நெஞ்சு சளி

என் குழந்தைக்கு ஒரு வயது ஆகிறது. நெஞ்சு சளி மற்றும் இருமல் அதிகமாக உள்ளது. மூக்கடைப்பு, தொண்டை கட்டியுள்ளது. அவளால் தூங்க முடியாமல் உள்ளது. Medicines not use. யாராவது நல்ல மருந்து சொல்லுங்கள் சகோதரிகளே

குழந்தைக்கு உங்க வீட்டு பெரியவங்கள் கேட்டு கைவைத்தியம் செய்ங்க,
குழந்தைங்க டாக்டர்கிட்ட காட்டுறது தான் பெஸ்ட், சின்ன குழந்தை அதான்.
நீங்க மெடிசன் நோ யூஸ்னு சொன்னதால, நான் எங்க அம்மா எங்க அக்கா குழந்தைக்கு செய்ததை சொல்றேன், வெத்தலையை நல்ல எண்ணெய் விளக்குல வாட்டி, சூடு அதிக இல்லாம நம்ம கைவச்சு பார்த்துட்டு குழந்தை நெஞ்சில போடுவாங்க அதுல நெஞ்சுசளி குறையும்.கீழ சில லிங்க்ஸ் இருக்கு அதுலேயும் பார்த்துக்கோங்க,

http://www.arusuvai.com/tamil/node/27065

http://www.arusuvai.com/tamil/node/25573

http://www.arusuvai.com/tamil/node/11675

நன்றி.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

நன்றி சுபி, நீங்க சொன்னத செய்து பார்க்கிறேன். நேற்று டாக்டர் ட கூட்டிட்டு போனேன் அவங்க லேசா இளப்பு இருக்குனு மருந்து தந்தாங்க. இளைப்புக்கு கைது மருந்து யாராவது சொல்லுங்கள்

//லேசா இளப்பு இருக்குனு மருந்து தந்தாங்க.// அதைக் கொடுத்துப் பார்க்கிறது தான் நல்லது.

//இளைப்புக்கு கைது மருந்து// இளைப்பு என்கிற‌ ஒரு வார்த்தைக்குள் பல‌ விஷயங்கள் அடங்கியிருக்கின்றன‌ ராலியா. எக்காரணத்தால் இளைப்பு வந்திருக்கிறது என்பதைக் கவனித்து உங்கள் டாக்டர் மருந்து கொடுத்திருப்பார். இங்கு கிடைக்கும் பதில்கள் அவரவர் அனுபவித்த‌ இளைப்பு பொறுத்ததாக‌ இருக்கும். அது உங்கள் குழந்தைக்குப் பொருந்துமா என்பது தெரியாதில்லையா?

‍- இமா க்றிஸ்

Thanku imma

மேலும் சில பதிவுகள்