உதவுங்கள் தாய்மார்களே.....

நான் தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளேன்.. முதல் குழந்தைக்கு 4 வயதாகிற்து..

http://www.arusuvai.com/tamil/node/27402

இது எனது பதிவு தான், முதல் குழந்தை கருவுற்று இருந்த போது..

என்னுடைய மார்பகம் மிகவும் சிறியதாகவே உள்ளது... காம்பும் வளரவே இல்லை... இந்த நிலையில் என்னால் தாய் பால் கொடுக்க முடியுமா... இல்லை இதற்கு பிறகு வளர வாய்ப்புள்ளதா?
மனம் இதை நினைத்தே வேதனை கொள்கிறது... நான் என்ன செய்ய வேண்டும்...

மறுபடியும் இது தான் எனது பயமாக உள்ளது..

//மார்பகம் மிகவும் சிறியதாகவே உள்ளது.// இது பால்சுரப்புக்கு இடையூறாக‌ இராது. //காம்பும் வளரவே இல்லை.// இதுவும் பிரச்சினையாக‌ இராது. உங்களுக்குக் குறிப்பாக‌ என்ன‌ பிரச்சினை இருந்தது சென்ற‌ தடவை?

//இந்த நிலையில் என்னால் தாய் பால் கொடுக்க முடியுமா.// முடிய‌ வேண்டும். //மனம் இதை நினைத்தே வேதனை கொள்கிறது.// :‍) அடுத்த‌ இழையிலிருந்து காப்பி பேஸ்ட் பண்ணி இருக்கீங்களா? :‍) //நான் என்ன செய்ய வேண்டும்.// போன‌ தடவையும் சகோதரிகள் தங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லி உதை இருப்பார்கள். அதற்கு மேலும் பிரச்சினையாக‌ இருந்திருக்கிறது என்றால்... உங்களை இப்போது கவனிக்கும் மருத்துவரிடம் அபிப்பிராய‌ கேட்டுப் பார்க்கலாமல்லவா? //மறுபடியும் இது தான் எனது பயமாக உள்ளது.// பயத்தை வைத்துக் கொண்டிராதீங்க‌. அடுத்த‌ விசிட்டில் விசாரிச்சு வைங்க‌. அவங்க‌ நிச்சயம் உதவுவாங்க‌.

‍- இமா க்றிஸ்

எனக்கும் 8வது மாதம்,2வது குழந்தை.எனக்கு தெரிந்தவரை மார்பகத்தின் அளவை பொறுத்து பால் சுரப்பதில்லை.சிறிய மார்பகம் உள்ளவர்களுக்கு நன்றாக பால் இருப்பதையும்,பெரிய அளவினை உடையவர்களுக்கு குறைவாகவும் இருப்பதையும் கேட்டிருக்கேன்.அதனால் வீணாக கவலைபட வேண்டாம்.மார்பகங்களை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்

true love never fail

நன்றி அம்மா... மருத்துவரிடம் கேட்டேன் அதற்கு அவர், மார்பகம் அளவு சிறியதாக இருப்பதால் பால் சுரக்கவில்லை என்கிறார்...
சென்ற முறையும் உங்களுடைய பதிலை பெற்றேன்..
Lactogen பற்றி கூறியது ஆறுதல் அளித்தது...
இந்த முறை தாய் பால் கொடுக்க வேண்டும் என்பதாலே இந்த இழை...

நன்றி ரேவதி...

//மார்பகம் அளவு சிறியதாக இருப்பதால் பால் சுரக்கவில்லை என்கிறார்.// என்பதை அப்படியே எடுத்துக் கொள்ள‌ என்னால் முடியவில்லை. இப்படி நான் கேள்விப்பட்டது இல்லை. ஹோர்மோன் சுரப்புகள் காரணமாக‌ இருக்கலாம்; தாயின் மனநிலை காரணமாக‌ இருக்கலாம்; தாய் எடுக்கும் உணவு காரணமாக‌ இருக்கலாம்; தாயின் தனிப்பட்ட‌ உடற்தொழிற்பாடு / பரம்பரை காரணமாக‌ இருக்கலாம்.

மார்பின் அளவு... சந்தேகமாகத்தான் இருக்கிறது. குழந்தை பிறந்ததும் பால் சுரக்க‌ ஆரம்பித்தே ஆகும். ஆரம்பத்தில் அளவு குறைவாகத் தான் இருக்கும். மெதுவே சுரக்கும் அளவு கூட‌ வேண்டும். மார்பகம் சின்னதாக‌ இருந்தால் கொஞ்சமாகவவது சுரக்க‌ வேண்டாமா! //அளவு சிறியதாக இருப்பதால் பால் சுரக்கவில்லை// என்னும் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதாக‌ இல்லை.

அடிக்கடி குறந்த‌ நேரம் பாலூட்டுவது பயன் கொடுக்கக் கூடும். நீங்கள் இப்போதே வேறு மருத்துவரொருவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது என்று சொல்லத் தோன்றுகிறது.
~~~~~~~~~
நீங்கள் கர்ப்பமாக‌ இல்லாமலிருந்து அழகைக் கூட்டுவதற்காக‌ மார்பின் அளவைப் பெரிதாக்க‌ விரும்பினால் புஷ் அப்ஸ் செய்யலாம். வேறு சில‌ பயிற்சிகளும் இருக்கின்றன‌. உங்கள் நிலையில் அவை பயனில்லை.

அப்படி மார்பின் அளவைப் பெரிதாக்கினாலும் சுரப்பிகளில் மாற்றங்கள் நிகழப் போவது இல்லை. அவை தசைகளை மட்டும் பலப்படுத்தி பெரிதாக்கும்.

‍- இமா க்றிஸ்

இந்த முறை பால் சுரக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்....

மேலும் சில பதிவுகள்