பிரசவ அனுபவங்கள்

நான் திருமணமாகி மூன்று மாதத்தில் கரு தரித்தேன் .துணி துவைப்பது ,பாத்திரம் தேய்ப்பது போன்ற வேலைகளை சாதாரணமாக செய்தேன். எனக்கு வாந்தி ஆரம்பத்தில் இருந்து பிரசவம் வரை இருந்தது .நாங்கள் கூட்டுகுடும்பம் .மாமியார் ,மாமனார் பணிக்கு சென்று விடுவர் .என் கணவர் பணிக்கு செல்வார் .நான் காலை 11 மணிக்குள் வீட்டு வேலைகளை செய்து விடுவேன் .பிறகு தனியாக இருப்பதால் வரைதல் ,பாடல் ,போன்று இருக்கும் .மதியம் சிறிது நேரம் தூங்குவேன் .ஐந்தாம் மாதம் முதல் காலை ஒரு மணி நேரம் மாலை ஒரு மணி நேரம் நடை பயிற்சி செய்வேன் .எனக்கு ரத்தம் குறைவாக இருந்தது எனவே பீட்ரூட் தினமும் எடுத்து கொண்டேன் .மருத்துவமனை தவறாமல் சென்றேன் .மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை தவறாமல் எடுத்து கொண்டேன் .எனக்கு ஒரு மாதம் முன்பே சுக பிரசவமாகி உள்ளது .எனக்கு வயது 21

நான் 5 மாதம் கர்பம். பிரசவ வலி எப்படி இருந்தது தோழி.ரொம்ப வலி இருக்குமா.

நீங்கள் சென்னையில் வசிக்கிறீர்களா. நீங்கள் எந்த மருத்துவமனையில் பிரசவம் பார்த்தீர்கள்.

எப்பொழுது குழந்தையின் அசைவு உங்களுக்கு தெரிந்தது எனக்கு எப்பொழுதாவது வயிற்றில் கிள்ளுவது போன்று தெரியும் எப்பொழுத்தில் இருந்து நன்கு உணர முடியும் தோழி.

எப்படி இருக்கீங்க. பிரசவ வலி எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காதுன்னு சொல்லுவாங்க. இப்பவே ஏன் அது பத்தி தெரிஞ்சு பயத்த உண்டு பண்ணிகாதிங்க பா. அதுஅது நடக்கும் போது தன்னால தெரியும் . இப்பவே மனச போட்டு குழப்பிக்காம இருங்க சரண். இன்னும் ஐந்து மாதம் இருக்கு நல்லா என்ஜாய் பண்ணுங்க. நஞ்சுக்கொடி உங்களுக்கு இறங்கி இருகறத்தால ரெஸ்ட்லயே இருக்கனும். அது மட்டும் கேர்புல்லா பாத்துகோங்க.

ம்ம் சரிங்க சிஸ் என் மாமியாருக்கு கண்ணில் பூ விழுந்து விட்டதுன்னு சொல்லி ஒபேரஷன் பண்ண சொல்லிருக்கங்க சிஸ் இதுக்கு ஒபேரஷன் தா ஒரே வழியா. ஒபேரஷன் பண்ணா பழைய நிலைக்கு திரும்ப 3 மாதம் ஆகும் னு அம்மா சொல்றாங்க சிஸ் என்ன பண்றதுனே புரியல சிஸ்

ஆமா பா பூ விழுந்திட்டா ஆப்ரேஷன் தான் பண்ணணும். கவலை வேண்டாம். அவங்க பொண்ணு இருக்காங்கள்ல அவங்க ஹாஸ்பிட்டல் ல இருந்தா கூட நீங்க வீட்லயே சமையல் மட்டும் செஞ்சி கொடுங்க. இரண்டு மாசத்துல சரியா போய்டும்.

ஹாஸ்பிட்டல் ல ஒரு பத்து நாள் இருக்க வேண்டி வரும். அப்புறம் வீட்டுக்கு வந்திடலாம். என் மாமனாருக்கும் ஸ்டான்லி ஹாஸ்பிட்டல்ல பண்ணிணாங்க

இந்த இழை பிரசவ அனுபவம் பற்றியது

பிரசவ வலி என்பது மாறுபட்டது தான் .ஆனால் பொறுத்து கொள்ள கூடிய ஒன்று தான் .தெரியும் மிக முக்கியம் .நான் சேலம் .என் அம்மாவின் வீட்டில் தான் பிரசவம் .விநாயக மிஷன் மருத்துவமனை...

எனக்கு நான்காம் மாதத்தில் இருந்து குழந்தையின் ஓட்டம் தெரிந்தது பா

மேலும் சில பதிவுகள்