இராமேஸ்வரம்

ஹாய் தொழிகளே

நாங்கள் (நான், கணவர், 4 வயது பையன்) இராமேஸ்வரத்திற்க்கு செல்ல‌ இருக்கிறோம். ஒரு நாள் தான் இராமேஸ்வரத்தில் பார்க்ககூடிய முக்கியமான‌ இடங்கள் சொல்லுங்கள். சிட்டிக்கு உள்ளாக‌ இருக்கும் இடங்கள். இப்பொழுது அங்கே இருக்கும் காலனிலை பற்றி இராமேஸ்வரத்தில் உள்ளவர்களோ அல்லது தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொன்னால் உதவியாக‌ இருக்கும்

நல்ல விசயம், ரொம்ப அழகான கோயில்
அங்க போக கொடுத்துவச்சிருக்கனும், பேமிலியோட 2 டைம் போயிருக்கேன்,
எனக்கு தெரிந்ததை சொல்றேன், நீங்க அமாவாசைக்கு போனீங்கன்னா ரொம்ப கூட்டமா இருக்கும், சாதரண நாள்னா அவ்ளோ கூட்டம் இருக்காது, ஒரு நாள்னாலும் ரூம் போடுறது தான் பெஸ்ட், முதல்ல கடல்ல குளிச்சிட்டு
நீங்க கோவில்ல இருக்க 22 தீர்த்தம்லேயும் நீராடினா நல்லது, அதுக்கு நீங்க வேற
ஒரு ட்ரஸ் அதிகமா வச்சிக்கோங்க, ரூம்லயே லக்கேஜ்லாம் வச்சிட்டு போயிடலாம், ஈர துணியோட சாமி கும்பிட விட மாட்டாங்க, கொஞ்சம் கூட்டமா தான் இருக்கும் கோவில், சாமி கும்பிட்ட பிறகு வெளில வந்தா நிறைய ஆட்டோ காரர்கள் இருப்பாங்க, அவங்க கிட்ட பக்கத்தில இருக்க கோவில்லாம் பார்க்கணும்னு சொன்னா காட்டுவாங்க, 500-1000க்குள்ளாதான் ஆகும், ராமர், சீதை, லட்சுமணர் தீர்த்தம், கோதண்ட ராமர் சன்னதி எல்லாம் கூட்டி போவாங்க வெயிட் பண்ணி திரும்பவும் கூட்டி வருவாங்க,
அவங்களே உங்கள தனுஷ்கோடி கூட்டி போவாங்க, ரொம்ப அழகான இடம் கடல் அவ்ளோ அழகா நீல போர்வை போத்தினது போல் சூப்பரா இருக்கும்,

அப்படியே அவங்க கிட்ட அப்துல்கலாம் ஐயா நினைவு மண்டபம் கூட்டி போக சொன்னா கூட்டிப்போவாங்க( நாங்க அவர் உயிரோட இருக்கும் போது அவர் வீடு பார்த்தோம்)

உங்க வேண்டப்பட்டவங்களுக்கு தீர்த்தம் கோவில்ல கிடைக்கும் வாங்கி வந்து கொடுக்கலாம்.

நன்றி.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

மேலும் சில பதிவுகள்