என் அக்கா குழந்தைக்கு 11 மாதம் ஆகிறது. தாய்ப்பால் தருகிறாள் .இட்லி ,சாதம் ,கஞ்சி போன்ற திட உணவும் தருகிறாள் .என் அக்கா மகன் சாப்பிட மறுக்கிறான் மிகவும் சிறிய அளவில் மட்டுமே சாப்பிடுகிறார் .அவருக்கு லாக்டோஜென் தரலாமா ? பற்கள் இன்னும் வெளிய வரவில்லை .ஈற்றில் பற்கள் தெரிகிறது வெளிய வர என்ன செய்வது .இன்னும் ஓரிரு நாட்களில் வெளிய வந்து விடும் இருந்தாலும் ஒரு சந்தேகம் .குழந்தை நடக்க எவ்வளவு மாதம் ஆகும் .
கீர்த்திகா அர்ஜுன்
//மிகவும் சிறிய அளவில் மட்டுமே சாப்பிடுகிறார்// மெதுவே சாப்பிட ஆரம்பித்துவிடுவார். யோசிக்காதீங்க.
//அவருக்கு லாக்டோஜென் தரலாமா ?// தரலாம்தான் ஆனால், இப்போது எதற்காக இந்தக் கேள்வி? அதைவிட... உணவை மாற்றிக் கொடுத்துப் பார்க்கலாமே!
//ஈற்றில் பற்கள் தெரிகிறது வெளிய வர என்ன செய்வது// ஒன்றும் செய்யத் தேவையில்லை. அது தானாகவே வரும். வராமல் அடம் பிடித்து அதனால் குழந்தைக்குத் தொந்தரவாக இருந்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினால் அல்லது உடம்புக்கு முடியாமல் போனால் மட்டும் டாக்டர்ட்ட கூட்டிப் போங்க.
சிலர் வீட்டில் நெல்லால எல்லாம் முரசைக் கீறி விடுவாங்க. அது வல வெளியே வராமல் உள்ளேயே தங்கப் பாத்தால் மட்டும் தான் தேவை. விளக்கமில்லாமல் கீறப் போய் குழந்தையைத் தொந்தரவுக்குள்ளாக்க வேணாம்.
//இன்னும் ஓரிரு நாட்களில் வெளிய வந்து விடும் இருந்தாலும் ஒரு சந்தேகம்// அது தானக வரும்.
//குழந்தை நடக்க எவ்வளவு மாதம் ஆகும் .// இனி எப்போ வேண்டுமானாலும் நடப்பார். சில குழந்தைகள் நடக்க ஒன்றரை இரண்டு வயதும் ஆவது உண்டு.
- இமா க்றிஸ்
இமா மேடம்
நன்றி மேடம். வாகர் மூலம் வேகமாக நடக்கிறான் தனியாக நடக்க வைத்தால் தடுமாறி விழுந்து எழுந்து நடக்கிறான் .ஆனால் மிக வேகமாக நடக்கிறான் .குறும்புகள் இக்கால குழந்தைகளிடம் அதிகம் உள்ளது.
பிழை பொறுப்பீர்
:) கடந்த பதிவு... தூக்கக் கலக்கத்தில் தட்டியது; நிறைய எழுத்துப் பிழைகளோடு கண்ணில் படுகிறது. இனி மாற்ற முடியாது. படிக்கிறவர்கள் திருத்திப் படிக்கட்டும். ;D
~~~~~~~~
//தனியாக நடக்க வைத்தால் தடுமாறி விழுந்து எழுந்து நடக்கிறான்// பதினொரு மாத்ததிற்கு சரியான வளர்ச்சிதான் இருக்கிறார். யோசிக்காதீங்க.
//குறும்புகள்// :-) ரசிப்பதை ரசிக்க வேண்டும்; சிலதை ஆரம்பத்திலேயே மாற்றிவிடுவது நல்லது. எதை விடலாம் எதை மாற்றுவது என்பதை இப்போதே முடிவு செய்யாவிட்டால் பிறகு திருத்துவது சிரமமாக இருக்கும், பெரியவர்களுக்கு அல்ல - சின்னவருக்கு.
- இமா க்றிஸ்
குழந்தை பல் முளைக்க வில்லை
எங்கள் மகளுக்கு 12 வது மாதம் தொடங்கி 6 நாட்கள் அகிறது. எங்கள் குழந்தை பல் முளைக்க வில்லை. ஆலோசனை கூறவும்.
பல் முளைக்க
முளைக்க வைப்பதற்கு என்று எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். எல்லோருக்கும் நிச்சயம் முளைக்கும்; முளைக்காமலிருப்பதில்லை. அதனால் யோசிக்க வேண்டாம். ஒரு வயதுக் குழந்தையா? உங்கள் மனதுக்கு ஆறுதலாக இருக்க ஒருமுறை மருத்துவரிடம் விசாரித்துப் பாருங்கள். ஆனால் இது யோசிக்க வேண்டிய விடயம் இல்லை. சில குழந்தைகளுக்கு இப்படி இருப்பது உண்டு தான். உங்களுக்காகத் தேடினேன். சில குழந்தைகளுக்கு ஒன்றரை வயது வரை கூட பல் வராமலிருந்திருக்கிறதாகத் தெரிகிறது. எப்படி சில குழந்தைகள் முதற்பற்களுடன் பிறக்கின்றனவோ அது போல இதுவும் நார்மல் என்பதாகத் தான் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
- இமா க்றிஸ்