குழந்தைக்கு சாப்பிட‌

ஹாய் FRIENDS

என் பையனுக்கு 4 வயது தினமும் நான் வேலைக்கு சென்று வீட்டுக்கு வரும்பொழுது என் மகன் "அம்மா என்ன‌ வாங்கிட்டு வந்தீங்க‌" நு என் பையை தான் பார்க்கிறான் தினமும் lays chips, chocolates கேட்க்கிறான். அதற்க்கு பதில் அவனுகு என்ன‌ வான்கி கொடுப்பது என்று தெரியவில்லை உதவுஙகள்

//தினமும் lays chips, chocolates கேட்க்கிறான்.// இந்தப் பழக்கத்தை முற்றாக‌ நிறுத்துவது நல்லது.

//அதற்க்கு பதில் அவனுகு என்ன‌ வான்கி கொடுப்பது// பொம்மைகள், கலர் புத்தகம்! உணவு வாங்கிக் கொடுக்கும் பழக்கம் வேண்டாம், அதுவும் தினமும்! இதனால் குழந்தையின் பசி கெட்டுப் போகும். அனேகமான‌ நொருக்குத் தீனிகள் இனிப்பு, மாப்பொருள் & கொழுப்பு சேர்ந்தவை. உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல‌. ஆப்பிள், திராட்சை என்று விதம்விதமான‌ பழங்களை வாங்கிக் கொடுங்கள். வாரம் ஒரு நாள் மட்டும் இனிப்பு ஏதாவது கொடுக்கலாம். அது கூட‌... மீதி நான்கு நாட்களும் அடம் பிடிக்காமலிருந்தால்தான் கிடைக்கும் என்று அன்பாகச் சொல்லி வையுங்கள்.

பொம்மை, திராட்சை என்றாலும் கூட‌... தினமும் ஒரு அன்பளிப்பு என்பது அவசியம் இல்லை. மெதுவே இதை நிறுத்தாவிட்டால் சின்னவர் வளரும் காலத்தில் சிரமப்படலாம், பாவம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்