல் குழந்தையை அடுத்த‌ வரவுக்காகத் தயார்படுத்துவது முக்கியம். பரவாயில்லை, இப்போதிருந்து ஆரம்பியுங்க‌. பேசுங்க‌ பாப்பாவோட‌. நீங்க‌ நினைச்சா ஒரு மாசத்துல‌ ரெடியாக்கிரலாம்.

//எனக்கு 2 குழந்தைகலூம் ceserian.family planing பண்ணி இருக்கு.என்னலா இன்னும் வீட்டு வேலை சரியா செய்ய முடியல.// முடியணும். ட்ரை பண்ணுங்க‌. இரண்டு மாசம் ஆச்சுல்ல‌. இதுல்லாம் ஒரு பிரச்சினைன்னு நினைச்சுக்காதீங்க‌. ஒரு மாசத்துக்கு முன்னாலயே சரி ஆகி இருக்கணும். அதிகபட்சம் ஒரு மாசம் ஓகே. நீங்க‌ எத்தனை சீக்கிரம் வேலைகளை சாதாரணமாகச் செய்ய‌ ஆரம்பிக்கிறீங்களோ அத்தனை சீக்கிரம் சரியாவீங்க‌. அது தானா சரியான‌ பின் பார்க்கலாம் என்று இருந்தால்... இன்னும் 2 மாசத்துக்கும் மேல‌ இப்பிடியே சொல்லிட்டு இருக்கணும். உங்க‌ கஷ்டம் புரிஞ்சுக்காம‌ சொல்லல‌. இதை விட‌ சிரமமான‌ இடம் கடந்து வந்த‌ அனுபவம் இருக்கு. வெளி நாட்டுல‌ இருக்கிற‌ சகோதரிகளுக்கு எல்லாம் அம்மா பிரசவம் பார்க்கப் போக‌ முடியுறது இல்லை. சிலருக்கு ரெட்டைக் குழந்தைகள் கூட‌ இருக்கு. சமாளிக்கிறாங்க‌. மனம் உண்டானால் இடம் உண்டு.

உங்க‌ உடல் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் உங்க‌ குழந்தைகள் இருவரது நலனும். //அம்மா அப்பா ரெண்டுபேரும் வயசு ஆனவக.// ம்... உங்க‌ அப்பா, அம்மாவையும் உங்க‌ இன்னும் ரெண்டு குழந்தைகளா நினைச்சுக்கங்க‌. தைரியமா பழையபடி வேலைகளை ஆரம்பியுங்க‌.

//எனக்கு வேலை செய்யவே time சரியா இருக்கு.// என்ன‌ வேலை? அது முடியும் என்றால்!!! புரியவில்லை! புதிய‌ குழந்தையும் உங்கள் உடல்நிலையும் உங்கள் பிரச்சினை இல்லை என்கிறீர்களா இப்போது!!

//நாங்க தனிக்குடித்தனம் உதவிக்கு யாரும் இல்லை.// தேவையில்லை. நினைத்தால் எல்லாம் ப்ளான் பண்ணி செய்யலாம். இப்பவே பொறுமையா இருந்து யோசிச்சு எதை, எப்படி, எந்த‌ டைம்ல‌ செய்யப் போறீங்க‌ என்கிறதை ப்ளான் பண்ணிக்கங்க‌.

//ரொம்ப அடம் பண்ணும் போது அம்மாவோ அப்பாவோ அடிச்சரான்கா.// கண்ணா... அவங்க‌ இயலாமை அவங்களுக்கும் இருக்கும்ல‌! பாவம். ரெண்டு மாசம் அவங்க‌ கஷ்டப்பட்டிருக்காங்க. போதும். இதுக்கு மேல‌ எதிர்பார்க்காதீங்க‌. அவங்களை நல்லா வைச்சிருக்கிற‌ பொறுப்பும் உங்களுக்கு இருக்கு. நீங்க‌ இப்பவே கிளம்பி உங்க‌ வீட்டுக்குப் போய்ருங்க‌.

//அழும் போது எனக்கு அழுகை வந்துருது.// குழந்தைகளுக்கு நீங்கதான் தாய்; உங்க‌ அம்மா இல்லை. அவங்களை நம்பியா பெத்தீங்க‌! இல்லைல்ல‌! நீங்கதான் வளக்கணும். எனக்கு அவங்களை நினைச்சாதான் அழுகையா வருது.

//நான் இப்போ வரைக்கும் அடிச்சது இல்ல.// தனிக்குடித்தனம் போங்க‌. நீங்களே அடிச்சாலும் அடிப்பீங்க‌. ;)))))))

//ரெண்டு குழந்தை யும் சமாளிக்க எனக்கு வழி சொல்லுங்க.// முதல்ல‌ இங்க‌ இருந்து கிளம்புங்க‌. பிறகு நீங்களா புரிஞ்சுப்பீங்க‌.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்