last month 5 yasmin tablet saapten, indha month periods innum varala

Hi sisters and Imma Amma,

Enaku mrg aagi 3yrs aagadhu. Enaku endometriosis cyst iruku(grade3). So doctor IVF ku suggest panni, yasmin tablet 30days saapda sonnaanga. Last month only 5 tablet matum daan saapten (from 3rd day of my period).

Last month period date 19th December. But indha month periods innum varala. Veetla nethu pregnancy test pannen, negative nu vandhuchu.

Yasmin tablet saaptadhaala, periods delay aagudhanu theriyala. Yaarukaavadhu therinja sollunga pls..

Enga veetla ellarum, naan conceive aagi irukalaamnu romba edhirpaarpoda irukaanga. Romba kashtama iruku.

//yasmin tablet 30days saapda sonnaanga. Last month only 5 tablet matum daan saapten (from 3rd day of my period).// சரியாகப் புரியவில்லை.

நீங்க‌ தப்பு பண்றீங்க‌. ஒன்றில் சிகிச்சைக்குப் போகாமல் தானாகவே கர்ப்பமாகட்டும் என்று பொறுமையாகக் காத்திருக்க‌ வேண்டும். அல்லது ஒழுங்காக‌ கொடுத்த‌ மருந்தை எடுக்க‌ வேண்டும். //IVF ku suggest panni// IVF வேண்டாம் என்று நினைத்திருந்தால் மாத்திரையை எடுக்காமலே விட்டிருக்கலாம். 5 மாத்திரை மட்டும் எதுக்கு எடுத்தீங்க‌? ;) கன்சல்ட்டிங்குக்கு வீணா பணம் கொடுத்திருப்பீங்க‌. இன்னொருத்தரைக் கூட‌ துணைக்கு அழைச்சுட்டுப் போயிருப்பீங்க‌. அவங்க‌ நேரமும் வீண் இல்லையா! பாவம் அவங்க‌. உங்க‌ உடம்பும் பாவம். நீங்க‌ எதை விரும்புறீங்க‌ என்று புரியாமல் குழம்பிப் போயிருக்கும். :‍)

//Yasmin tablet saaptadhaala, periods delay aagudhanu theriyala.// நீங்கதான் ஒழுங்கா சாப்பிடவே இல்லையே!

//Enga veetla ellarum, naan conceive aagi irukalaamnu romba edhirpaarpoda irukaanga. Romba kashtama iruku.// சரி, அதற்காக‌ இப்படி உங்க‌ இஷ்ட‌த்துக்கு வேண்டாத‌ வேலை செய்வீங்களா? இம்முறை நீங்கள் கர்ப்பமாக‌ இருக்கலாம். இல்லாமலும் இருக்கக் கூடும். இருந்தால் சந்தோஷப்படுங்க‌. எடுத்த‌ 5 மாத்திரைகளும் பிரச்சினை இல்லாதவை. குழந்தைக்குப் பாதிப்பு எதுவும் இராது.

இம்முறை கர்ப்பமாகவில்லை என்றால் ஒன்றில் அமைதியாகக் காத்திருங்கள். அல்லது ஒழுங்காக‌ டாக்டர் சொல்வது அனைத்தையும் பின்பற்றுங்கள். ஆரம்பித்துவிட்டு பாதியில் குழப்ப‌ வேண்டாம்.

மீதி 25 மாத்திரைகளையும் எடுக்க‌ வேண்டாம். வீசிவிடுவது நல்லது. திரும்ப‌ அதே மாத்திரையை எடுப்பதானால் ஒரு முழு பாக்கட் எடுக்க‌ வேண்டியிருக்கும். இடை நடுவில் நிறுத்தினால் நிறுத்திய‌ ஓரிரண்டு நாட்களில் பீரியட்ஸ் ஆகலாம். பிறகு உங்கள் சுழற்சி வட்டம் மாறிவிடும். நீங்கள் அந்த‌ அட்டையிலுள்ள‌ மாத்திரைகளைத் தினம் தவறாமல் எடுத்தால், அந்த‌ மாதம் கர்ப்பமாக‌ மாட்டீர்கள். அவர்கள் தொடர்ந்து வரும் சிகிச்சைக்கு உங்களைத் தயார்ப்படுத்தவே மாத்திரைகளைக் கொடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

Ivf pannanumnu decide panni daan tablet eduka aarambichen. But Husbandoda grandma thavarittanga ma. Adaan sariya eduka mudiyala. thanks for ur reply amma

உங்கள் உடல்; உங்கள் பிரச்சினை.

வீட்டில் துயரம் வந்தாலும் திருமணம் வந்தாலும் சாப்பாட்டையும் மருந்தையும் தவ‌றவிடக் கூடாது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்