2 1/2 மாத குழந்தை...உதவுங்கள்

என் மகனுக்கு 2 1/2 மாதம் ஆகின்றது..அவன் படுக்கும் போது இடது பக்கமாக தலையை திருப்பி கொள்கிறான்..கீழே படுக்க போட்டாலும்,தொட்டிலில் போட்டாலும் இடது பக்கமாக படுக்கிறான்..இதனால் தலை நிற்பதில் பிரச்சனை வருமா??

இதனால் பிரச்சினை ஏதும் வராது.. ஆனால் குழந்தை தலையின் வடிவம் இடது புறம் அமுங்கி காணப்படும். தெளிவாக சொல்ல தெரியவில்லை..
இரண்டு நாள் குழந்தை உறங்கியதும் வலப்புறம் திருப்பி விடுங்கள்..
தொடர்ந்து செய்தால் குழந்தை இருபுறமும் தூங்க முடியும்..

//கீழே படுக்க போட்டாலும்,தொட்டிலில் போட்டாலும்// ம்... மறுபக்கம் திருப்பிப் போட்டுப் பார்த்தீர்களா? தலை இருக்கும் பக்கத்தில் கால் வருவது போல் போட்டுப் பாருங்கள். அபோதும் இப்படியே தூங்குகிறார் என்றால்... ஒரு தடவை மருத்துவரிடம் பேசிப் பார்க்கலாம். பிரச்சினை எதுவும் இராது. இருந்தாலும் சந்தேகத்தை வைத்திருப்பானேன். இப்படித் தூங்குவதால் பிரச்சினை வராது. பிரச்சினை இருப்பதால்தான் இப்படித் தூங்குகிறாரா என்பதை மட்டும் விசாரித்துக் கொள்ளுங்கள். பெரும்பாலும் ஒன்றும் இராது. யோசிக்க‌ வேண்டாம்.

இடது பக்கம் சின்னதாக‌ ஒரு தலையணை வைத்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

நீங்கள் இருவரும் சொன்னது போல் இடம் மாற்றியும்,குட்டி தலையனை வைச்சு பார்த்தேன் கொஞ்சம் முன்னேற்றம் உள்ளது.நன்றி இமா அக்கா & இந்து sis..

bons nu எதும் சொட்டு மருந்து இருக்கா....அது Babies கு எத்தனை மாதத்தில இருந்து குடுக்கனும்.Polydrops nu நான் ஒரு சொட்டு மருந்து கொடுக்குறேன்.அதோட இத Continue பண்ணலாமா.45 Days ஊசி போட்டா Fever வருமா....45 Days ஊசி போட்டப்ரம் எப்டி பாத்துக்கனும்....

Jaisripriya

3 மாத குழந்தைக்கு சளி பிடித்துஇருந்தது மருத்துவர் alex என்ற syrub கொடுத்தரர் .இது மோஷன் வழி சளி வெளியேற்றுமா .அப்படி வெளியேறினால் normalதானா தோழிகளே

இது மோஷன் வழி சளி வெளியேற்றுமா .// ஆம். குழந்தைகளுக்கு மலம், சிறுநீர் வழியாக சளி கழியும்..

Kulanthai ku sali pdichiruntha thengai ennai nala sodu
Panitu aranathum mookula sotu sota vidunga, romba
Nenchi sali iruntha thengai ennai ah sodu panitu athula
Murunga poo podunga, poo vedichathuku apram mudipondu
Thali or ponnaku poondu thali potu nala sodanathum
Vadikati oru paladai kulanthai ku vaila porumaiya
Kodunga verum vaithula morning timela,kandipa sari
Agidum,and baby vaithula seempaal kati irunthalum
Velila vanthudum,village side la kidaikum, nanga doctor kita sali
Marunthu ketathuku kodukala,athigama varupothu
Pakalam nu solranga, but enga amma en paiyan ku sila timecold
Pdicha ipadi than seiranga,udane sari agidum,

உங்கள் பதிவு தமிழில் இருந்தால் எனக்கும் உதவும்.. புரியவில்லை தெளிவாக..

கண்டிப்பா fever வரும் sis.. fever வந்தா தான் மருந்து வேலை செய்துனு அர்த்தம்.. Fever Ku drops தருவாங்க.. கையில்,தொடையில் போடுவாங்க..காலை தூக்க முடியாது..வலி கண்டிப்பா இருக்கும்..3 days குளிக்க வைக்க கூடாது..inj போட்ட 3 days தூக்கத்தை நீங்க மறந்துருங்க..

நன்றி தோழிகளே .

மேலும் சில பதிவுகள்