குழந்தையின் கண்ணில் நீர் வருகிறது

10/மாத குழந்தை. இடது கண்ணில் இருந்து மட்டும் நீர் வந்து கொண்டு இருக்கிறது.6 வது மாதத்தில் இருந்து, 2 நாட்கள் வருகிறது அப்புறம் 5 நாள் கழித்து 1 நாள் வருகிறது. அப்புறம் ஒரு மாதம் வருவதில்லை. திடீரென்று வருகிறது அப்புறம் வருவதில்லை.

நாள் முழுவதும் வருவதில்லை. நாளைக்கு 2 முறை அல்லது ஒருமு.

ஆலோசனை கூறவும்.

6 month la இருந்து னு சொலறீங்க? இன்னும் டாக்டர் ட செக் பண்ணலை யா?VR??...

Hope is necessary in every condition:)

நீங்க‌ ஒரு குழந்தை மருத்துவரைப் போய்ப் பார்க்கிறதுதான் நல்லது.

‍- இமா க்றிஸ்

நன்றி. பாப்பா கண்ணில் முடி விழுவதினால் கூட இருக்கலாம் என்று நினைத்தேன். உடல் சூடு என்று சிலர் கூறுகின்றனர். அடுத்தவாரம் புதன் கிழமையன்று மருத்துவரை சந்திக்க உள்ளோம்.

மருத்துவரை சென்று பார்த்தோம். எப்பொழுதாவது வருவது சிக்கல் இல்லை. அப்படி நீர் வர கூடாது. தொடந்து வந்தால் சிக்கல் உள்ளது என்று அர்த்தம் என கூறினார்.

சிகிச்சை:

மூக்கை நீவி விட சொன்னார். (புருவத்திற்க்கு கீழ் உள்ள மூக்கு).

உங்கள் கேள்வியை முதலில் படித்தபோது என் மனக்கண்ணில் வந்தவர் என் குட்டிப் பெண் (முயல்) ட்ரேஸி. :‍) அடிக்கடி ஒற்றைக் கண்ணிலிருந்து நீர் வடியும். அரிக்கும் போல‌, கண்ணைக் கசக்கி வைத்து சிவந்து போயிருப்பார். சில‌ சமயம் நகத்தால் பிய்த்து வைத்துவிடுவார். சுரக்கும் கண்ணீர் மூக்கினுள் இறங்கும் வழியில் அடைப்பு இருக்கலாம் எனத் தெரிந்தது. மசாஜிங் கொடுக்க‌ ஆரம்பித்த‌ பிறகு காணோம். நீங்க‌ சீரியஸாகக் கேட்கும் கேள்விக்குப் பதிலாக‌ அப்போது இதைச் சொல்லத் தயக்கமாக‌ இருந்தது.

//புருவத்திற்குக் கீழ் உள்ள மூக்கு// உங்கள் பதிலில் எனக்கும் தெளிவு கிடைத்திருக்கிறது. கேள்வி கேட்பவர்களில் சிலர்தான் திரும்ப‌ வந்து தங்களுக்குக் கிடைத்த‌ சிகிச்சை அனுபவங்கள் பற்றிச் சொல்வார்கள். மிக்க‌ நன்றி சகோதரி.

‍- இமா க்றிஸ்

மசாஜ் பண்ணீங்களா?இப்போது பாப்பாக்கு எப்படி இருக்கு?...

Hope is necessary in every condition:)

நாம் உடனே பலன் எதிர்பார்பது தவறு. ஒரு மாதம் கழித்து பதிவிடுகிறேன். நன்றி.

நீங்கள் சொல்வது உண்மை சகோதரி. எந்த‌ விடயமானாலும் விளைவு தெரிய‌ நாட்கள் எடுக்கும். சட்டென்று ஓரிரண்டு நாட்களில் மாற்றம் தெரிவதில்லை. நம்பிக்கையோடு தொடருங்கள்.

ஆனால் ஒரு மாதம் கழிந்தபின்னும் மாற்றம் தெரியவில்லை என்று தோன்றினால் தயங்காமல் மீண்டும் மருத்துவரை அணுகுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்