கொழும்பு, வெள்ளவத்த ஸ்கூல்

தோழிகளே.... நான் கொழும்பில் வெள்ளவத்தளில் வசிக்கிறேன்,என்னுடைய native place ஸ்ரீலங்கா இல்ல, அதனால் ஸ்கூல் பற்றிய information எனக்கு தெரியல, யாரவது வெள்ளவத்தளில் வசிக்கிறீர்களா, என் பையனுக்கு மூன்று வயதாகிறது, அவரை ஸ்கூலில் சேர்க்க நினைக்கிறோம், ஆனால் நல்ல ஸ்கூல் பற்றி எங்களுக்கு தெரியவில்லை, உங்களில் யாருக்காவது தெரிந்தால் உதவுங்கள் தோழிகளே..

இங்கு உங்களுக்குப் பதில் கிடைப்பதற்கான‌ சாத்தியங்கள் வெகு குறைவு. உதவி கிடைக்காது என்று கூடச் சொல்லலாம். காத்திராமல் அங்கு அயலில் உள்ளவர்களிடம் விசாரிப்பது நல்லது.

‍- இமா க்றிஸ்

எனக்கும் விபரம் தெரியாது. ஆனால் சகல பாடசாலைகளும் தரமானவையே. உங்களுக்கு அருகில் உள்ள பாடசாலையை தெரிவு செய்யுங்கள். தேசிய பாடசாலையில் (National) சேர்க்க விருப்பமா? அல்லது சர்வதேச பாடசாலையிலா? (inter national).
தேசிய பாடசாலையில் தமிழ் வழி கல்வியும் உள்ளது.ஆங்கில வழி கல்வியும் உள்ளது. இவற்றை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யுங்கள்.

எதுவாக இருந்தாலும் காலம் தாமதமாகி விட்டது விரைவாக அலுவல்களை பாருங்கள்.

தங்கள் குழந்தைக்கு 3 வயது என்பதை இப்போது தான் கவனித்தேன். இருந்தாலும் மேலுள்ள தகவல் கட்டாயம் பயன்படும் என நினைக்கிறேன். தற்போது பாலர் பாடசாலை என்பதால் தமிழ் அல்லது ஆங்கிலம் எந்த வழி கல்வி என்பதை பொறுத்து சேர்த்து விடுங்கள்.

தமிழ் கல்வியும் இருக்கணும் என்று தான் நினைக்கிறோம், இப்பொழுது தேர்ந்தெடுத்து விட்டோம், அருகிலேயே ஸ்கூல் இருக்கிறது, கிங்கே சென்று பேசி விட்டோம்,.. பத்துள் அளித்ததற்கு நன்றி தோழி

பொதுவாக மீன் பொறியலுக்கு நான் மிளகாய் தூளும், உப்பும் தான் போட்டு பிரட்டி பொறிப்பேன், ஆனால் அதில் டேஸ்ட் இல்லை என்று இப்பொழுது ஒன் வீக் ஆஹ் சக்தி பிஷ் மசாலா யூஸ் பன்றேன், இந்த மசாலா தினமும் உபயோகிக்கலாமா, என் பையன் பொறித்தால் மட்டும் தான் மீன் சாப்பிடுகிறான், அவனுக்கு இந்த மசாலா அதிகம் கொடுக்கலாமா,...

Pls rply me frnds...

வெள்ளவத்தை ஸ்கூலுக்கும் மீன் பொரிக்கிறதுக்கும் என்ன‌ தொடர்பு என்று யோசிக்கிறேன்!! :‍)

//இந்த மசாலா தினமும் உபயோகிக்கலாமா,// & //அவனுக்கு இந்த மசாலா அதிகம் கொடுக்கலாமா,...// எதுவும் அளவோடு இருப்பது தான் நல்லது.

//என் பையன் பொறித்தால் மட்டும் தான் மீன் சாப்பிடுகிறான்,// தினமும் பொரியலுக்குப் பழக்கப்படுத்துவதும் சரியில்லை என்றே சொல்லுவேன். வாரம் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் பரவாயில்லை. தினமும் எண்ணெய்ப் பொரியல் நல்லதா! பெரியவர்களுக்கு ஆகாது என்றால் சின்னவர்களுக்கும் ஆகாதுதான். தினமும் பொரியலில் இறங்காமல் மாற்று வழிகளை முயற்சி செய்து பாருங்கள். மீன் சம்பல் செய்து கொடுத்துப் பாருங்கள். மீனை உப்பு மஞ்சள் சேர்த்து அவித்து, முள் எடுத்துச் சுத்தம் செய்தபின் அரிந்த‌ வெண்காயம், மிளகாய் / மிளகு தூள், உப்பு, தேசிப்புளி சேர்த்துப் பிசைந்தால் சுவை நன்றாக‌ இருக்கும். கட்லட் செய்து கொடுக்கலாம்.

‍- இமா க்றிஸ்

இன்னொரு இழை ஆரம்பிக்க வேண்டாம் என்று தான் இதில்லையே கேட்டுவிட்டேன்,உங்கள் பதிலுக்கு நன்றி, நீங்கள் சொன்னது போல் முயற்சி செய்து பார்க்கிறேன்

மேலும் சில பதிவுகள்