கம்பு சாதம் செய்வது எப்படி என்று சொல்ல முடியுமா?

கம்பு சாதம் செய்வது எப்படி என்று சொல்ல முடியுமா?

கூட்டாஞ்சோறு பகுதியில் கம்பு சாதம் குறிப்பு தருகிறேன். பார்க்கவும். நன்றி.

அன்புடன்,
செல்வி.

நன்கு தீட்டிய கம்பை எடுத்து உமியை நீக்கி புடைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை ரவை போல இடித்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அரை கிலோ கம்பு ரவை என்றால் ஒரு லிட்டர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொத்திக்க விட வேண்டும். பிறகு கம்பு ரவை, ஒரு தம்ளர் கெட்டியான மோர், தேவையான உப்பு சேர்த்து மூடி வைத்து, குறைந்த தீயில் சாதம் களி போல வரும்வரை சமைக்கவும். கெட்டித் தயிர், கோழிக்குழம்பு, தக்காளிச் சட்னி போன்றவை இதற்கு சுவையான பக்க உணவுகள்.

மேலும் சில பதிவுகள்