எனக்கு குழந்தை பிறந்து 7 நாட்கள் ஆகின்றது. குழந்தை பிறந்ததில் இருந்து ஆசனவாயில் எரிச்சலாக உள்ளது. உட்கார்ந்து குழந்தைக்கு பால் கூட கொடுக்க முடியவில்லை. எரிச்சல் அதிகமாக உள்ளது. யாரவது தயவுசெய்து எதாவது மருந்து கூறுங்கள்.

Divya
எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது.டாக்டர் shield oinment கொடுத்தாங்க apply பண்ணுனா pain குறையும்
திவ்யா
டாக்டர்ட்ட கேளுங்க. ஆயின்மண்ட் கொடுப்பாங்க.
அதோடு நீங்கள் செய்யக் கூடியது... காரமான உணவுகளை, பிரச்சினை சரியாகும் வரை தவிருங்கள். மலச்சிக்கல் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதே போல லூஸ் மோஷன் வராமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.
//உட்கார்ந்து குழந்தைக்கு பால் கூட கொடுக்க முடியவில்லை.// நீங்கள் கம்ஃபர்டபிள் ஆக இருந்தால்தான் குழந்தைக்குப் பாலூட்ட முடியும். டோனட் வடிவில் குஷன் கிடைக்கும். நீங்களே கூட தைத்து எடுக்கலாம். அல்லது ப்ளாஸ்டிக்கில் கிடைக்கும் மலிவு விலை காற்று ஊதும் ஸ்விம்மிங் டயர் ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் எங்கு உட்கார்ந்தாலும் போட்டுக் கொள்ளலாம். கொஞ்ச நாட்கள் தான் இந்தப் பிரச்சினை இருக்கும். சீக்கிரம் சரியாகிரும்.
- இமா க்றிஸ்
நன்றி மேடம். பால் கொடுப்பதால்
நன்றி மேடம். பால் கொடுப்பதால் மலச்சிக்கல் வராமல் இருக்க என்ன மாரி உணவு சாப்பிட வேண்டும்.